விமானத்தின் என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டறிய விமான போக்குவரத்து இயக்குநரகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் இருந்து பெங்களூரு செல்லும் இண்டிகோ விமானம் 6E-2131 இன்ஜின் தீப்பிடித்ததால், அவசரமாக நிறுத்தப்பட்டது மற்றும் பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை, விமானத்தில் இருந்த 177 பயணிகளும் 7 பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் போது விமானத்தில் இருந்த பயணி ஒருவர் தனது பயணத்தை 'பயங்கரமான அனுபவம்' என்று ட்விட்டரில் வீடியோவாக பகிர்ந்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்படும் அந்த வீடியோவில் பயணிகள் உதவிக்காக அழுவதைப் போலவும், விமானத்தின் எஞ்சினுக்கு அருகிலுள்ள பகுதிகளிலிருந்து தீப்பிழம்புகள் வெளியேறுவதைக் காணலாம்.
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய வட்டாரங்கள் கூறியதாவது:
டெல்லியில் இருந்து பெங்களூரு சென்ற இண்டிகோ விமானத்தின் இன்ஜினில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF) கட்டுப்பாட்டு அறைக்கு 22.08 மணி அளவில் அழைப்பு வந்தது. விமானத்தில் 177 பயணிகள் மற்றும் 7 பணியாளர்கள் இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
தீவிபத்து குறித்து விசாரணை நடத்த மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் நடந்த உடனேயே, இண்டிகோ ஏர்லைன்ஸ் ஒரு அறிவிப்பை வெளியிட்டது, "டெல்லியில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்படும் விமானம் 6E2131 புறப்படும்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது, உடனடியாக விமானி புறப்படுவதை நிறுத்திவிட்டு விமானம் திரும்பியது.
அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர். மேலும் மாற்று விமானத்தை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்." என்று தெரிவிக்கப்பட்டது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust