காஷ்மீர்: வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள் - ஏன்?

பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் வான்வழி பயணமும் சிரமமானது. துரிதமாக யோசித்த ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர், குப்ராவிலுள்ள மகப்பேறு நிபுணர், மருத்துவர் பர்வீஸ் அகமதை தொடர்பு கொண்டார்.
newborn baby
newborn babyTwitter
Published on

காஷ்மீரில் கர்ப்பிணி பெண்ணுக்கு வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் பிரசவம் பார்த்து வெற்றிக்கண்டுள்ளனர் மருத்துவர்கள்.

காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் அமைந்திருக்கிறது கரேன் என்ற கிராமம். கடந்த வியாழன் வெள்ளிக்கிழமைகளில் அங்கு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் கரேன் கிராமத்திற்கு போக்குவரத்து ரத்தானது.

கரேன் கிராமத்தில் வசிக்கும் ஷாஹிதா ஹமீத் என்ற கர்ப்பிணிப் பெண் ஒருவர் அச்சமயம் பிரசவ வலியால் துடித்துள்ளார். கிராமத்தின் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், உடல்நிலை பாதிப்புகள் அவருக்கு இருந்தது. இதனால் அவரை மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளிக்க மருத்துவர்கள் திட்டமிட்டனர்

ஆனால் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் வான்வழி பயணமும் சிரமமானது. துரிதமாக யோசித்த ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர், குப்ராவிலுள்ள மகப்பேறு நிபுணர், மருத்துவர் பர்வீஸ் அகமதை தொடர்பு கொண்டார்.

மருத்துவர் பர்வீஸ் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலமாக ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களை வழிநடத்தினார். மருத்துவர் அர்ஷத் சோஃபி அப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார்

newborn baby
நான்கு கால்களுடன் பிறந்த பெண் குழந்தை! மருத்துவர்கள் சொல்லும் காரணம் என்ன?

சுமார் ஆறு மணி நேர சிகிச்சைக்கு பின்னர், பெண் குழந்தையை பெற்றெடுத்தார் ஷாஹிதா. தாயும் சேயும் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவர் அர்ஷத் சோஃபி தெரிவித்திருக்கிறார்

வளர்ந்து வரும் தொழில்நுட்பம், 4ஜி 5 ஜி போன்ற அதி நவீன இணைய சேவைகள் மனிதர்களின் உயிரை காக்க பேருதவியாக திகழ்கிறது!

newborn baby
நள்ளிரவில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த பெண் காவலர் - ஓர் நெகிழ்ச்சி சம்பவம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com