Depression : இந்த செய்திகள் உங்களுக்கு மன உளைச்சலை தரலாம் - அதிர்ச்சி தரும் ஆய்வு

கொரோனா வைரஸ் குறித்த பொய் செய்திகளை நம்புபவர்கள் மனஅழுத்தம் (Depression) மற்றும் மனக் கவலை (Anxiety) போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மன அழுத்தம்
மன அழுத்தம்Twitter
Published on

2020ஆம் ஆண்டில் உலகை ஆட்டிப் படைக்கத் தொடங்கிய கொரோனா வைரஸ், இதுநாள் வரை முழுமையாக நம்மிடமிருந்து விடைபெறவில்லை. கொரோனா வைரஸ் பொருளாதாரங்களையும், மனிதர்களின் உடல் நலத்தையும் பாதித்தது என்றால், கொரோனா குறித்த போலி செய்திகள் மக்களின் மனநலத்தைப் பாதிப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் குறித்த பொய் செய்திகளை நம்புபவர்கள் மனஅழுத்தம் (Depression) மற்றும் மனக் கவலை (Anxiety) போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

"கொரோனா வைரஸ் குறித்துப் பொய் செய்திகளை நம்புவோர், மனநலம் சார்ந்த விஷயத்தில் என்ன மாதிரியான எதிர்மறை விளைவுகளால் பாதிக்கப்படலாம் என எங்கள் ஆய்வு காட்டுகிறது" என அவ்வாய்வின் முதன்மை ஆராய்ச்சியாளர் பவெல் தெப்ஸ்கி (pawel Debski) கூறினார்.

மன அழுத்தம் மற்றும் மனக்கவலை நேரடியாகப் பொய் செய்திகளை நம்பச் செய்யும் என ஆய்வில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதே போலப் பொய் செய்திகளை நம்புவதால் மனநலம் பாதிக்கப்படுவது எப்படி என்பதற்கும் போதிய விளக்கங்கள் கிடைக்கவில்லை.

பொய் செய்திகள் கொடுக்கும் மன அழுத்தம்

"கோவிட் - 19 கான்ஸ்பிரடோரியல் பிலீஃப் ஸ்கேல்" மற்றும் "ஹாஸ்பிடல் ஆன்சைட்டி & டிப்ரஷன் ஸ்கேல்" என இரு தலைப்பில் இணையத்தில் கேள்விகள் கேட்கப்பட்டன. பொய் செய்திகள் மற்றும் மனநலம் என இரண்டுக்கும் இடையிலான தொடர்பு குறித்து ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வை மேற்கொண்டனர்.

அரசாங்கங்கள் கொரோனா மரணங்களை அதிகரித்துக் காட்டியது, 5ஜியால் கொரோனா பரவும், முகக்கவசம் அணிந்து கொள்வதால் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகரிக்கிறது கார்பன் டை ஆக்ஸைட் அதிகரிக்கிறது... போன்ற பொதுவான விஷயங்கள் பொய் செய்திகளாக இருந்ததும் இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

மனக் கவலையை (Anxiety) விட, மன அழுத்தத்துக்கும் (Depression) பொய் செய்திகளுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆய்வில் கண்டுபிடித்திருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

மனநலத்தைப் பாதித்த பெருந்தொற்று

கொரோனா பெருந்தொற்று காரணத்தால் அறிவிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகள், உலக அளவில் மனநல குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அதிகரித்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய முதலாம் ஆண்டிலேயே மன அழுத்தம் மற்றும் மனக் கவலையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 25 சதவீதம் அதிகரித்தது. இதில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் எண்ணிக்கை சில அறிகுறிகளோடு சடாலென அதிகரித்தது.

சமூக ரீதியில் தனிமைப்படுத்தப்படுவது, தன்னுடைய சொந்த உடல் நலம் மற்றும் தனக்கு நெருக்கமானவர்களின் உடல் நலம் குறித்த மனக் கவலை, அழுத்தத்துக்கான மிகப்பெரிய காரணிகளாக இருந்தன. சுகாதாரப் பணியாளர்கள் போன்ற அத்தியாவசியப் பணியாளர்கள் சோர்வினால் தங்கள் மனநலம் பாதிக்கப்படுவதாகக் கூறினர்.

ஏற்கனவே மனநலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள்தான் கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு உத்தரவுகளால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் என "மைண்ட்" என்கிற பிரிட்டனைச் சேர்ந்த மனநல அமைப்பு தன் ஆய்வில் கண்டுபிடித்துள்ளது.

மன அழுத்தம்
Marburg virus : கொரோனாவுக்கு அடுத்து உலகை அச்சுறுத்தும் அடுத்த வைரஸ் - எப்படி தவிர்ப்பது?

சமூக வலைத்தளமும் கொரோனா பொய் செய்திகளும்

ஐரோப்பிய ஒன்றியத்தில் வாழ்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், தங்களுக்கு இணையம் வழி போலி செய்திகள் வந்திருப்பதாக, 2018ஆம் ஆண்டு நடத்தப்பட்ட வாக்கெடுப்பு ஒன்றில் கூறியுள்ளனர். அத்தரவுகள் ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தால் ஓர் அறிக்கையாகப் பிரசுரிக்கப்பட்டது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் இணையம் மற்றும் சமூக வலைத்தளத்துக்கு வந்தவர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகமாக இருந்தது என ஸ்டாடிஸ்டா நிறுவனம் தன் அறிக்கை ஒன்றில் கூறி இருந்தது.

சமூக வலைத்தளத்தில், உண்மை செய்திகளை விடப் பொய் செய்திகள் அதிக மக்களைச் சென்றடையும் என சயின்ஸ் என்கிற சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.


அதை மனநல நிபுணர்கள் 'நெகட்டிவ் பயாஸ்' என்று அழைக்கின்றனர். தங்களுக்கு எது நன்மை பயக்கும் என்பதில் கவனம் செலுத்துவதைவிட, எது தங்களுக்கு அபாயத்தை விளைவிக்கக் கூடியது என்பதில் மக்கள் கவனம் செலுத்தும் போது இந்த நெகட்டிவ் பயாஸ் ஏற்படுகிறது.


எதிர்மறையான விஷயங்களில் கவனம் செலுத்துவது மன அழுத்தப் பிரச்சனையை மோசமாக்கும் என்பது ஒரு கோட்பாடு. அது மேலும் பொய் செய்திகளை நம்ப வைக்கும்.

மன அழுத்தம்
கொரோனா, குரங்கு அம்மை வைரஸுக்கு அடுத்து இளைஞர்களை தாக்க போகும் பேராபத்து - விரிவான தகவல்

மனநலத்தைப் பேணிப் பாதுகாக்க உண்மை அவசியம்

எவர் ஒருவரின் மனதளவிலான தேவைகள் பூர்த்தி அடையவில்லையோ (உதாரணத்துக்கு தங்கள் வாழ்க்கை மீது போதிய கட்டுப்பாடு இல்லை என்று கருதுபவர்கள்) அவர்கள் கான்ஸ்பிரசி கோட்பாடுகளை ஏற்கக் கூடியவர்களாக இருக்கலாம் என ஆய்வு கூறுகிறது. தங்களைப் பலவீனமானவர்களாகக் கருதக் கூடியவர்கள், தாங்கள் நம்புவதைக் கட்டுப்படுத்த பொய் செய்திகளைப் பயன்படுத்தலாம்.

"பொய் செய்திகளை நம்புவது, பாதுகாப்பு இல்லாதது போல உணரச் செய்யும் என நாங்கள் கருதுகிறோம். அது மன அழுத்தம் மற்றும் மனக் கவலையை ஏற்படுத்தும்" என பவெல் தெப்ஸ்கி டாயிஷ் வில்லே ஊடகத்திடம் கூறியுள்ளார்.

மன அழுத்தம்
Anxiety : பயத்தை கையாள்வது எப்படி?

"ஊடகங்கள் மற்றும் இணையத்தில் தினமும் மன நலம் சார்ந்த பல தவறான புரிதல்களை நாம் எதிர்கொண்டு வருகிறோம்" என மைண்ட் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீஃபன் பக்ளி கூறினார்.

மேலும், எதிர்மறை எண்ணத்தை எதிர்கொள்வது, இப்பிரச்சனையை சமாளிக்க மிக அவசியமான ஒன்று. இது சமூக ரீதியில் தனிமைப்பட்டுச் செல்வதைச் சமாளிக்கவும் பொய் செய்திகளால் பாதிக்கப்படுவதைத் தடுக்கவும் உதவுமென அவர் கூறினார்.

எனவே மக்களின் மனநலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு உதவுவது என்பது, அவர்கள் சரியான தகவல் மீது நம்பிக்கை கொள்வதற்கும் உதவிக்கரமாக இருக்கலாம்.

மன அழுத்தம்
Depression - மன அழுத்தம் தப்பிப்பது எப்படி? | Nalam 360

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com