Depression போன்ற அமெரிக்கா வார்த்தைகளுக்கு எனக்கு அர்த்தம் தெரியாது என கிரிக்கெட் வீரர் கபில் தேவ் கூறிய கருத்து இணையத்தில் சர்ச்சையாகியுள்ளது.
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ். இந்தியா 1983ஆம் ஆண்டு முதன் முதலில் உலகக்கோப்பை வென்றது இவர் தலைமையில் தான். அந்த தொடரில் இவர் தான் நட்சத்திர வீரர்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் மன அழுத்தம், மனச் சோர்வு குறித்து இவர் கூறிய கருத்து கண்டனத்திற்குள்ளாகி வருகிறது.
ஐபிஎல் இல் விளையாடும் பல வீரர்கள் தங்களுக்கு அழுத்தம் அதிகமாக இருப்பதாக கூறியதை சுட்டிக்காட்டியவர், அந்த வீரர்கள் விளையாடாமல் இருக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்
'மனச்சோர்வு' போன்ற சொற்கள் அமெரிக்க கருத்துக்கள் என்றும், அது அவருக்கு உடன்படவில்லை என்றும் கூறினார்.
"ஐபிஎல்லில் விளையாட வீரர்களுக்கு அதிக அழுத்தம் இருப்பதாக நான் கேள்விப்படுகிறேன். அப்படியெனில் நான் சொல்வது ஒன்று தான். அந்த வீரர்கள் விளையாட வேண்டாம், "என்று கூறிய கபில் தேவ், ஒருவருக்கு விளையாட்டின் மேல் ஆர்வம் இருந்தால், அவர்களுக்கு அழுத்தங்கள் ஒரு பொருட்டாக இருக்காது எனவும் தெரிவித்தார்.
"எனக்கு டிப்ரெஷன் போன்ற அமெரிக்கா வார்த்தைகள் புரிவதில்லை. விளையாட்டை விரும்பினால் எந்த அழுத்தமும் தெரியாது "என்றும் அவர் கூறினார்.
கபில் தேவின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். அவர் விளையாடிய காலத்தில் அழுத்தம் போன்ற பிரச்னைகள் இல்லாமல் இருந்திருக்கலாம். இந்த காலகட்டத்தில் விளையாடுபவராக இருந்தால் இப்படி பேசமாட்டார் எனவும் தெரிவித்து வருகின்றனர். மேலும் மன அழுத்தம் குறித்து துச்சமாக இவர் பேசியதாகவும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
சில நாட்களுக்கு முன்பு தான் டிப்ரெஷனால் அவதிப்பட்டு வந்ததை விராட் கோலி மனம் திறந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust