Taj Mahal : கருப்பு தாஜ்மஹால் கட்ட விரும்பினாரா ஷாஜகான்? - ஓர் இருண்ட வரலாறு

ஷாஜகான் ஒரு கருப்பு தாஜ்மஹாலைக் கட்ட விரும்புகினாரா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், யமுனை நதியின் இருபுறமும் இரண்டு தாஜ்மஹால்கள் ஒன்றையொன்று எதிர்கொள்ளும் படம் பலரின் கற்பனையில் தொடர்ந்து இருந்து வருகிறது.
What if there was a black Taj Mahal in India?
What if there was a black Taj Mahal in India?Twitter
Published on

உலக அதிசயங்களில் ஒன்றாகவும், காதலின் நினைவுச்சின்னமாகவும் விளங்கும் தாஜ்மஹால் இந்தியாவின் சிறந்த கட்டிட கலைகளில் முக்கியமானதாகவும் பார்க்கப்படுகிறது.

இந்த தாஜ்மஹாலை சுற்றி பல கட்டுகதைகள் உலா வருகின்றன.

அவற்றில் ஒன்று தான் இந்த கருப்பு தாஜ்மஹால்! முகலாய பேரரசர் ஷாஜகான் தாஜ்மஹாலின் பிரதியை யமுனை ஆற்றின் எதிர்புறத்தில் கருப்பு பளிங்கில் கட்ட திட்டமிட்டார் என்ற தகவல் சுற்றுலா பயணிகள் மத்தியில் உலா வருகிறது. அது உண்மையா? வேறு என்னென்ன கட்டுக்கதைகள் தாஜ்மஹாலை சுற்றி வருகிறது, அதன் உண்மை என்ன என்பது குறித்து இங்கே தெரிந்துக் கொள்வோம்.

முகலாயப் பேரரசர் ஷாஜகான் தனது மனைவியான மும்தாஜை எவ்வளவு நேசித்தார் என்பதற்கு அளவே இல்லை என்று காட்டும் நினைவுச் சின்னம்தான் தாஜ்மஹால்.

கரும்பு தாஜ்மஹாலை கட்ட விரும்பினாரா?

ஆக்ராவில் தற்போது இருக்கும் வெள்ளை தாஜ்மஹாலை போன்று கருப்பு தாஜ்மஹாலை கட்ட விரும்பினாராம் ஷாஜஹான்.

"கருப்பு பளிங்கு கற்களை கொண்டு தாஜ்மஹாலைப் போன்ற மற்றொரு பிரம்மாண்ட கட்டுமானத்தைக் கட்டவேண்டும் என்பது ஷாஜஹானின் விருப்பம்" என்று கூறுகிறது உத்தரபிரதேச மாநில அரசின் தாஜ்மஹால் வலைதளம்.

இந்த இரண்டாவது தாஜ்மஹால் பேரரசரின் கல்லறையாக இருக்க வேண்டும் என்று அவர் நினைத்ததாக கூறப்படுகிறது. அப்போ ஷாஜகான் தனது மனைவியுடன் அடக்கம் செய்யப்பட விரும்பவில்லையா?

What if there was a black Taj Mahal in India?
இதுவல்லவா காதல்! ஹாரி முதல் எட்வர்ட் வரை- காதலுக்காக பட்டத்தை துறந்த அரச குடும்பத்தினர்

ஏன் கட்டப்படவில்லை?

யமுனை நதியின் மறுபுறத்தில் மாஹ்தாப் பாக் பகுதியில் கருப்பு தாஜ்மஹால் கட்ட திட்டமிடப்பட்டது.

ஷாஜகான் இந்தக் கல்லறையைக் கட்டத் தொடங்கினார், ஆனால் ஆக்ரா கோட்டையில் அவரது மகன் ஔரங்கசீப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அவர் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு அதை முழுமையடையாமல் விட்டுவிட்டார் என்று கதைகள் கூறுகின்றன.

ஆக்ரா கோட்டையில் உள்ள ஜன்னலில் இருந்து தாஜ்மஹாலைப் பார்த்துக் கொண்டே, சில ஆண்டுகளை அவர் கழித்ததாகக் கூறப்படுகிறது.

1665ஆம் ஆண்டு ஆக்ரா வருகை தந்த ஐரோப்பிய எழுத்தாளர் ஜென் பாப்டிஸ்ட்டின் (Jen-Baptiz)பயணக்கட்டுரையான Les Six Voyages De Jean Baptiste Tavernier இல் உள்ளது.

What if there was a black Taj Mahal in India?
தாஜ்மஹால் : ஷாஜகான் மும்தாஜ் காதல் மற்றும் சோகத்தின் கதை - ஒரு வரலாற்று பயணம்

1640 மற்றும் 1655 ஆம் ஆண்டுகளில் முகலாய தலைநகர் ஆக்ராவிற்கு விஜயம் செய்த ஜென், ஷாஜஹான் ஆற்றின் எதிர்புறத்தில் தனது சொந்த கல்லறையை கட்டத் தொடங்கினார், ஆனால் அவரது மகன்களுடன் நடந்த போர்கள் காரணமாக நிறுத்தப்பட்டதாக எழுதினார்.

ஷாஜஹான் இரண்டு கல்லறைகளையும் யமுனை ஆற்றின் குறுக்கே ஒரு பாலத்துடன் இணைக்க விரும்பினார் என்றும் உள்ளூர் புராணங்கள் கூறுகின்றன.

ஆனால் இது கற்பனைக் கதை என்பதே வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாக இருக்கிறது.

கருப்பு தாஜ்மஹால் கதையில் எந்த உண்மையும் இல்லை. இது ஒரு கற்பனை என்கின்றனர். ஏனெனில் ஜென் தவிர, மற்ற சமகால பதிவுகளில் அது பற்றிய குறிப்பு எதுவும் இல்லை.

இப்பகுதியில் தொல்லியல் துறையின் அகழ்வாராய்ச்சியிலும் அத்தகைய கட்டிடம் கட்டப்பட்டதற்கான எந்த தடயமும் கிடைக்கவில்லை. மஹ்தாப் பாக்கில் கருப்பு பளிங்கு இடிபாடுகள் காணப்பட்டாலும், அவை பல ஆண்டுகளாக நிறமாற்றம் அடைந்த வெள்ளைக் கற்கள் என்று முடிவுக்கு வந்தனர்.

மேலும் வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மத்தியில் தாஜ்மஹால் பற்றி நிறைய கதைகள் உலாவுகின்றன. இத்தகைய கதைகள் சுற்றுலா வழிகாட்டிகளால் புனையப்பட்டு, பரப்பப்படுகின்றன என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

ஷாஜகான் ஒரு கருப்பு தாஜ்மஹாலைக் கட்ட விரும்புகிறாரா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், யமுனை நதியின் இருபுறமும் இரண்டு தாஜ்மஹால்கள் ஒன்றையொன்று எதிர்கொள்ளும் படம் பலரின் கற்பனையில் தொடர்ந்து இருந்து வருகிறது.

What if there was a black Taj Mahal in India?
தாஜ்மஹால் : 'தேஜோ மஹாலயா' எனும் சிவன் கோயிலா? - தொடரும் சர்ச்சை | விரிவான கட்டுரை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com