‘அருந்ததி’ படம் பார்த்து மறுபிறவி எடுக்க்ப்போவதாக கூறி தீக்குளித்த 23 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் மதுகிரி தாலுகா கொண்டவாடி கிராமத்தை சேர்ந்தவர் ரேணுகா பிரசாத் (வயது 23). இவர் திரைப்படங்கள் பார்ப்பதில் அதிக ஆர்வமிக்கவராக இருந்துவந்துள்ளார். அதுமட்டுமின்றி திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்கள் போலத் தன்னை பாவித்துக் கொள்வதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகை அனுஷ்கா நடிப்பில், கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியாகிய ‘அருந்ததி’ திரைப்படத்தை, ரேணுகா பிரசாத் அடிக்கடி பார்த்து வந்து உள்ளார்.
அந்த படத்தில் அனுஷ்கா மறுபிறவி எடுத்து வரும் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அதே போன்று தானும் மறுபிறவி எடுத்து விடலாம் என்று கருதிய ரேணுகா பிரசாத் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்துள்ளார்.
உயிருக்குப் போராடிய அவரை பெங்களூரு மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ரேணுகா பிரசாத் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மதுகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust
Priya Rethinam45 minutes ago
Priya Rethinam1 hour ago
Keerthanaa R2 hours ago
NewsSense Editorial Team2 hours ago
Follow Us
Sections
Policies
Contact Us
News Needs
Newssense