Rolls Royce காரை குப்பை அள்ள பயன்படுத்திய இந்திய நகரம்; என்ன காரணம் - ஒரு ஆச்சரிய நிகழ்வு

நகரின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் குப்பைகளை சேகரித்து கொண்டு செல்ல இந்த கார்களைப் பயன்படுத்துமாறு மகாராஜா கேட்டுக் கொண்டார். சிறிது நேரத்தில் இந்த செய்தி உலகம் முழுவதும் பரவியது ரோல்ஸ் ராய்ஸ் உற்பத்தியின் நற்பெயரும் வருவாயும் சரசரவென குறைந்தது.
How an insulted Maharaja in Alwar used Rolls Royce cars for carrying municipal waste
How an insulted Maharaja in Alwar used Rolls Royce cars for carrying municipal wasteTwitter
Published on

ரோல்ஸ் ராய்ஸ் ஷோரூமின் விற்பனையாளர் அவமானப்படுத்தியதை தாங்க முடியாமல், ஆல்வார் மகாராஜா ஜெய் சிங் ஷோரூமில் இருந்து அனைத்து கார்களையும் வாங்கி, தெருக்களில் இருந்து குப்பைகளை சேகரிக்க உத்தரவிட்டார்.

இது என்னடா ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வந்த சோதனை என்று நினைக்கிறீர்களா? வாருங்கள் பிளாஸ் பேக்கு சென்று என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

இங்கிலாந்தில் 1905ம் ஆண்டு முதல் தயாரிக்கப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்கள், ஒரு பந்தயத்தில் கலந்துகொண்டதன் மூலம் உலகளவில் பிரபலமானது. பிரிட்டன் காலனி ஆதிக்கம் இந்தியாவில் இருந்ததால், 1908ம் ஆண்டில் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் இந்தியாவிற்கு அறிமுகமாகின.

அந்த காரின் அம்சம், வடிவம் ஒரு கம்பீரத்தை கொடுத்தது, ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வைத்திருந்தால்தான் கௌரவம் என்ற நிலை உருவானது. மகாராஜாக்களைத் தவிர இந்தியாவில் அப்போது இருந்த பணக்கரார்களும் இந்த ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்க ஆரம்பித்தனர்.

முதல் உலகப் போருக்கு முன் இருபதாயிரத்திற்கும் அதிகமான ரோல்ஸ் ராய்ஸ் தயாரிக்கப்பட்டு கிட்டத்தட்ட 20 சதவிகிதம் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டது என்பது நம்மில் பலருக்குத் தெரியாது.

அந்த நேரத்தில் கிட்டத்தட்ட 230 இந்திய மன்னர்கள் (மகாராஜாக்கள்) இருந்தனர். சராசரியாக, இந்தியாவில் சுமார் 2000 ரோல்ஸ் ராய்ஸ் இருந்தது. இந்திய அரசர்கள் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் இடையே வலுவான தொடர்பு இருந்தது.

How an insulted Maharaja in Alwar used Rolls Royce cars for carrying municipal waste
புடின், செளதி அரசர் முதல் கிம் ஜாங் உன் வரை : உலகின் ரகசிய பணக்காரார்கள் - அட்டகாச தகவல்

ரோல்ஸ் ராய்ஸ் வைத்திருப்பதை பெருமையாக நினைத்தனர். ஆனால் ராஜஸ்தானின் ஆல்வாரைச் சேர்ந்த பிரபல மன்னர் ஒருவர் ஒரே நேரத்தில் மூன்று வாகனங்களை வாங்குவது வழக்கம். 1920 ஆம் ஆண்டில், ஆல்வார் மகாராஜா ஜெய் சிங் லண்டனில் உள்ள மேஃபேர் பகுதியின் தெருக்களில் சுற்றிக் கொண்டிருந்தார்.

சாதாரண உடையில் இருந்த அவர் ரோல்ஸ் ராய்ஸ் ஷோரூமுக்குள் சென்றார். ஒரு பிரிட்டிஷ் விற்பனையாளர் அவர் ஒரு சாதாரண ஏழை இந்தியர் என்று நினைத்து மகாராஜா ஜெய் சிங்கை புறக்கணித்தார்.

மன்னர் ஜெய் சிங்கால் இந்த அவமானத்தை தாங்கிக் கொண்டு தனது ஹோட்டல் அறைக்குத் திரும்ப முடியவில்லை. உடனடியாக அவர் தனது வேலையாட்களை அழைத்து, ஆல்வார் நகரத்தின் அரசர் உங்களிடமிருந்து கார்களை வாங்கப் போகிறார் என்று அவர்களிடம் சென்று சொல்லுமாறு கூறியிருக்கிறார்.

அதன்பிறகு, ஷோரூமில் இருந்த அனைத்து விற்பனையாளர்களும் அரசரின் வருகையை முன்னிட்டு வரிசையாக நிறுத்தப்பட்டு, ஷோரூமில் சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டது.

பின்னர் மன்னர் தனது ராஜ தோற்றத்துடன் ஷோரூமை பார்வையிட்டார். அந்த நேரத்தில் ஷோரூமில் ஆறு கார்கள் இருந்தன, மன்னர் ஒரே நேரத்தில் ஆறு கார்களையும் வாங்கினார். டெலிவரி கட்டணம் உட்பட முழுத் தொகையையும் செலுத்தினார்.

ஆறு ரோல்ஸ் ராய்ஸும் இந்தியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டவுடன், நகரின் தெருக்களைத் துடைக்க இந்தக் கார்களைப் பயன்படுத்துமாறு நகராட்சிக்கு மன்னர் உத்தரவிட்டார்.

How an insulted Maharaja in Alwar used Rolls Royce cars for carrying municipal waste
அம்பானி முதல் அபிஷேக் பச்சன் வரை பயன்படுத்தும் கார்கள் என்ன? - அட்டகாச தகவல்

மேலும், நகரின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் குப்பைகளை சேகரித்து கொண்டு செல்ல இந்த கார்களைப் பயன்படுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

சிறிது நேரத்தில் இந்த செய்தி உலகம் முழுவதும் பரவியது மற்றும் நம்பர் ஒன் கார் உற்பத்தி நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் அதிர்ச்சியில் மூழ்கியது, அவர்களின் நற்பெயரும் வருவாயும் சரசரவென குறைந்தது.

இறுதியாக, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம், இந்திய அரசர் ஜெய் சிங்கிற்கு தங்களின் நடத்தைக்காக மன்னிப்புக் கேட்டு தந்தி அனுப்பியது. மேலும் ஆறு புத்தம் புதிய கார்களை இலவசமாக வழங்கினர். குப்பை சேகரிக்க ரோல்ஸ் ராய்ஸைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு நகராட்சியையும் மற்றவர்களையும் ராஜா கேட்டுக்கொண்டார், அவரும் அவர்களின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

How an insulted Maharaja in Alwar used Rolls Royce cars for carrying municipal waste
இந்தியாவிலேயே மிக விலை உயர்ந்த 7 நம்பர் பிளேட்கள் இதுதானாம்! காரை விட விலை அதிகமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com