நீங்களே வருமான வரியை தாக்கல் செய்வது எப்படி? | How to file income tax returns?

மொத்த ஆண்டு வருமானம் 5.5 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால் வருமான வரிப் படிவத்தை நிரப்பும் போதே 50,000 ரூபாய் ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷன் கணக்கில் வந்துவிடும் என்பதால் இவர்கள் ஒரு ரூபாய் கூட வரி செலுத்தத் தேவை இல்லை. சரி இவர்கள் எப்படி ஐடிஆர் படிவத்தை நிரப்புவது
income tax
income taxtwitter
Published on

ஒரு தனிநபருக்கு மாதம் சுமார் 45,000 ரூபாய் அல்லது அதற்கும் குறைவாக வருகிறது, அது தவிர வேறு வருமானம் ஏதும் இல்லை என்றால், அவர்கள் அவர்கள் தைரியமாக தாங்களாகவே வருமான வரிப் படிவத்தைத் தாக்கல் செய்துவிடலாம். ஆடிட்டருக்கு செலவழிக்கும் 500 - 1,000 ரூபாயை மிச்சப்படுத்திக் கொள்ளலாம்.

இவர்களின் மொத்த ஆண்டு வருமானம் 5.5 லட்சம் ரூபாய்க்குள் தான் இருக்கும். இவர்கள் வருமான வரிப் படிவத்தை நிரப்பும் போதே 50,000 ரூபாய் ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷன் கணக்கில் வந்துவிடும் என்பதால் இவர்கள் ஒரு ரூபாய் கூட வரி செலுத்தத் தேவை இல்லை. சரி இவர்கள் எப்படி ஐடிஆர் படிவத்தை நிரப்புவது

https://www.incometax.gov.in/iec/foportal

மேலே உள்ள லின்கை பயன்படுத்தி வருமானவரித்துறையின் இணையப்பக்கத்துக்குச் செல்லலாம். வலது மேல் பக்கத்தில் Login ஆப்ஷனை சொடுக்கி உங்கள் பான் எண் மற்றும் பாஸ்வேர்டைக் கொடுத்து உள்ளே நுழையவும்.

உள்ளே நுழைந்த உடன், 'e-File' என்கிற ஆப்ஷனைச் சொடுக்கவும். அதில் Income Tax Returns - File Income tax Returns-ஐ சொடுக்கவும்.

அதன் பின் select assessment year-ல் 2022 - 23 (Current A.Y) என்பதைத் தேர்வு செய்யவும். அதன் கீழ் எப்படி வருமான வரிப் படிவத்தை நிரப்ப விரும்புகிறீர்கள் என ஒரு ஆப்ஷன் இருக்கும். அதில் 'Online' என்பதைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். ஒவ்வொரு பக்கத்துக்கு நீங்கள் முன்னேறும் போது உங்களுக்கு 30 நிமிடம் கால அவகாசம் கொடுக்கப்படுகிறது என்பதால், நிதானமாக ஒவ்வொரு தரவையும் படித்துப் பார்த்து நிரப்பலாம்.

To file a fresh income tax return-ன் கீழ் Start New filing என்பதைச் சொடுக்கி 2021 - 22 நிதியாண்டுக்கான (2022 - 23 மதிப்பிட்டு ஆண்டுக்கான) வருமான வரிப் படிவத்தை நிரப்பத் தொடங்கலாம்.

அதில் தனி நபர் என்றால் Individual என்கிற ஆப்ஷனைத் தேர்வு செய்து, சம்பளம் தவிர மற்ற வருமானம் இல்லாதவர்கள் ITR 1 படிவத்தைத் தேர்வு செய்து Lets Get Started என்கிற ஆப்ஷனைச் சொடுக்குங்கள்.

அடுத்து Are you filing the income tax return for any of the following reasons? எனக் கேள்வி கேட்கப்பட்டிருக்கும்.

கடந்த 2021 - 22 நிதியாண்டில் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டி இருந்தால் 'Taxable income is more than basic exemption limit' என்கிற ஆப்ஷனைத் தேர்வு செய்யுங்கள்.

income tax
ஒரு வாவ் செய்தி - இந்த நாடுகளில் எல்லாம் வரி இல்லை தெரியுமா?

கடந்த நிதியாண்டில்...1 கோடி ரூபாய்க்கு மேல் வங்கி, நிதி நிறுவனங்களில் டெபாசிட் செய்திருந்தால்

அல்லது

வெளிநாட்டுப் பயணங்களுக்கு 2 லட்சத்துக்கு மேல் செலவழித்திருந்தால்

அல்லது

1 லட்சம் ரூபாய்க்கு மேல் மின்சார கட்டணம் செலுத்தி இருந்தால்

அல்லது

வருமான வரிச் சட்டம் 139 (1)-ன் கீழ் குறிப்பிடப்பட்டிருக்கும் விதிகளின் கீழ் வருமான வரிப் படிவத்தை நிரப்புவதாக இருந்தால்... Filing return of income due to fulfilling any one or more below mentioned conditions as per Seventh Proviso to section 139(1) என்கிற ஆப்ஷனைத் தேர்வு செய்யவும். அதோடு மேலே குறிப்பிட்ட காரணங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து கொள்ளவும்.


கடந்த நிதி ஆண்டில் 2.5 லட்சத்துக்குள் வருமானம் ஈட்டி இருந்தால் 'Others' என்கிற ஆப்ஷனைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்.

இதை எல்லாம் தேர்வு செய்த பின் 'Let's validate your pre-filled return' என்கிற பக்கத்துக்குச் செல்வீர்கள்.

அதில் Return Summary என்கிற தலைப்பின் கீழ் personal information என்கிற ஆப்ஷனைச் சொடுக்கினால் Verify your personal information என்கிற பக்கத்துக்கு உங்களை அழைத்துச் செல்லும்.

அதில் உங்கள் பெயர், பான் எண், ஆதார் எண், பிறந்த தேதி, முகவரி எல்லாம் நிரப்பப்பட்டிருக்கும் அதைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள். அதன் பின் 'Nature of Employment'-ன் கீழ் நீங்கள் மத்திய அரசுப் பணியாளரா, மாநில அரசுப் பணியாளரா, மற்றவையா என்பதைத் தேர்வு செய்யவும்.

Filing Section-ன் கீழ் ஜூலை 31ஆம் தேதிக்குள் நிரப்பப்படும் வருமான வரிப்படிவத்துக்கு 139(1) பிரிவைத் தேர்வு செய்யவும். ஒருவேளை வருமான வரிப் படிவத்தை சமர்பிக்க வேண்டிய கடைசி தேதிக்குப் பிறகுத் தாக்கல் செய்கிறீர்கள் என்றால் 139(4)-ஐத் தேர்வு செய்யவும்.

Are you opting for a new tax regime u/s 115BAC ? என்கிற கேள்விக்கு Yes அல்லது No தேர்வு செய்யலாம். பழைய வருமான வரி முறையில் அதிக வரிச் சலுகைகளைப் பெற முடியும் என்பதால் பழைய முறையைத் தேர்வு செய்வது நல்லது.

அதன் பின் Bank Details என்கிற தலைப்பின் கீழ் நீங்கள் பராமரித்து வரும் அனைத்து வங்கிக் கணக்குகளையும் பதிவு செய்யுங்கள். முன்பே வருமான வரித் துறையிடம் வங்கிக் கணக்குகளைக் குறிப்பிட்டிருந்தால், அக்கணக்குகள் அங்குக் குறிப்பிடப்பட்டிருக்கும். இதைப் பூர்த்தி செய்த பிறகு ஏதேனும் ஒரு வங்கிக் கணக்கை ரீஃபண்டுக்காக தேர்வு செய்து கொள்ளுங்கள்.

இதை எல்லாம் நிறைவு செய்த பின் continue கொடுத்தால் - Personal Information confirmed எனப் பச்சை நிறத்தில் வரும்.

income tax
வருமானவரி தாக்கல் : உங்களது அனைத்து சந்தேகங்களும், அதற்கான உரிய விளக்கமும் - விரிவான தகவல்

அதன் பின் Gross Total Income என்கிற ஆப்ஷனைத் தேர்வு செய்யுங்கள். அதைத் தேர்வு செய்து உள்ளே நுழைந்தால் உங்கள் சம்பளத்தோடு உங்களுக்கு வழங்கப்படும் வரிச் சலுகைகள் குறித்துக் கேட்கப்பட்டிருக்கும். அதில் எந்த சலுகைகள் எல்லாம் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறதோ அதை எல்லாம் தேர்வு செய்துவிட்டு continue கொடுத்தால் அது உங்களை 'Verify your income source details' பக்கத்துக்கு அழைத்துச் செல்லும்.

பெரும்பாலும் உங்கள் ஃபார்ம் 16 படிவத்தில் உள்ள விவரங்கள் இப்பக்கத்தில் பூர்த்தி செய்யப்பட்டிருக்கும். அதைச் சரிபார்த்து எங்கெல்லாம் திருத்தம் செய்ய வேண்டுமோ அங்கெல்லாம் திருத்தம் செய்து கொள்ளுங்கள். இதே பக்கத்தில் கடைசி பகுதியில் Deductions u/s 16 (iva + ivb + ivc) என்கிற தலைப்பின் கீழ் ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷன் 50,000 ரூபாய் தன்னிச்சையாகவே கொடுக்கப்பட்டிருக்கும் அது இருப்பதையும் உறுதி செய்து கொண்டு Confirm கொடுத்தால் Gross Total Income Confirmed என வரும்.

அடுத்த Total Deductions என்கிற ஆப்ஷனைத் தேர்வு செய்தால் deductions என்கிற பக்கத்துக்கு அழைத்துச் செல்லும். நீங்கள் என்ன மாதிரியான வரிச் சலுகைகளைப் பெறத் தகுதியானவர் என்பதைக் கொடுத்திருக்கும் ஆப்ஷன்களில் தேர்வு செய்து நிரப்பி continue கொடுத்தால் Verify your Deductions என்கிற பக்கத்துக்குச் செல்லும். அதில் உங்கள் வரிக் கழிவுகளைச் சரிபார்த்துவிட்டு confirm கொடுத்தால் Total Deductions Confimed எனக் குறிப்பிடப்படும்.

அதே போல Tax Paid என்கிற ஆப்ஷனைச் சொடுக்கி அதில் உங்களிடமிருந்து வரிப் பிடித்தம் செய்யப்பட்ட டிடிஎஸ், டிசிஎஸ், நீங்களே செலுத்திய வரி விவரங்கள் எல்லாமே குறிப்பிடப்பட்டிருக்கும். அவை எல்லாம் சரியாக இருந்தால், அதைத் தேர்வு செய்து கொள்ளுங்கள் ஏதேனும் விடுபட்டிருந்தால் Add another என்கிற ஆப்ஷனைத் தேர்வு செய்து வரி செலுத்திய அல்லது பிடித்தம் செய்த விவரங்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள். எல்லாம் சரிபார்த்த பின் confirm கொடுத்தால் Tax Paid Confirmed என வரும்.

income tax
இணையத்தில் வைரலாகும் 'Cute Tax' - இண்டிகோ பில்லில் இருப்பது என்ன?

கடைசியாக total tax liability என்கிற ஆப்ஷனைத் தேர்வு செய்து கணக்கிடப்பட்டிருக்கும் வரி விவரங்களைச் சரிபாருங்கள். நாம் முன்பே சொன்னது போல 5.5 லட்சத்தில் 50,000 ரூபாய் ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷன் கழிந்தால் ஒரு ரூபாய் கூட வரி செலுத்த வேண்டி இருக்காது. அதைச் சரிபார்த்துக் கொண்டு confirm கொடுத்து முன்னேறுங்கள். எல்லா விவரங்கள் உங்களுக்குத் திருப்திகரமாக இருந்தால் proceed கொடுத்து முன்னேறுங்கள்.

நீங்கள் செலுத்த வேண்டிய வரி அல்லது உங்களுக்குக் கிடைக்கவிருக்கும் ரீஃபண்ட் எல்லாமே இங்கு மீண்டும் ரத்தினச் சுருக்கமாகக் காட்டும். அவை அனைத்தும் சரியாக இருந்தால் Preview Return என்கிற ஆப்ஷனைச் சொடுக்கி முன்னேறுங்கள்.


preview and Submit your return என்கிற பக்கத்துக்கு அழைத்துச் செல்லும். அப்பக்கத்தில் ஒரு டிக் மார்க் கொடுக்கப்பட்டிருக்கும் அதைச் சொடுக்கவும். இன்னார் ஆகிய நான் வருமான வரிப் படிவத்தை சமர்கிக்கிறேன் என்கிற வாசகங்கள் அது.

அதை நிரப்பி முன்னேறினால் preview and Submit your return என்கிற பக்கத்துக்குச் செல்வீர்கள். அங்கு உங்களின் மொத்த வருமான வரி படிவமும் ஒரு முறை உங்கள் பார்வைக்குக் கிடைக்கும். அதை ஒரு முறை சரிபார்த்துவிட்டு proceed to validation கொடுத்து முன்னேறுங்கள். உங்கள் ஐடிஆர் படிவத்தில் எந்த பிழையும் இல்லை என்றால் Validation Successful என்று கீழே வரும். அதனைத் தொடர்ந்து proceed to Verification கொடுத்து முன்னேறினால் வெரிஃபை செய்வதற்கான ஆப்ஷன்கள் வரும்.

income tax
பல கோடி வரி பாக்கியா ? எஸ்.ஜே சூர்யாவின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

அதில் ஏதேனும் ஒரு ஆப்ஷனைத் தேர்வு செய்து Verify செய்யவும். ஆதாரோடு கொடுத்திருக்கும் செல்ஃபோன் எண்ணை வைத்து இ-வெரிஃபை செய்வது சாலச் சிறந்தது. சட்டென வேலையும் முடியும். அப்படிச் செய்துவிட்டால் நீங்கள் வெற்றிகரமாக வருமான வரிப் படிவத்தை சமர்பித்துவிட்டீர்கள் என்று பொருள்.

மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையில் ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷனைத் தவிர வேறு எந்த வரிச் சலுகை பெறுவது குறித்தும் விரிவாக விளக்கப்படவில்லை.

எனக்கு 5.5 லட்சத்துக்கு மேல் வருமானம் வருகிறது, நான் வீட்டு வாடகை, அரசாங்கத்துக்குக் கொடுத்திருக்கும் நிதிக்கு 80G, ஹெல்த் இன்ஷூரன்ஸ் 80D, வீட்டுக் கடனுக்கான அசல் 80C + வட்டிக்குப் பிரிவு 24, 80C முதலீடுகளுக்கான வரிச் சலுகைகளை எல்லாம் பெற வேண்டுமானால் உங்கள் ஆடிட்டரைச் சென்று அணுகி விரைந்து வருமான வரிப் படிவத்தைச் சமர்ப்பியுங்கள்.

income tax
இந்திய ரூபாய் ஏன் சரிகிறது? இதனால் நமக்கு ஏற்படும் ஆபத்துகள் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com