1000 ரூபாய் நோட்டு மீண்டும் வர போகிறதா? RBI சொல்வதென்ன? Fact Check

போதுமான பணப்புழக்கத்திற்காக, ரிசர்வ் வங்கி, 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டுள்ளது. ரூபாய் நோட்டு பற்றாக்குறை சிக்கல்களை நிவர்த்தி செய்ததுள்ளது ரிசர்வ் வங்கி. மேலும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளால் ரூபாய் நோட்டுகளுக்கான தேவை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Is Rs 1000 note making a comeback? Here's what you need to know
Is Rs 1000 note making a comeback? Here's what you need to knowTwitter
Published on

கடந்த மே மாதம் 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதனையடுத்து 1,000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் வர போவதாக தகவல்கள் உலா வந்தன.

செப்டம்பர் 30-ம் தேதி நிலவரப்படி, 87 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளன. இன்னும் ரூ.10 ஆயிரம் கோடி புழக்கத்தில் உள்ளது.

இந்நிலையில், 1,000 ரூபாய் நோட்டுகள் தொடர்பான வதந்திகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) முற்றுப்புள்ளி வந்துள்ளது. 1,000 ரூபாய் நோட்டை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று ஆர்பிஐ உறுதிபடுத்தி உள்ளது.

ANIன் x பக்கத்தில் 1,000 ரூபாய் நோட்டை மீண்டும் அறிமுகம் செய்வது குறித்து ரிசர்வ் வங்கி பரிசீலனை செய்யவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

போதுமான பணப்புழக்கத்திற்காக, ரிசர்வ் வங்கி, 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டுள்ளது. ரூபாய் நோட்டு பற்றாக்குறை சிக்கல்களை நிவர்த்தி செய்ததுள்ளது ரிசர்வ் வங்கி. மேலும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளால் ரூபாய் நோட்டுகளுக்கான தேவை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரமற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என பொதுமக்களை ரிசர்வ் வங்கி எச்சரிக்கிறது.

Is Rs 1000 note making a comeback? Here's what you need to know
2,000 ரூபாய் நோட்டுகள் நீக்கம் - இந்திய கரன்சி நோட்டுகளை அச்சடிக்க எவ்வளவு செலவாகும்?
RBI
RBI Twitter

2016 பணமதிப்பிழப்பில், பழைய ரூ.1,000 மற்றும் ரூ.500 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டு, அதற்குப் பதிலாக புதிய ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகள் அச்சட்டிக்கப்பட்டது. மற்ற வகை ரூபாய் நோட்டுகள் போதுமான அளவில் கிடைத்தவுடன் 2018-19ல் ரூ.2,000 நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டது.

2000 ரூபாய் நோட்டுகளை வைத்திருக்கும் பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றவோ அல்லது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யவோ முதலில் கேட்கப்பட்டது. கடைசி தேதி அக்டோபர் 7 வரை நீட்டிக்கப்பட்டது.

2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கும் மாற்றுவதற்குமான காலக்கெடு சமீபத்தில் முடிவடைந்ததையடுத்து, அவற்றின் புழக்கம் முடிவுக்கு வந்துள்ளது.

ரிசர்வ் வங்கி தகவலின்படி, 500, 1000 மற்றும் 10000 ரூபாய் நோட்டுகள் முதன்முதலில் ஜனவரி 1946ல் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டன. 1000, 5000 மற்றும் 10,000 ரூபாய் நோட்டுகள் 1954 ஆம் ஆண்டும், 1978 ஆம் ஆண்டிலும் மீண்டும் பணமதிப்பு செய்யப்பட்டன. பின்பு நவம்பர் 8, 2016ம் ஆண்டு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டன.

Is Rs 1000 note making a comeback? Here's what you need to know
2000 ரூபாய் நோட்டுகள் ஏன் அறிமுகப்படுத்தப்பட்டன? ஏன் திரும்பப் பெறப்படுகின்றன? - Explained

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com