பச்சை கிளி முதல் வண்ண மீன்கள் வரை : வீட்டில் வளர்க்கக் கூடாத உயிரினங்கள் எவை?

கிளி மட்டுமல்ல தவறுதலாக நாம் வீட்டில் வளர்க்க நேரிடக் கூடிய சில விலங்குகள், பறவைகளின் பட்டியலை இங்கு கொடுத்துள்ளோம்.
பச்சை கிளி முதல் வண்ண மீன்கள் வரை : வீட்டில் வளர்க்கக் கூடாத உயிரினங்கள் எவை?
பச்சை கிளி முதல் வண்ண மீன்கள் வரை : வீட்டில் வளர்க்கக் கூடாத உயிரினங்கள் எவை?Twitter

ஒரு யூடியூபில் வீடியோவில் நடிகர் மற்றும் தொலைக்காட்சி பிரபலம் ரோபோ ஷங்கர் வீட்டில் பச்சை கிளி வளர்த்தது வெளியே தெரிந்தது.

இதனால் அவருக்கு 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. பொதுவாக பலர் பச்சை கிளி வளர்த்த கதைகளை நாம் கேட்டிருப்போம்.

சில இன்ஸ்டாகிராம் வீடியோக்களை கூட பார்த்திருக்கலாம். இதனால் நீங்கள் கிளி வளர்ப்பதை சாதாரண ஒன்றாக நினைத்திருக்கலாம்.

ஆனால் அது சட்டப்படி குற்றமாகும். சாதாரண குற்றம் அல்ல சில வேளைகளில் அது உங்களை சிறையில் கூட தள்ளிவிடக் கூடும்.

கிளி மட்டுமல்ல தவறுதலாக நாம் வீட்டில் வளர்க்க நேரிடக் கூடிய சில விலங்குகள், பறவைகளின் பட்டியலை இங்கு கொடுத்துள்ளோம்.

பறவைகள்

பறவைகளை செல்லபிராணிகளாக சிறையில் பிடித்து வைப்பது நிச்சயமாக கொடுமையானது. எந்த வகையிலும் அந்த பறவைக்கு நாம் செய்வது உதவியாகவோ, நியாயமானதாகவோ இருக்காது.

பச்சை கிளி வகைகள், சிகப்பு முனியா, காட்டு மைனா உள்ளிட்ட பறப்வைகள் வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தால் பாதுகாப்படுகின்றன.

ஆப்பிரிக்க சாம்பல் பறவை (African grey parrot), செந்நீல ஐவண்ணக்கிளி (Blue-throated Macaw), மஞ்சள்கொண்டை கிளி ஆகிய பறவைகள் காட்டு விலங்கினங்கள் மற்றும் தாவரங்களின் அழிந்து வரும் உயிரினங்களில் சர்வதேச வர்த்தக மாநாட்டில் வகைப்படுத்தப்பட்டது.

இதனால் இவற்றை வளர்ப்பது சட்டப்படி குற்றமாகும்.

ஆமைகள்

அழிந்து வரும் உயிரினங்களாக வகைப்படுத்தப்பட்ட ஆமைகள் மற்றும் கடலாமைகளை வளர்ப்பது இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.

சிலருக்கு அழிந்து வரும் ஆமை இனங்களுக்கும், சாதாரண ஆமை இனங்களுக்கும் வித்தியாசம் தெரியாது என்பதனால் தவறுதலாக அவற்றை வாங்கிவிடக் கூடும்.

இந்திய நட்சத்திர ஆமைகள், சிவப்புக் காது ஆமைகள் உள்ளிட்டவை வளர்ப்பதற்கு தடை செய்யப்பட்ட ஆமைகள் ஆகும்.

பச்சை கிளி முதல் வண்ண மீன்கள் வரை : வீட்டில் வளர்க்கக் கூடாத உயிரினங்கள் எவை?
பாம்புகள் பாதுகாக்கும் ஒரு காவல்நிலையம் - எங்கே?
மேனாட்டிகள்
மேனாட்டிகள்

மீன்கள்

வீட்டு மீன் தொட்டியில் வண்ண வண்ணமான மீன்களைப் வளர்ப்பது நம் இதயத்துக்கு கூட நல்லது எனக் கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஆனால் நாம் நினைக்கும் அத்தனை மீன்களையும் வீட்டில் வளர்க்க முடியாது. உதாரணமாக கடலின் உப்புத் தன்மை இல்லாமல் பல மீன்கள் இறந்துவிடும்.

செடான்சியஸ் என்ற வகை மீனை வெளிநாடுகளில் சுற்றுலாத்தளங்களில் வளர்க்கப்படுவதை பார்த்திருப்போம்.

அவற்றை இந்தியாவில் வளர்கக் கூடாது. மேலும், பென்குயின்கள், நீர்நாய்கள் மற்றும் மேனாட்டிகள் போன்றவையும் வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தால் வளர்க்க தடை செய்யப்பட்டுள்ளன.

இன்னும் சில அழிந்து வரும் மீன் இனங்களும் விற்கவும் வளர்க்கவும் தடை செய்யப்பட்டுள்ளன.

பாம்புகள்

இந்தியா என்றாலே ஹாலிவுட் படங்களில் பாம்புகளை வசப்படுத்தும் மகுடி கலைஞர்கள் தான் காட்சிப்படுத்தப்படுவார்கள்.

ஆனால் இந்தியாவில் பாம்புகளை வளர்ப்பதும், வர்த்தகம் செய்வதும் சட்டப்படி குற்றமாகும். பெரும்பாலான பாம்புகள் காட்டில் இருந்து எடுத்துவரப்பட்டு பழக்கப்படுத்தும் போது இறந்துவிடுகின்றன.

ஆனால் காடுகள் அழிப்பு போன்ற காரணங்களால் பல நேரங்களில் நாம் அழைக்காமலே பாம்புகள் நம் வீடுகளுக்குள் புகுந்து விருகின்றன.

பச்சை கிளி முதல் வண்ண மீன்கள் வரை : வீட்டில் வளர்க்கக் கூடாத உயிரினங்கள் எவை?
இந்தோனேசியா : 504 புத்தர்கள், அழிந்து வரும் உயிரிகள்- தீவுநாட்டின் 8 விசித்திர உண்மைகள்!

குரங்கள்

குரங்குகள் இந்தியக் கலாச்சாரத்தில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கின்றன.

குரங்குகளை கடவுளாக வணங்கும் மக்களும், அதே குரங்குகளின் கால்களில் சங்கிலி கட்டி வயிற்றுப் பிழைப்புக்கு வீதிகளில் வித்தைக் காட்டியவர்களும் இந்தியாவில் இருந்தனர்.

பிசிஏ சட்டம் 1960, பிரிவு 22 (ii) படி குரங்குகளை வளர்ப்பதும் பயிற்சி அளிப்பதும் சட்டப்படி குற்றமாகும்.

பச்சை கிளி முதல் வண்ண மீன்கள் வரை : வீட்டில் வளர்க்கக் கூடாத உயிரினங்கள் எவை?
ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்தும் குரங்குகள் - வைரலாகும் வீடியோ

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com