ஈராக் முதல் பாகிஸ்தான் வரை: இந்த நாடுகளின் பாஸ்போர்ட் ஏன் செல்வாக்கற்றவை?

சிங்கப்பூரின் பாஸ்போர்ட் தான் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட். சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 192 நாடுகளுக்கு விசா இல்லாமல், அல்லது விசா ஆன் அரைவலில் பயணிக்கலாம்.
ஈராக் முதல் பாகிஸ்தான் வரை: இந்த நாடுகளின் பாஸ்போர்ட் ஏன் பலவீனமானவை?
ஈராக் முதல் பாகிஸ்தான் வரை: இந்த நாடுகளின் பாஸ்போர்ட் ஏன் பலவீனமானவை?canva
Published on

வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள ஒருவருக்கு பாஸ்போர்ட் மிக அவசியமானது. இதனை வைத்து தான் நம்மை மற்ற நாடுகளுக்குள் சட்ட ரீதியாக அனுமதிக்கிறார்கள் எனலாம்.

ஒரு வேளை இந்த பாஸ்போர்ட்டினை நாம் மிஸ் செய்துவிட்டால், இந்தியாவிற்கு (சொந்த நாட்டிற்கு) திரும்புவதில் பல சிக்கல்கள் ஏற்படும்.

உலக நாடுகள் எப்படி ஒன்றின் மீது ஒன்று ஆதிக்கம் செலுத்துகிறதோ அவ்வாறே அங்கு உள்நுழைய தேவையான கடவுச்சீட்டும் ஆதிக்கம் செலுத்துகிறது.

தற்போது சிங்கப்பூரின் பாஸ்போர்ட் தான் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட். சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 192 நாடுகளுக்கு விசா இல்லாமல், அல்லது விசா ஆன் அரைவலில் பயணிக்கலாம்.

உலகின் வலிமையற்ற, weakest passport கள் என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.

அதாவது ஒரு நாட்டின் பாஸ்போர்ட் எவ்வளவு பவர்புல் ஆக இருக்கிறதோ அதன் அடிப்படையில் நாம் குறிப்பிட்ட நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்

இந்த தரவுகள் 2023ஆம் ஆண்டுக்கானவை. ஒரு நபர் முன் விசா இல்லாமல் எத்தனை இடங்களை அணுகலாம் என்பதன் அடிப்படையில், அதிகாரப்பூர்வமாக வழங்கப்படுவது தான் இந்த ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ்.

இதில் உலகின் அனைத்து பாஸ்போர்ட்களும் அடங்கும். சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் (IATA) பிரத்தியேக தரவுகளின் அடிப்படையில் இந்த குறியீடு வழங்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தான்

ஹென்லி பாஸ்போர்ட் இண்டக்ஸின் படி ஆப்கான் நாட்டு கடவுச்சீட்டு உலகின் மிக பலவீனமான பாஸ்போர்ட் ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி 27 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாமல் பயணிக்கலாம்.

ஈராக்

இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள நாடு ஈராக். இந்த நாட்டின் கடவுச்சீட்டை நாம் வைத்திருந்தால் 29 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம். அரசியல் நிலையற்ற தன்மை, நாட்டிற்குள் நிலவும் தீவிரவாதம் வறுமை போன்ற காரணங்களால் இது வீக்கான பாஸ்போர்ட் பட்டியலில் இடம்பெற்றுள்ளது

சிரியா

உலகின் மூன்றாவது பலவீனமான பாஸ்போர்ட் சிரியா நாட்டினுடையது. இந்த பாஸ்போர்ட் வைத்து 30 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம். இங்கும் தீவிரவாதம், அரசியல் நிலையற்ற தன்மை உள்ளிட்ட காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன

பாகிஸ்தான்

இந்த பட்டியலில் நான்காம் இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் நாட்டு பாஸ்போர்ட் வைத்து 31 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம். தஜிகிஸ்தான், கேம்பியா உள்ளிட்ட நாடுகள் இதில் அடங்கும்.

யெமென்

இந்த பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் இலங்கை, சிரியா, சூடான் உள்ளிட்ட 33 நாடுகளுக்கு செல்லவேண்டும் என்றால் விசா தேவை இல்லை. மற்ற நாடுகளுக்கு செல்ல முன்னதாகவே விசா பெறுவது கட்டாமாக உள்ளது

ஈராக் முதல் பாகிஸ்தான் வரை: இந்த நாடுகளின் பாஸ்போர்ட் ஏன் பலவீனமானவை?
Vatican City: இங்கு குடியுரிமை கிடையாதா? உலகின் மிகச் சிறிய நாடு குறித்த சுவாரஸ்ய தகவல்கள்

சோமாலியா

சோமாலியா பாஸ்போர்ட் நம்மை 32 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க அனுமதிக்கிறது. சுகாதார பிரச்னைகள், சமூக நிலையற்ற தன்மை, வறுமை போன்ற காரணங்கள் முன்வைக்கப்படுகிறது

பாலஸ்தீனம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் காரணங்களால் இந்த நாட்டு பாஸ்போர்ட்டும் உலகின் பலவீனமான பாஸ்போர்ட்டாக கருதப்படுகிறது. 2023 தரவுகளின் படி பாலஸ்தீன பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 15 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்

ஈராக் முதல் பாகிஸ்தான் வரை: இந்த நாடுகளின் பாஸ்போர்ட் ஏன் பலவீனமானவை?
நேபாளம்: இங்கு இந்திய ரூபாய் செல்லுமா? அண்டை நாடு குறித்து அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்கள்

நேபாளம்

38 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாமல் பயணிக்க அனுமதிக்கிறது இந்த பாஸ்போர்ட். அதிலும் பெரும்பாலானவை ஆப்பிரிக்க நாடுகளே

வட கொரியா

இந்த பட்டியலில் வட கொரியாவுக்கும் இடமுண்டு. இதில் கவனிக்கப்படவேண்டிய விஷயம் என்னவென்றால் இங்குள்ளவர்களுக்கே பாஸ்போர்ட் கிடைப்பது கடினமாய் இருக்கிறது.

வட கொரியா பாஸ்போர்ட் உள்ளவர்கள் 39 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்

ஈராக் முதல் பாகிஸ்தான் வரை: இந்த நாடுகளின் பாஸ்போர்ட் ஏன் பலவீனமானவை?
உலகம் முழுவதும் பயணிக்க இவர்களுக்கு மட்டும் பாஸ்போர்ட் தேவையில்லையா? யாருக்கு இந்த சலுகை?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com