ஜல் மஹால்: நீருக்குள் இருக்கும் முகலாயக் கட்டிடக் கலை - அரண்மனையின் அடடே கதை!

நீருக்குள் இருக்கும் இந்த அரண்மனை, மிதக்கும் அரண்மனை அல்லது நீர் அரண்மனை போன்ற பல்வேறு பெயர்களால் அறியப்படுகிறது.
ஜல் மஹால்
ஜல் மஹால்canva
Published on

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் நகரத்தின் மன் சாகர் ஏரியின் நடுவில் அமைந்த அழகிய அரண்மனை ஆகும் ஜல் மஹால்.

நீருக்குள் இருக்கும் இந்த அரண்மனை, மிதக்கும் அரண்மனை அல்லது நீர் அரண்மனை போன்ற பல்வேறு பெயர்களால் அறியப்படுகிறது.

18 ஆம் நூற்றாண்டில் ஜல் மஹாலை மகாராஜா ஜெய்சிங் நிறுவினார். ஜெய்ப்பூர் நகரத்திலிருந்து 4 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஜல் மகால் 300 ஏக்கர் பரப்பளவை கொண்டது.

இந்த நீர் அரண்மனை, ராஜபுத்திர - முகலாயக் கட்டிடக் கலையில் கட்டப்பட்டது.

அதன்பின்னர் அந்த அரண்மனை புணரமைக்கப்பட்டது. ஐந்து அடுக்குகளை கொண்ட இந்த அரண்மனை சிவப்பு மணற்கல்லால் கட்டப்பட்டது.

கிட்டதட்ட 15 அடி ஆழம் கொண்ட ஏரியில் நீர் முமுமையாக நிரம்பும் போது, ஜல் மஹாலின் முதல் நான்கு அடுக்குகள் நீரில் மூழ்கிவிடும். ஐந்தாம் அடுக்கு மட்டும் வெளியே காட்சியளித்து காண்போரை வியக்க வைக்கும்.

ஜல் மஹால்
மறைக்கப்பட்ட அரண்மனை : மழை காலத்தில் நீங்கள் நிச்சயம் போக வேண்டிய இடங்களில் ஒன்று இது

இது முகலாய-ராஜ்புத் காலத்தின் கட்டுமானத்தின் தரத்தைக் காட்டுகிறது.

இதன் முதல் தளத்தில் உள்ள நடைபாதைகள் மற்றும் பிரம்மாண்ட அறைகள், அழகான ஓவியங்கள், வளைந்த பாதைகளுடன் கூடிய தோட்டம், அரண்மனையின் ஒவ்வொரு மூலையிலும் அரை எண்கோண கோபுரங்கள் என அனைத்து அரண்மனையை அலங்கரித்துள்ளது.

ஜெய்ப்பூரின் வடகிழக்கில் அமைந்த ஆரவல்லி மலைத்தொடர்களின் அடிவாரத்தின், நிலப்பரப்பே, ஜல் மகால் ஏரியின் நீர் பிடிப்பு பகுதியாகும்.

பராமரிப்பு பணி நடைபெறுவதால், ஜல் மஹால் சுற்றுலாப் பயணிகளுக்கு திறக்கப்படவில்லை. இருப்பினும் நீங்கள் ஏரியில் படகு சவாரி செய்வதன் மூலம் அரண்மனையின் காட்சியை அனுபவிக்க முடியும்.

ஜல் மஹால்
Taj Mahal : கருப்பு தாஜ்மஹால் கட்ட விரும்பினாரா ஷாஜகான்? - ஓர் இருண்ட வரலாறு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com