இந்தியர்கள் 57 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம் - எப்படி?

பார்படாஸ், பிஜி, பூட்டான், மாலத்தீவு, டோகோ, செனகல், கஜகஸ்தான் போன்ற நாடுகள் இதில் அடக்கம். விசா இல்லாமல் பயணம் செய்வது எப்படி எனப் பார்க்கலாம்.
இந்தியர்கள் 57 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம் - எப்படி?
இந்தியர்கள் 57 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம் - எப்படி?Twitter
Published on

எல்லையே இல்லாமல் நம் நாட்டைக் கடந்து பல இடங்களுக்கு செல்ல வேண்டும் என்பது பயணம் செய்பவர்களின் கனவாக இருக்கும்.
இப்போது இந்தியர்கள் பர்படாஸ் சென்று கரீபியன் உணவுகளையும் ரம்மையும் சுவைக்கலாம். கசகஸ்தான் சென்று கண்கவரும் கட்டடக்கலையை பார்வையிடலாம். மிகவும் எளிதாக!

இந்தியாவின் பாஸ்போர்ட் ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டு அட்டவணையில் 7 இடங்கள் முன்னேறி 80வது இடத்தைப் பிடித்துள்ளது. இதில் நல்ல செய்தி என்னவென்றால் நம்மால் 57 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்.

பார்படாஸ், பிஜி, பூட்டான், மாலத்தீவு, டோகோ, செனகல், கஜகஸ்தான் போன்ற நாடுகள் இதில் அடக்கம். விசா இல்லாமல் பயணம் செய்வது எப்படி எனப் பார்க்கலாம்.

தேவையான ஆவணங்கள் : செல்லக்கூடிய பாஸ்போர்ட், விமானம் மற்றும் தங்குமிடம் குறித்த விவரங்கள், போதுமான அந்நிய செலவாணி. இவற்றுடன் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள், திரும்புவதற்கான டிக்கெட், 3 மாத வங்கி அறிக்கை மற்றும் கோவிட் 19 நெகடிவ் சான்றிதழ் ஆகியவற்றையும் வைத்திருக்க வேண்டும்.

Kazakhstan
Kazakhstan



தரையிறங்கியதும் ஆன்லைனிலோ அல்லது ஆஃப் லைனிலோ விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து பதிவு செய்ய வேண்டும். அதற்கான விண்ணப்ப கட்டணமும் செலுத்த வேண்டும்.

கஸ்டம்ஸ் ஆபிசர்கள் நம் பாஸ்போர்ட், பயண ஆவணங்கள், பணம் மற்றும் அடையாள அட்டையை வெரிஃபை செய்வார்கள்.

இப்படி விசா இல்லாமல் உள்நுழையும் நாடுகளில் இந்தியர்கள் ஒருவாரம் முதல் 3 மாதம் வரை தங்கலாம். ஒவ்வொரு நாட்டையும் பொருத்து மாறுபடும்.

இந்தியர்கள் 57 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம் - எப்படி?
New Year-க்கு எங்க ட்ரிப் போகலாம்? தவாங் முதல் ஷில்லாங் வரை - பார்க்க வேண்டிய இடங்கள்!

விசா இல்லாமல் சென்றாலும் நாம் விசாவில் குறிப்பிடப்படும் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது. கொண்டு செல்லும் மருந்துகளுக்கு முறையான மருத்துவர் சான்று இருக்க வேண்டும்.

எந்தெந்த நாடுகளில் எவ்வளவு நாட்கள் தங்கலாம் என்பற்கு சில உதாரணங்களைப் பார்க்கலாம்.

Barbados
Barbados



பார்படாஸ்: ஆறு மாதங்கள் வரை
மாலத்தீவுகள்: 90 நாட்கள் வரை.
மொரிஷியஸ்: 90 நாட்கள் வரை
நியு தீவு: 30 நாட்கள் வரை
செயின்ட் வின்சென்ட்: 30 நாட்கள் வரை
செனகல்: 90 நாட்கள் வரை
கஜகஸ்தான்: 14 நாட்கள் வரை
பிஜி: 12 நாட்கள் வரை
பூட்டான்: 7 நாட்கள் வரை

இந்தியர்கள் 57 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம் - எப்படி?
ஈராக் முதல் பாகிஸ்தான் வரை: இந்த நாடுகளின் பாஸ்போர்ட் ஏன் செல்வாக்கற்றவை?



இந்திய பாஸ்போர்டில் 57 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடிவது போல சிங்கப்பூர் பாஸ்போர்டில் 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம். இதனால் தான் உலகில் சக்திவாய்ந்த பாஸ்போர்டாக சிங்கப்பூர் பாஸ்போர்ட் இருக்கிறது.

ஐரோப்பிய நாடுகள் எதற்கும் இந்தியர்களால் விசா இல்லாமல் செல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியர்கள் 57 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம் - எப்படி?
ஐரோப்பா முழுவதும் தலையெடுக்கும் தீவிர வலதுசாரிகள், ஆபத்தில் ஜனநாயகம்: நமக்கு என்ன பாடம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com