‘மீன் பிரசாதம்’ மூலம் ஆஸ்துமாவை குணப்படுத்த முடியுமா? இந்த விநோத நிகழ்வின் பின்னணி என்ன?

நீண்ட சட்டப்போராட்டத்திற்கு பின்னர், மீன் மருந்து என்பதை மீன் பிரசாதம் என்று பத்தினி சகோதரர்கள் பெயர் மாற்றம் செய்தனர். சர்ச்சையை தொடர்ந்து மீன் பிரசாதத்தை சாப்பிடும் மக்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. தற்போது உள்ளூர் மக்கள் யாரும் அதிகளவில் இங்கு வருவதில்லை.
Is ‘Fish Prasadam’ A Legitimate Medicine Or Superstition?
Is ‘Fish Prasadam’ A Legitimate Medicine Or Superstition?Twitter
Published on

கிட்டதட்ட 170 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் ஹைதராபாத்தில் உள்ள நாம்பள்ளியில் உள்ள கண்காட்சி மைதானத்தில் குவிகின்றனர். ஹைதராபாத்துக்கு பெயர்போன பிரியாணிக்காக அல்ல, 'மீன் பிரசாதம்' சாப்பிடுவதற்காகவே மக்கள் அங்கு குவிகின்றனர்.

இது அஸ்துமாவை குணப்படுத்தும் என்று சிலர் நம்புகின்றனர். அதென்ன மீன் பிரசாதம் என விரிவாக இங்கே தெரிந்துகொள்வோம்.

ஹைதராபாத்தில் ஒவ்வொரு ஆண்டும் 'மீன் பிரசாதம்' நிகழ்வு நடைபெறும். இந்த நிகழ்வை பத்தினி கவுட் (Bathini) குடும்பம் என்பவர்கள் எடுத்து நடத்தி வருகின்றனர்.

1847 ஆம் ஆண்டு ஹைதராபாத்துக்கு வந்த ஒரு துறவி மீன் மூலம் மருந்து தயாரிக்கும் ரகசியத்தை தங்கள் முன்னோர்களுக்கு கூறியதாக பத்தினி கவுட் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

மீன் பிரசாதம் என்று தற்போது அறியப்படும் இதனை ஆரம்பத்தில் மீன் மருந்து என்றே கூறிருக்கின்றனர். உயிருள்ள 'முரல்' மீனை அதன் வாயில் மஞ்சள் மூலிகை பேஸ்டை சேர்த்து நோயாளிகளை விழுங்க வைக்கிறார்கள்.

Is ‘Fish Prasadam’ A Legitimate Medicine Or Superstition?
பச்சை கிளி முதல் வண்ண மீன்கள் வரை : வீட்டில் வளர்க்கக் கூடாத உயிரினங்கள் எவை?

ஆஸ்துமாவுக்கு 100 சதவீதம் சிகிச்சை பலன் தருவதாகக் கூறுகிறார்கள். இது தொடர்ந்து மூன்று ஆண்டுகள் எடுத்துக் கொண்டால் நிவாரணம் தருவதாக நம்பினர். சைவ உணவு உண்பவர்களுக்கு வெல்லத்துடன் மருந்து வழங்கப்படுகிறது.

கடந்த 20 ஆண்டுகளாக அலோபதி மருத்துவர்கள், மூடநம்பிக்கைக்கு எதிரான அமைப்புகள் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்ததோடு , மருந்து என்பதற்கான ஆதாரத்தை கேட்டனர்.

இது தொடர்பாக ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தங்களுக்கு எதிராக அலோபதி மருந்து நிறுவனங்கள் செய்யும் சதி என இதனை பத்தினி குடும்பத்தினர் வாதாடினர்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த நுரையீரல் நிபுணர் டாக்டர் அஜித் விக் கூறுகையில், “இந்த மீன் பிரசாதம் முற்றிலும் அறிவியல் பூர்வமற்றது. இந்த மருந்தை உட்கொண்ட பிறகு கடுமையான ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் நிலை மோசமடைந்ததாக இதுவரை நிறைய வழக்குகள் பதிவாகியுள்ளன. மேலும், உயிருள்ள மீன்களை சாப்பிடுவதால் செரிமான பிரச்னையும் ஏற்படும்” என்கின்றார்.

நீண்ட சட்டப்போராட்டத்திற்கு பின்னர், மீன் மருந்து என்பதை மீன் பிரசாதம் என்று பத்தினி சகோதரர்கள் பெயர் மாற்றம் செய்தனர்.

சர்ச்சையை தொடர்ந்து மீன் பிரசாதத்தை சாப்பிடும் மக்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. தற்போது உள்ளூர் மக்கள் யாரும் அதிகளவில் இங்கு வருவதில்லை. வட மாநிலங்களில் இருந்துதான் மக்கள் வருகின்றனர்.

Is ‘Fish Prasadam’ A Legitimate Medicine Or Superstition?
நாம மீனை சாப்பிடுவோம், ஆனா நம்மளேயே சாப்பிடுற மீன்கள் பற்றி தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com