IIM Trichy: தமிழகம் வந்த ராஜஸ்தான் மாணவர்கள் - யுவா சங்கம் நிகழ்வில் என்னென்ன நடந்தது?

மாநிலத்தின் மொழி, கலாச்சாரம், மரபு, இசை, உணவு, உடை, பாரம்பரியம் ஆகியவற்றிலுள்ள பன்முகத் தன்மையை இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுப்பதே இதன் திட்டம்.
IIM Trichy: தமிழகம் வந்த ராஜஸ்தான் மாணவர்கள் - யுவா சங்கம் நிகழ்வில் என்னென்ன நடந்தது?
IIM Trichy: தமிழகம் வந்த ராஜஸ்தான் மாணவர்கள் - யுவா சங்கம் நிகழ்வில் என்னென்ன நடந்தது?Twitter
Published on

யுவா சங்கம் என்ற நிகழ்வு இந்திய மாணவர்களுக்காக கல்வி நிலையங்களில் நடத்தப்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களிடையே மற்றொரு மாநிலத்தின் சுற்றுலா, வளர்ச்சி, பாரம்பரியம், பரஸ்பர உறவு, தொழில்நுட்பம் ஆகியவற்றைக் குறித்த புரிதலை ஏற்படுத்தும் நிகழ்ச்சி.

மொழி, கலாச்சாரம், மரபு, இசை, உணவு, உடை, பாரம்பரியம் ஆகியவற்றிலுள்ள பன்முகத் தன்மையை இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுப்பதே இதன் திட்டம்.

கடந்த சில வருடங்களில், யுவா சங்கத்தின் முதல் கட்டம், 25 நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 1200 இளைஞர்களின் பங்கேற்புடனும், இரண்டாம் கட்டம், 20 நிறுவனங்களைச் சேர்ந்த 1000 இளைஞர்களின் பங்கேற்புடனும்  முடிவடைந்தது.

கீழடி ஆய்வு
கீழடி ஆய்வுதமிழக தொல்லியல் துறை

யுவா சங்கத்தின் மூன்றாம் கட்டம் தற்போது துவங்கியுள்ளது. அதில் தமிழக மாணவர்களை ஒருங்கிணைத்து ராஜஸ்தானிற்கு அனுப்பவும், தமிழகத்திற்கு வரும் ராஜஸ்தான் மாணவர்களை வழிநடத்தி, தமிழகக் கலாச்சாரத்தைக் கற்றுக் கொடுக்கவும்  இந்திய மேலாண்மைக் கழகம் (ஐ.ஐ. எம்) திருச்சிராப்பள்ளி பொறுப்பேற்றுள்ளது. 

வருவாய்த்துறையின் கூடுதல் ஆணையரான, நித்யா தலைமையில் தொடங்கப்பட்டது.

IIM Trichy: தமிழகம் வந்த ராஜஸ்தான் மாணவர்கள் - யுவா சங்கம் நிகழ்வில் என்னென்ன நடந்தது?
கீழடி அவிழும் மர்மம்: குதிரை எலும்புகள் ஏன் கவனிக்க வேண்டியவை? - சவால்விடும் மதுரை

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, ராஜஸ்தான் மாணவர்கள், தலைவாழை  விருந்து உண்டு, பல்லாங்குழி, கில்லி, சிலம்பம், கபடி ஆகிய விளையாட்டுகளை விளையாடி, கிராமிய நடனங்களைக் கண்டுகளித்து மகிழ்ந்தனர்.

IIM Trichy: தமிழகம் வந்த ராஜஸ்தான் மாணவர்கள் - யுவா சங்கம் நிகழ்வில் என்னென்ன நடந்தது?
தார் பாலைவனம்: இன்னும் 100 ஆண்டுகளில் பசுமையான காடாக மாறுமா? - என்ன சொல்கிறது புதிய ஆய்வு?

அவர்கள் 10 நாட்கள் இந்திய மேலாண்மைக் கழகத்தில் தங்கியிருந்து, தமிழகத்தின் வெவ்வேறு பண்பாட்டு மையங்களான, மதுரை கீழடி, திருச்சி மலைக்கோட்டை, தஞ்சாவூர் பெரியகோவில், ராமேஸ்வரம் தனுஷ்கோடி, சென்னை மாமல்லபுரம் ஆகியவற்றை, ஐ.ஐ.எம் அதிகாரிகளின் துணையோடு பார்வையிட உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

IIM Trichy: தமிழகம் வந்த ராஜஸ்தான் மாணவர்கள் - யுவா சங்கம் நிகழ்வில் என்னென்ன நடந்தது?
ராஜஸ்தான்: வெண்மை வழியும் நிலவு நிலம் - எப்படி உருவானது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com