அடர்ந்த பனிப் போர்வையால் மூடப்பட்டு அதிசய பூமியாக காட்சியளிக்கும் இமாச்சல பிரதேசம் குளிர்காலத்தில் சிறந்த சுற்றலா இடமாக கருதப்படுகிறது.
பனியால் மூடப்பட்ட அடர்ந்த காடுகள், உயரமான ஏரிகள் உறைந்த நீர்வீழ்ச்சிகள் அங்கு காணப்படுகின்றன. பசுமையான நிலப்பரப்புகள் வெண்மையாக மாறி சொர்க்கத்தில் இருக்கும் உணர்வைத் தருகிறது.
ஹிமாச்சல் பிரதேசத்திற்கு சுற்றுப்பயணம் திட்டமிடும்போது, சில தனித்துவமான அனுபவங்களை தரக் கூடிய இந்த இடங்களை உங்கள் பக்கெட் லிஸ்டில் சேர்க்க மறந்துவிடாதீர்கள்!
டிசம்பரில் ஹிமாச்சல பிரதேசத்தில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்களை இங்கு காணலாம்.
மஷோப்ரா ஹிமாச்சல பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும்.
டிசம்பரில் நிலவக் கூடிய பனிப் பொழிவுக்கும், அமைதியான சுற்றுப்புறங்களுக்கும் மத்தியில் ஓய்வு விடுமுறையை அனுபவிக்க ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாகும்.
டெய்லி ரொட்டீனிலிருந்து விலகி, அமைதி தேடுபவர்களுக்கும் இயற்கை ஆர்வலர்களுக்கும் மஷோப்ரா ஒரு சிறந்த இடமாகும்.
வானிலை:
டிசம்பரில் மஷோப்ராவில் வெப்பநிலை 1⁰ C மற்றும் 11⁰ C வரை இருக்கும்.
டிசம்பரில் கண்டிப்பாக அனுபவிக்க வேண்டியவை : பனிச்சறுக்கு, ஸ்லெட்ஜிங், பனி மலையேற்றம் மற்றும் முகாமிடுதல்
உல் ஆற்றின் கரையில் அமைந்துள்ள பரோட் பள்ளத்தாக்கு, தௌலாதர் மலைத்தொடர்களால் சூழப்பட்டுள்ளது.
டிசம்பரில் இந்த மலை நகரத்தின் ஒவ்வொரு இடங்களும் பனியால் மூடப்பட்டிருக்கும் மற்றும் இமாச்சலின் இந்த அழகிய மலைவாசஸ்தலம் இன்னும் அதிகமாக வசீகரக்கும்.
இந்த இடத்தை இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சாகச ஆர்வலர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
வானிலை:
டிசம்பரில் பரோட்டில் வெப்பநிலை 4⁰ C மற்றும் 16⁰ C வரை இருக்கும்.
டிசம்பரில் கண்டிப்பாக அனுபவிக்க வேண்டியவை :
மலையேற்றம், டிரவுட் மீன்பிடித்தல், மற்றும் நற்கு வனவிலங்கு சரணாலயத்தில் இமயமலை கருங்கடிகளைக் பார்த்தல்.
'லிட்டில் லாசா' என்று பிரபலமாக அறியப்படும் மெக்லியோட்கஞ்ச் பழங்கால கோவில்களுக்கு பெயர் பெற்றது.
இந்த மலை நகரம் இயற்கையால் அலங்கரிக்கப்பட்டு கண்ணுக்கினிய காட்சிகளை தருகிறது. இனிமையான வானிலை மற்றும் இதமான தட்பவெப்ப நிலைகள் டிசம்பரில் பார்க்க வேண்டிய சிறந்த சுற்றுலா தலமாக மெக்லியோட்கஞ்ச் உள்ளது.
ட்ரையெண்ட் மற்றும் பாக்சுனாக் போன்ற நீர்வீழ்ச்சிக்கான மலையேற்றம் மெக்லியோட்கஞ்சில் மிகவும் விரும்பப்படும் விஷயங்களில் ஒன்றாகும்.
வானிலை:
டிசம்பரில் Mcleodganj இல் வெப்பநிலை 5⁰ C மற்றும் 14⁰ C வரை இருக்கும்.
டிசம்பரில் கண்டிப்பாக அனுபவிக்க வேண்டியவை :
மலையேற்றம், முகாமிடுதல், பாராகிளைடிங் மற்றும் ஹைக்கிங்
இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சாகச ஆர்வலர்களுக்கு சொர்க்கமாக இருக்கும் சிம்லா, டிசம்பரில் பிரமிக்க வைக்கும் வகையில் காட்சியளிக்கும்.
கடல் மட்டத்திலிருந்து 2,200 மீ உயரத்தில் அமைந்துள்ள சிம்லா ஒரு பிரபலமான மலை நகரமாகும்.
பனி மூடிய மலைத்தொடர்களின் பரந்த காட்சிகளை நீங்கள் ரசிக்கலாம். டிசம்பரில் இங்கு பனிப்பொழிவு ஏற்படுகிறது.
மறக்கமுடியாத அனுபவத்தை பெற சிம்லா ஒரு அற்புதமான சுற்றுலாத் தலமாகும்.
வானிலை:
சிம்லாவில் வெப்பநிலை 1⁰ C முதல் 12⁰ C வரை மாறுபடும்
கண்டிப்பாக அனுபவிக்க வேண்டியவை :
பனிச்சறுக்கு, மலையேற்றம், ரிவர் ராஃப்டிங் மற்றும் ஹைக்கிங்
மணாலி செல்வது பலரின் கனவு என்றே கூறலாம். உண்மையாகவே மணாலியில் இருப்பதும் கனவிலிருக்கிறோமா என சந்தேகப்பட வைக்குமளவு வியப்பானதாக இருக்கும். வரலாற்றுச் சிறப்புமிக்க மணாலி ஆச்சரியமூட்டும் பள்ளத்தாக்குகள், பைன் காடுகளுடன் ரம்மியமாக இருக்கும்.
டிசம்பரில் தேனிலவுக்காக ஹிமாச்சலில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்களில் இதுவும் ஒன்று என்பதில் சந்தேகமில்லை.
வானிலை:
டிசம்பரில் மணாலியில் வெப்பநிலை -5⁰ C முதல் 6⁰ C வரை மாறுபடும்.
கண்டிப்பாக அனுபவிக்க வேண்டியவை :
ஸ்னோ ட்ரெக், ஸ்கீயிங், ஸ்லெட்ஜிங், பாராகிளைடிங், சோர்பிங் மற்றும் ரிவர் ராஃப்டிங்.
தீர்த்தன் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஒரு சிறிய குக்கிராமம் தான் இந்த ஜிபி. இது ஹிமாச்சல பிரதேசத்தில் பார்க்க சிறந்த இடங்களில் ஒன்றாகும்.
பிரமிக்க வைக்கும் நிலப்பரப்பு மற்றும் வசீகரிக்கும் அழகைக் கொண்ட இந்த நகரம் டிசம்பரில் பனியால் மூடப்பட்டிருக்கும்.
ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் ஆப்பிள் தோட்டங்கள் பனியால் மூடப்பட்டிருக்கும்.
வானிலை:
டிசம்பரில் ஜிபியில் வெப்பநிலை -5⁰ C முதல் 6⁰ C வரை மாறுபடும்.
கண்டிப்பாக அனுபவிக்க வேண்டியவை :
டிரவுட் மீன்பிடித்தல், மலையேற்றம், பாறை ஏறுதல் மற்றும் முகாமிடுதல்
சைஞ்ச் பள்ளத்தாக்கு இமாச்சலப் பிரதேசத்தில் அனைவரும் பார்க்க வேண்டிய ரத்தினமாகும்.
குலு மற்றும் மணாலி உள்ளிட்ட பிரபலமான சுற்றுலாத் தலங்களுக்கு அருகாமையில் இந்த சைஞ்ச் அமைந்திருக்கும்.
பரந்து விரிந்த புல்வெளிகள் டிசம்பர் மாதத்தில் பனியால் மூடப்பட்டிருக்கும், இது இயற்கை காதலர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கும்.
வானிலை:
டிசம்பர் மாதத்தில் சைன்ஜில் வெப்பநிலை 4⁰ C முதல் 20⁰ C வரை மாறுபடும்.
டிசம்பரில் கண்டிப்பாக அனுபவிக்க வேண்டியவை :
மலையேற்றம், முகாமிடுதல்,
லடாக் மற்றும் ஸ்பிதி பள்ளத்தாக்கின் நுழைவாயிலில், அமைந்துள்ளது இந்த லாஹவுல் பள்ளத்தாக்கு.
டிசம்பரில் ஏரிகள் உறைந்து, உயரமான பாதைகள் மீது பனி பொழிந்து காட்சியளிக்கும் லாஹவுல் பள்ளத்தாக்கு நம்மை வேறொரு ஒரு உலகிற்கு அழைத்து செல்கிறது.
வானிலை:
டிசம்பரில் லாஹவுல் பள்ளத்தாக்கில் வெப்பநிலை -19⁰ C முதல் -7⁰ C வரை மாறுபடும்.
டிசம்பரில் கண்டிப்பாக அனுபவிக்க வேண்டியவை :
ஸ்னோ ட்ரெக், முகாமிடுதல், ஹைக்கிங் மற்றும் ஸ்கீயிங்
அடர்ந்த காடுகள் மற்றும் பனி மூடிய மலைகளால் சூழப்பட்ட சங்லா பாஸ்பா நதியால் சூழப்பட்டுள்ளது.
கின்னவுர் மாவட்டத்தில் அமைந்துள்ள சங்லா குளிர்காலத்தில் பார்க்க வேண்டிய சிறந்த இடமாகும்.
சங்லாவின் பிரமிக்க வைக்கும் நிலப்பரப்பு குளிர்காலத்தில் பனியால் மூடப்பட்டிருக்கும் சொர்க்கமாக காட்சியளிக்கிறது.
வானிலை:
டிசம்பர் மாதத்தில் சங்லாவில் வெப்பநிலை -7⁰ C முதல் 4⁰ C வரை மாறுபடும்.
டிசம்பரில் கண்டிப்பாக அனுபவிக்க வேண்டியவை :
ஸ்னோ ட்ரெக், முகாமிடுதல், ஹைக்கிங் மற்றும் ஸ்கீயிங்
‘மினி ஸ்விட்சர்லாந்து ஆஃப் இந்தியா’ என்று அழைக்கப்படும் கஜ்ஜியார் பனி மூடிய மலைகளுக்கு மத்தியில் அமைந்திருக்கிறது.
டிசம்பர் மாதத்தில் ஹிமாச்சலப் பிரதேசத்தின் சிறந்த பனிப்பொழிவு இடங்களில் இதுவும் ஒன்றாகும்.
வானிலை:
டிசம்பரில் கஜ்ஜியாரில் வெப்பநிலை -2⁰ C முதல் 4⁰ C வரை மாறுபடும்.
டிசம்பரில் கண்டிப்பாக அனுபவிக்க வேண்டியவை :
பாராகிளைடிங், சோர்பிங், ட்ரெக்கிங் மற்றும் ஹைக்கிங்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust