Google : இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட சுற்றுலா தலங்கள் இவைதான்! இங்கு என்ன சிறப்பு?

காஷ்மீர் முதல் வியட்நாம் வரை இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட சுற்றுலாத் தலங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
Google : இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட சுற்றுலா தலங்கள் என்னென்ன தெரியுமா?
Google : இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட சுற்றுலா தலங்கள் என்னென்ன தெரியுமா?Canva
Published on

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு 2023 ஆம் ஆண்டில் சுற்றுலாத் துறை மேம்பட்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

சமீபத்திய அறிக்கை, இந்த ஆண்டின் மிகவும் கூகுள் செய்யப்பட்ட சுற்றுலாத் தலங்களை வெளியிட்டது. காஷ்மீர் முதல் வியட்நாம் வரை இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட சுற்றுலாத் தலங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

வியட்நாம்

வியட்நாம் அதன் வளமான வரலாறு, செழிப்பான கலாச்சாரம் மற்றும் ஆச்சரியமூட்டும் இயற்கை நிலப்பரப்புகளுடன், பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ஹனோயின் பரபரப்பான தெருக்களில் இருந்து ஹா லாங் பேவின் அமைதி மற்றும் ஹோய் ஆனின் வரலாற்று வசீகரம் வரை பல்வேறு அனுபவங்களை வியட்நாம் வழங்குகிறது.

கோவா

இரண்டாவது இடத்தைப் பிடித்தது கோவா. பரந்து விரிந்த கடற்கரைகள், அமைதியான சூழ்நிலைக்கு பெயர் பெற்றது கோவா. இது உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளை அழைக்கிறது.

பழைய கோவாவின் செழுமையான வரலாற்றை அதன் பழைய தேவாலயங்கள் மூலம் கண்டறியவும். கோவாவின் நறுமண மசாலாப் பொருட்களைப் பற்றி தெரிந்துக்கொள்ள, மசாலாத் தோட்டங்களுக்கு செல்லவும். கோவா கடற்கரையில் டால்பின்களைப் பார்ப்பதற்காக படகுப் பயணத்தை மேற்கொள்ளுங்கள்.

பாலி

பட்டியலில் அடுத்ததாக பாலி, இந்தோனேசியாவின் மையத்தில் அமைந்துள்ள மதி மயக்கும் தீவாகும்.

ஆன்மீக புத்துணர்ச்சியை நாடினாலும் சரி அல்லது சாகசத்தை விரும்பினாலும் சரி பாலி ஒரு சிறந்த இடம்.

கலாச்சார செழுமை மற்றும் இயற்கை அழகின் பயணத்தை அனுபவிக்க சுற்றுலாப் பயணிகளை பாலி அழைக்கிறது.

குரங்கு வன சரணாலயம், உபுட் அரண்மனைக்கு சென்று அதனை ஆராயுங்கள். குடா கடற்கரையில் ஓய்வெடுக்கலாம்.

பிரமிக்க வைக்கும் கட்டிடக்கலை மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்திற்கு பெயர் பெற்ற தனா லோட் டெம்பே மற்றும் தீர்தா எம்புல் உள்ளிட்ட புனிதமான கோயில்களுக்குச் செல்லுங்கள்.

இலங்கை

இந்தப் பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது. ஆசியாவின் வைரம் எனப்படுவதற்கு முழுத் தகுதி வாய்ந்தது இந்த தீவு நாடு. அங்குள்ள தேயிலைத் தோட்டங்கள், அடர்ந்த காடுகள், மதிமயக்கும் நீர்வீழ்ச்சிகள், சிறிய தீவுகள், வேலைப்பாடுகள் மிகுந்த புத்த கோயில்கள் என நம்மை ஆச்சரியத்தில் பல இடங்கள் அங்கு இருக்கின்றன.

தாய்லாந்து

தாய்லாந்து ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. தாய்லாந்து ஆசியாவில் உள்ள பிரபலமான சுற்றுலாத்தலமாகும். இங்குள்ள பழமை வாய்ந்த நினைவுச் சின்னங்களும் பிரம்மாண்டமான புத்த கோவில்களும் நிச்சயம் பார்க்க வேண்டிய ஒன்று. கடற்கரைகளும் காடுகளும் கூட நம்மை ஆச்சரியப்படுத்தும்.

காஷ்மீர்

இந்தியாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள காஷ்மீர் பட்டியலில் ஆறாவது இடத்தைப் பெற்றுள்ளது. பசுமையான புல்வெளிகள், பள்ளத்தாக்குகள், அடர்ந்த காடுகள், அற்புதமான கோயில்கள் என காஷ்மீரில் பார்க்க பல இடங்கள் உள்ளன.

கூர்க்

கர்நாடகாவில் பனி மூடிய மலைப்பகுதியான கூர்க் ஏழாவது இடத்தைப் பிடித்தது. 'இந்தியாவின் ஸ்காட்லாந்து' என்று அழைக்கப்படும் கூர்க், அதன் பசுமையான காபி தோட்டங்கள், அருவிகள் மற்றும் பச்சை நிலப்பரப்புகளால் பயணிகளை கவர்கிறது

Google : இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட சுற்றுலா தலங்கள் என்னென்ன தெரியுமா?
Malaysia: இந்தியர்களுக்கு விசா தேவையில்லை - மலேசியாவில் என்னென்ன பார்க்கலாம்?

அந்தமான் நிக்கோபார் தீவுகள்

வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகள், இந்தப் பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ளது. இந்த தீவு அதன் இயற்கை அழகு மற்றும் பல்வேறு கடல்வாழ் உயிரினங்களுக்கு பெயர் பெற்றது.

இத்தாலி

பட்டியலில் இத்தாலி ஒன்பதாவது இடத்தில் உள்ளது. ஐரோப்பாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள இத்தாலிக்கு செல்வது ஒவ்வொரு பயணிகளின் கனவு. வளமான வரலாறு, அற்புதமான கலை முதல் சுவையான உணவு வகைகள் வரை, நாடு பல்வேறு அனுபவங்களை வழங்குகிறது.

Albinen, Switzerland
Albinen, Switzerland

சுவிட்சர்லாந்து

பட்டியலில் சுவிச்சர்லாந்து பத்தாவது இடத்தில் உள்ளது.

சுவிச்சர்லாந்து நம்மால் முக்கியமான ஹனிமூன் ஸ்பாட்டாக மட்டுமே அறியப்பட்டுள்ளது. இந்த நாட்டில் வாழ வேண்டுமென்பது எந்த நாட்டில் வாழ்பவரும் விரும்பக்கூடிய ஒன்றாக இருக்கும்.

அழகிய ஏரிகள், எளிமையான கிராமங்கள், மலைகள், பள்ளத்தாக்குகள் என கண்களுக்கு விருந்தாகும் இந்த நாடு ஐரோப்பாவின் மொத்த அழகையும் கொண்டுள்ளது எனலாம்.

Google : இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட சுற்றுலா தலங்கள் என்னென்ன தெரியுமா?
Rajasthan : சீன பெருஞ்சுவரை போல இந்தியாவில் இருக்கும் பெருஞ்சுவர் பற்றி தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com