ஹெல்மெட் அணிந்து காய்கறி வியாபாரம் செய்யும் நபர்; என்ன காரணம்? - வீடியோ வைரல்

ஏன் ஹெல்மெட் அணிந்துள்ளீர்கள் என கேட்டதற்கு அவர் கூறிய பதில் வேடிக்கையாக இருந்தது.
helmet
helmetcanva
Published on

தலையில் ஹெல்மெட் அணிந்துகொண்டு தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார் ஒருவர்.

வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு போக்குவரத்து விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதில் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது ஒரு விதி. ஹெல்மெட் அணியாதவர்களை போக்குவரத்து காவல் துறையினர் பிடித்து அபராதம் விதிபார்கள். எனினும் சிலர் ஹெல்மெட் அணிவதில்லை.

helmet
கன்னித்தன்மை சோதனையில் தோற்றதால் மணப்பெண்ணுக்கு ரூ.10 லட்சம் அபராதம் : என்ன நடந்தது?

தற்போது ஹெல்மெட் அணிந்திருப்பவரின் வீடியோ ஒன்று டிவிட்டரில் கவனம் பெற்று வருகிறது. அதில் ஒருவர் ஹெல்மெட் அணிந்துக்கொண்டு தள்ளுவண்டியை நகர்த்தி செல்கிறார். அந்த பக்கமாக சென்ற மற்றொருவர் இதை கவனித்து ஹெல்மெட் அணிந்தவரிடம் பேச்சுக் கொடுக்கிறார்.

ஏன் ஹெல்மெட் அணிந்துள்ளீர்கள் என கேட்டதற்கு அவர் கூறிய பதில் வேடிக்கையாக இருந்தது. தற்போது ஹெல்மெட் அணியாதவர்களை திடீரென போலீசார் பிடிப்பதாகவும், ஒரு வேளை தன்னையும் பிடித்து அபராதம் விதித்துவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் தான் ஹெல்மெட் அணிந்துள்ளதாக அவர் தெரிவித்தார்

வீடியோ எடுப்பவர் அப்படியே மெல்ல அந்த கேமராவை பேன் செய்கிறார். ஹெல்மெட் அணிந்த அந்த நபர், தள்ளுவண்டியில் காய்கறி விற்பவர். காய்கறி வியாபாரியை வீடியோ எடுத்த நபர் ஹெல்மெட் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு மட்டும் தான் கட்டாயம் என விளக்கினார். அவரின் வீடியோ டிவிட்டரில் பகிரப்பட்டதிலிருந்து அதிக கவனத்தை பெற்று வருகிறது.

காய்கறி வியாபாரியின் வெகுளித்தனமான இந்த பேச்சு அனைவரது மனதை கவர்ந்துள்ளது. மற்றொரு பக்கம் மக்களிடம் சரியான விழிப்புணர்வு இல்லை என்றும், அபராதத்திற்கு பயந்து மக்கள் இவ்வாறு செய்வது வருத்தமளிக்கிறது என்ற பேச்சும் உள்ளது.

இதற்கு முன்னர் காரில் பயணித்த ஒருவர் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் அவருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

helmet
ஒரே நம்பர் பிளேட், இரு வேறு வாகனங்கள்...குழப்பத்தால் மாட்டி கொள்ளும் சார்டட் அகவுன்டன்ட்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com