40 ஆண்டுகளுக்கு முன்பு அண்டார்டிகாவில் இந்தியா நிரந்தர ஆராய்ச்சி தளத்தை அமைத்தது எப்படி?

1981 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய அண்டார்டிக் திட்டம், 40 அறிவியல் பயணங்களை நிறைவுசெய்து, அண்டார்டிகாவில் தக்ஷின்கங்கோத்ரி (1983), மைத்ரி (1988) மற்றும் பாரதி (2012) என பெயரிடப்பட்ட மூன்று நிரந்தர ஆராய்ச்சி தளங்களை உருவாக்கியுள்ளது.
40 ஆண்டுகளுக்கு முன்பு அண்டார்டிகாவில் இந்தியா நிரந்தர ஆராய்ச்சி தளத்தை அமைத்தது எப்படி?
40 ஆண்டுகளுக்கு முன்பு அண்டார்டிகாவில் இந்தியா நிரந்தர ஆராய்ச்சி தளத்தை அமைத்தது எப்படி?Twitter
Published on

1980 களில் ஒவ்வொரு பெரிய நாடும் அண்டார்டிகாவின் கனிம மற்றும் கடல் வளங்களை ஆராய்வதற்கும் உரிமை கோருவதற்கும் பந்தயத்தில் ஈடுபட்டிருந்தன. அந்த பந்தயத்தில் இந்தியாவும் தன்னை ஈடுபடுத்திகொண்டது.

அண்டார்டிகாவிற்கு முதல் இந்திய அறிவியல் பயணம் 1981 இல் டாக்டர் எஸ்.இசட் காசிம் தலைமையில் 21 பேர் கொண்ட குழுவுடன் தொடங்கப்பட்டது. இந்த பயணம் கோவா கடற்கரையில் இருந்து புறப்பட்டது.

1983 ஆம் ஆண்டுக்கான இந்த திட்டம் கங்கோத்ரி என்று அழைக்கப்பட்டது. டிசம்பர் 26 அன்று அண்டார்டிகாவை அடைந்தது குழு . 60 நாட்களில் நிரந்தர தளம் அமைக்க வேண்டும் என்பதே அவர்களின் குறிக்கோளாக இருந்தது.

ஆனால் மூன்றாவது நாளிலேயே ஒரு விபத்தால் திட்டம் தடையானது. ஹெலிக்காப்டரில் ஒரு முக்கிய பொருளை ஆய்வு கூட்டத்தில் இருந்து ஏற்றும் போது ஹெலிக்காப்டர் நிலை தடுமாறியது.

இது குறித்து அதன் திட்ட இயக்குநர் சென்குப்தா கூறுகையில், இந்த சம்பவம் நடக்கும் போது சில நிமிடங்களுக்கு, குழு உறுப்பினர்கள் இறக்கும் நிலை ஏற்படுமோ என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் அவர்கள் நல்ல வேளையாக உயிருடன் இருந்தனர்.

இந்த சம்பவம் குறித்து அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி நேரடியாக எங்களை தொடர்பு கொண்டார். அவர் எங்களிடம் முதலில் கேட்ட கேள்வி உயிர் பிழைத்தவர்களின் நல்வாழ்வு பற்றி, அடுத்தது அந்த திட்டத்தை பற்றி, எங்கள் குழுவுக்கு அந்த தருணத்தில் கங்கோத்ரியை முடிக்காவிட்டால் திரும்பிச் செல்ல மாட்டோம் என்பது போர் முழக்கமாக மாறியது என்கிறார் குப்தா.

விஞ்ஞான ஆய்வு, பணியின் முக்கிய நோக்கமாக இருந்தபோதிலும், குழுவில் விஞ்ஞானிகளை விட அதிகமான பாதுகாப்பு பணியாளர்கள் இருந்தனர். அனைவரும் ஜம்மு & காஷ்மீரில் உள்ள மச்சோய் பனிப்பாறையில் பயிற்சி பெற்றவர்கள்.

40 ஆண்டுகளுக்கு முன்பு அண்டார்டிகாவில் இந்தியா நிரந்தர ஆராய்ச்சி தளத்தை அமைத்தது எப்படி?
அண்டார்டிகா : லண்டன் நகரம் அளவிலான பனிப்பாறை பிரிந்தது - ஆய்வாளர்கள் உயிருக்கு ஆபத்தா?

1981 டிசம்பரில் அண்டார்டிகாவுக்கான இந்தியாவின் முதல் பணி ரகசியமாக கருதப்பட்டது. மேலும் 21 குழு உறுப்பினர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கூட அதைப் பற்றி பேச அனுமதிக்கப்படவில்லை.

அந்த பணியின் இளைய உறுப்பினர்களில் ஒருவரான அமிதாவா சென்குப்தா, கூறுகையில் இந்த அனுபவம் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தில் இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது என்று ஒரு பிரபல ஊடகத்திற்கு பேட்டி அளித்திருந்தார்.

1983 இல், அண்டார்டிகாவில் இந்தியாவின் முதல் அறிவியல் அடிப்படை நிலையம் அமைக்கப்பட்டது.

1981 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய அண்டார்டிக் திட்டம், 40 அறிவியல் பயணங்களை நிறைவுசெய்து, அண்டார்டிகாவில் தக்ஷின்கங்கோத்ரி (1983), மைத்ரி (1988) மற்றும் பாரதி (2012) என பெயரிடப்பட்ட மூன்று நிரந்தர ஆராய்ச்சி தளங்களை உருவாக்கியுள்ளது.

அண்டார்டிகா தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1 அன்று கொண்டாடப்படுகிறது. இது கண்டத்தின் நிர்வாகத்தை சாத்தியமாக்கும் சர்வதேச ஒத்துழைப்பை முன்னிலைப்படுத்தவும் கொண்டாடப்படுகிறது.

இன்றைய நிலவரப்படி மைத்ரியும் பாரதியும் முழுமையாக செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

40 ஆண்டுகளுக்கு முன்பு அண்டார்டிகாவில் இந்தியா நிரந்தர ஆராய்ச்சி தளத்தை அமைத்தது எப்படி?
பிங்க் நிறத்தில் ஜொலித்த அண்டார்டிகா வானம் - ஏன்? என்ன ஆச்சு?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com