உலக அதிசயங்களில் ஒன்றாக கூறப்படும் சீன பெருஞ்சுவரை பற்றி நமக்கு தெரியும் ஆனால் இந்தியாவின் மிக நீளமான பெருஞ்சுவர் பற்றி தெரியுமா ?
இந்தியாவின் பெரும் சுவர் என்று அழைக்கப்படும் இது ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தில் உள்ளது. ஆரவல்லி மலைதொடர்களின் பகுதியில் இருக்கும் கும்பல்கர்க் கோட்டையினை சுற்றி அமைந்துள்ள இந்த பெரும் சுவர் 15 ஆம் நூற்றாண்டில் மோவார் ராஜ்ஜியத்தின் அரசராக இருந்த ராணா கும்பாவால் கட்டப்பட்டது. இது கடல் மட்டத்தில் இருந்து 1100 மீ உயரத்தில் அமைந்துள்ளது .
கும்பல்கர்க் கோட்டை கோட்டையினை பாதுகாக்கும் விதமாக கட்டப்பட்ட இந்த சுவர் சுமார் 36 கி.மீ பகுதியை உள்ளடக்கி மிக பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.
இந்த கோட்டைக்கு செல்வதற்கு 7 நுழைவு வாயில்கள் உள்ளது. இதில் ஏதேனும் ஒரு வழியாக சென்று கோட்டையின் மேற்புறத்தை அடைந்தால் ஆரவல்லி மலைத்தொடரின் மொத்த அழகையும் ரசிக்கலாம்.
இந்த கோட்டையினுள் 300 இந்து கோவில்களும் 60 ஜெயின் கோயில்களும் உள்ளன. இங்கு 1444 தூண்கள் உள்ளது. முதன் முறையாக இந்த தூண்களை பார்க்கின்றீர்கள் என்றால் உங்களை குழப்பமடைய செய்யுமாம்.
அதாவது நீங்கள் எண்ணும் போது தூண்களின் எண்ணிக்கை குறைவது போலவும் திடீரென அதிகரிப்பது போலவும் இருக்குமாம்.
இந்த கோட்டையின் ஒரு பகுதியில் சரணாலயம் உள்ளது. இங்கு இருக்கும் வனவிலங்குகளும், வண்ண மயில் கூட்டமும் காண்போரை வியப்பில் ஆழ்த்தும்.
இயற்கை வளங்கள், வன விலங்குகள் மட்டும் தானா என்றால்... மர்ம பகுதிகளும் இங்கு இருக்கின்றன. இந்த பகுதியில் மர்மமாகவும் ஆச்சரியப்படுத்தும் விதமாகவும் ஒரு மரம் உள்ளது அதனை பேய் மரம் என்று மக்கள் கூறுகின்றனர். காரணம் இந்த மரம் பார்க்க வெண்மையாக இருக்கும், ஆனால் இரவு நேரத்தில் அதில் இருந்து ஒளி வீசுமாம், அதனால் மக்கள் பேய் மரம் என்று கூறுகின்றனர்.
தற்போது சுற்றுலா பயணிக்களுக்காக பல சிறப்பு வசதிகள் உள்ளன, குறிப்பாக இந்த கோட்டையின் வரலாறு குறித்த ஒளி மற்றும் ஒலி காட்சிகள் இங்கு திரையிடப்படுகின்றது.
பெரும் சுவர், இயற்கை காட்சிகள் , கோவில்கள், சரணாலயங்கள் என எல்லாம் ஒன்றாகவே உள்ள இடம்தான் ‘கும்பல்கர்க் கோட்டை’.
இந்தியாவின் பெரும் சுவரையும் அதன் அழகினையும் வரலாற்றையும் அறிந்து கொள்ள நீங்கள் ரெடியா ?
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust