என் சமோசாவுக்கு, பவுலும் ஸ்பூனும் தர கடைக்காரர் மறுக்கிறார் என முதலமைச்சர் உதவி எண்ணிற்கு புகார் அளித்துள்ளார் மத்திய பிரதேசத்தில் புந்தேல்கண்ட் என்ற இடத்தில் ஒருவர்.
மக்களின் பிரச்னைகளை தீர்க்க, காவல்துறை, நீதிமன்றம் போன்றவை இருப்பது போல, முதலமைச்சர் உதவி மையமும் மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. இது முதலமைச்சர் நேரடியாக மக்களோடு தொடர்பிலிருந்துகொண்டு, அவர்களின் தேவைகளை கேட்டறிந்துகொள்ளும் ஒரு முயற்சியாகும்.
இந்த உதவி எண்களுக்கு சில சமயங்களில் யாரும் எதிர்பாராத விதங்களில் வித்தியாசமான புகார்கள் வரும். அப்படி தான் மத்தியப் பிரதேசத்திலிருந்தும் ஒரு புகார் வந்திருக்கிறது. மத்திய பிரதேசத்தில் சத்தர்பூர் என்ற இடத்தில் ஒரு கடையில் சமோசா வாங்கப்பட்டுள்ளது.
ஆனால், அந்த சமோசாவிற்கு கடையில் ஸ்பூனும், பவுலும் தரவில்லை என கூறப்படுகிறது. இதனால் அம்மாநிலத்தின் முதலமைச்சர் உதவி எண்ணான 181க்கு அழைத்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகாரை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் உதவி மையம், 5 நாட்கள் கழித்து புகாரை close செய்துள்ளது. புகாரைப்பற்றி சமோசா கடைக்காரரிடம் கேட்டபோது, ஒரு வேளை அந்த சமயத்தில் பவுலும் ஸ்பூனும் தீர்ந்து போயிருக்கும். அதனால் கொடுத்திருக்கமாட்டார்கள் என தெரிவித்ததாக நியூஸ் டைம்ஸ் எக்ஸ்பிரஸ் தளம் கூறியுள்ளது.
இதில் வேடிக்கை என்னவென்றால், புகாரை அளித்ததாக கருதப்பட்ட கோமல் லகேரா என்ற நபர் முதலமைச்சர் உதவி மையத்தை நிஜத்தில் நாடவில்லை. அவரது சக ஊழியர்கள் கோமலின் தொலைப்பேசி எண்ணிலிருந்து அழைத்து புகார் அளித்துள்ளனர். இதனால் தொடர்ந்து உதவி மையத்திலிருந்து தனக்கு அழைப்புகள் வந்துகொண்டிருக்கிறது என கோமல் வருத்தம் தெரிவித்திருந்தார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust