காலை எழுவது முதல் இரவு உறங்குவது வரை தினசரி நம் செயல்பாடுகள் மின்சாரம் இல்லாமல் நடக்குமா? கண்டிப்பாக இல்லை. மின்சாரம் இல்லாமல் சில மணிநேரங்கள் கூட நம்மால் தாக்குப்பிடிக்க முடியாது என்பது தான் உண்மை.
ஆனால் கர்நாடக மாநிலத்தில் இருக்கும் ஒருவர் பல முறை மின்சார வாரியத்தில் முறையிட்டும் அவருக்கு உரிய மின்வசதி செய்துகொடுக்கப்பட வில்லை. இதனால் பல விதங்களில் அவதிப்பட்ட அவர் அந்த நிலைக்கு வேறு வகையில் தீர்வுகாணத் தொடங்கிவிட்டார்.
மின்சாரத்தின் அத்தியாவசியத் தேவை என்ன? நாமெல்லாம் ஃபேன் அல்லது ஏசி என்போம் மொபைலுக்கு சார்ஜ் போடுவது என்போம். ஆனால் உண்மையிலேயே அம்மாக்களுக்குத் தான் தெரியும் சமையலுக்கு மின்சாரம் எவ்வளவு முக்கியமென்பது. கர்நாடகாவைச் சேர்ந்த அந்த நபர் தினசரி தனது மிக்சியை மின்சாரத்துறை அலுவலகத்துக்கு எடுத்துச் சென்று சமையலுக்குத் தேவையானவற்றை அரைத்து வருகிறார். சில சமயங்களில் செல்போனையும் அங்கு சார்ஜ் செய்கிறார்.
தனது வீட்டில் மின்சாரம் இல்லாதது குறித்து ஒவ்வொரு நாளும் ஹனுமந்தப்பா எனும் நபர் MESCOM (மங்களூர் மின்சார நிறுவனம்) அதிகாரிகளிடம் முறையிட்டு வருகிறார். எனினும் அவரது பிரச்னை தீர்ந்தபாடில்லை.
இதனால், மிக இயல்பாக ஹனுமந்தப்பா மின்சார அலுவலகத்துக்குச் சென்று தேவயான மசாலக்களை மிக்சியில் அரைக்கிறார். இதர பணிகளை செய்கிறார். அவரை யாரும் எதுவும் கேட்பதில்லை. இந்த வழக்கம் கடந்த 10 மாதங்களாக நீடித்து வருகிறது. தினசரி அவர் வீட்டில் 3-4 மணிநேரம் மட்டுமே மின்சாரம் இருப்பதால், அவரது அன்றாட வேலைகள் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதுவரை அவருக்கு சாதகமான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நீயூஸ் 18 செய்தி தளம் கூறுவதுப்படி, “மழை காரணமாக ஐபி செட்களை சார்ஜ் செய்ய முடியவில்லை” என MESCOM அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார். ஒரு மாத காலத்துக்குள் ஹனுமந்தப்பா -வின் பிரச்னை தீர்க்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust