புடின், செளதி அரசர் முதல் கிம் ஜாங் உன் வரை : உலகின் ரகசிய பணக்காரார்கள் - அட்டகாச தகவல்

சில பணக்காரர்கள் தங்களின் உண்மையான சொத்து விவரங்களைப் பொதுவெளியில் குறிப்பிடவில்லை என்றும், அவர்களின் உண்மையான சொத்துமதிப்பு பல லட்சம் கோடி ரூபாய் தேறும் என சில வலைத்தளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த மறைமுக கோடீஸ்வரர்களைத் தான் இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கப் போகிறோம்.
புதின், கிம், சௌதி இளவரசர்
புதின், கிம், சௌதி இளவரசர்Twitter

உலகப் பணக்காரர்களுக்கு, தங்களுடைய வியாபாரத்தைப் பார்த்துக் கொள்வது தாண்டி, யார் பெயரில் சொத்து வாங்க வேண்டும், எங்கு வியாபாரம் தொடங்கினால் வரி குறைவாகச் செலுத்தலாம் அல்லது வரியே செலுத்தாமல் இருக்கலாம் எனச் சிந்திப்பார்கள் என்கிற ஒரு பொதுக் கருத்து நிலவுகிறது.

அது உண்மையா பொய்யா என்பது விவாதத்துக்குரியது. இங்கு ஒரு சில பணக்காரர்கள் தங்களின் உண்மையான சொத்து விவரங்களைப் பொதுவெளியில் குறிப்பிடவில்லை என்றும், அவர்களின் உண்மையான சொத்துமதிப்பு பல லட்சம் கோடி ரூபாய் தேறும் என சில வலைத்தளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதைத் தான் இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கப் போகிறோம்.

The Rothschild Family
The Rothschild FamilyTwitter

ராத்ஸ்சைல்ட் குடும்பம் (The Rothschild Family)

1750களில் ஐரோப்பியக் கண்டத்தில் வியாபாரம் செய்த குடும்பம் இது. இவர்களுக்கு சுமார் (140 ட்ரில்லியன் ரூபாய்) 140 லட்சம் கோடி ரூபாய் சொத்து இருந்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் நம்பர் 2 பணக்காரர் முகேஷ் அம்பானியின் மொத்த சொத்தையும் (6.75 லட்சம் கோடி ரூபாய்) இவர் குடும்பம் நினைத்தால் ஒற்றை செக்கில் வாங்கிவிட முடியும்.

புதின்
புதின்Twitter

விளாதிமிர் புதின் - ரஷ்ய அதிபர்

ரஷ்யாவின் தற்போதைய அதிபராக இருக்கும் இவருக்கு, சுமார் 14 லட்சம் கோடி ரூபாய் சொத்து பத்து தேறலாம் என வலைதளங்களில் கூறப்பட்டுள்ளது.

புதின், கிம், சௌதி இளவரசர்
அரபு உலகின் டாப் 10 பணக்காரர்கள் இவர்கள்தான்!

செளத் அரச குடும்பம்

செளதி அரேபியாவின் அரச குடும்பமான செளத் குடும்பத்துக்கு ஏகப்பட்ட எண்ணெய் வயல்கள், வர்த்தகங்கள், வியாபாரங்கள் உள்ளன. இவர்களின் சொத்து மதிப்பு சுமார் 105 லட்சம் கோடி ரூபாய் வரை இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

ரத்தன் டாடா
ரத்தன் டாடாTwitter

ரத்தன் டாடா

இந்தியாவின் புகழ்பெற்ற டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா, தொடர்ந்து சமூக சேவைகளுக்கும், டாடா டிரஸ்டுகளுக்கும் தன்னுடைய பெரும்பகுதியான சொத்துக்களைத் தானமாகச் செய்து வருகிறார். அது போகவும் அவர் பல நிறுவனங்களின் பங்குகளை வைத்திருப்பதாகவும், அது குறித்துத் தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. பல்வேறு யூகங்களின் அடிப்படையில் அவரது சொத்து மதிப்பு சுமார் 6.04 லட்சம் கோடி ரூபாயாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

புதின், கிம், சௌதி இளவரசர்
Jio அம்பானி கதை : திருபாய் நவீன இந்திய பொருளாதாரத்தின் குருபாய் | பகுதி 1
ஹோஸ்னி முபாரக்
ஹோஸ்னி முபாரக்Twitter

ஹோஸ்னி முபாரக்

சுமார் மூன்று தசாப்த காலத்துக்கு இத்தாலியை ஆட்சி செய்தவர் ஹோஸ்னி முபாரக் என்கிற அந்நாட்டின் முன்னாள் விமானப்படைத் தளபதி. இவர் ஆட்சியிலிருந்த போது தன் வியாபாரத்தை விரிவாக்கியதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இவரது சொத்து மதிப்பு சுமார் ஐந்து லட்சம் கோடி ரூபாய் தேறலாம் என இணையத்தில் பல்வேறு கணிப்புகள் உலவுகின்றன.

புதின், கிம், சௌதி இளவரசர்
எலான் மஸ்க்: சிறு வயதில் மோசமான நெருக்கடிகள் முதல் உலகின் No 1 பணக்காரர் வரை - யார் இவர்?

பசர் அல் அசாத்

சிரியாவில் பெரும்பாலான வியாபாரங்களை இவர்தான் வைத்திருக்கிறாராம். பல்வேறு நிதி சார் தளங்கள் இவர் பொதுவெளியில் காட்டி இருக்கும் சொத்துக்களை விட சுமார் 100 - 120 மடங்கு அதிக சொத்தை வைத்திருக்கலாம் என்று கூறுகிறார்கள். அவர் சொத்து மதிப்பு சுமார் 9.04 லட்சம் ரூபாயாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

கார்லோஸ் ஸ்லிம் ஹிலு
கார்லோஸ் ஸ்லிம் ஹிலுTwitter

கார்லோஸ் ஸ்லிம் ஹிலு

மெக்சிகோ நாட்டில் என்ன நடக்க வேண்டும், எந்த வங்கி என்ன தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என்கிற அளவுக்கு மெக்சிகோவின் பொருளாதார விவகாரங்களில் ஆளுமை செலுத்தக் கூடியவர் அந்நாட்டின் தொழிலதிபரான கார்லோஸ் ஸ்லிம் என்கிறது சில வலைத்தளங்கள். அவர் பெயரில் சுமார் 200 வியாபாரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இவர் உலகின் டாப் 15 பணக்காரர்களில் ஒருவராக இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு 5.3 லட்சம் கோடி ரூபாய் என ப்ளூம்பெர்க் வலைத்தளம் கூறுகிறது.

புதின், கிம், சௌதி இளவரசர்
டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்ற இந்தியர் ; சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
கிம் ஜாங் உன்
கிம் ஜாங் உன்Twitter

கிம் ஜாங் உன்

வட கொரியாவின் நிரந்தர தலைவராக வலம் வரும் கிம் ஜாங் உன் தனக்குச் சொந்தமாக சுமார் 35,000 கோடி ரூபாய்க்குச் சொத்து சேர்த்து வைத்திருப்பதாக இணையத்தில் பல கணிப்புகள் உலவிக் கொண்டிருக்கின்றன.

புதின், கிம், சௌதி இளவரசர்
பைலட்டுக்கு உடம்பு முடியல : பயணிகளே விமானத்தைத் தரை இறக்கிய திக் திக் நிமிடங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com