இந்தியாவில் முதன்முறையாக மின்சாரம் பெறும் கிராமம் - நடனம் ஆடி கொண்டாடிய மக்கள் - எங்கே?

75 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக மின்சாரம் கிடைத்துள்ளதால் அந்த கிராமத்தில் வசிப்பவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Kashmir village gets electricity for the first time after India’s Independence
Kashmir village gets electricity for the first time after India’s IndependenceTwitter
Published on

தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள டெத்தனில் பழங்குடியினர் வசிக்கும் ஒரு குக்கிராமம் உள்ளது.

சுமார் 200க்கும் மேற்பட்ட மக்களை கொண்ட இந்த கிராமம் மின்சார வசதியில்லாமல் தவித்து வந்துள்ளது.

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு பின் இந்த கிராமத்திற்கு மின் இணைப்பு இந்திய அரசால் தற்போது வழங்கப்பட்டுள்ளது.

Electricity
ElectricityTwitter

இந்த கிராமம் இப்போது பிரதமரின் மேம்பாட்டுத் தொகுப்பு என்ற இந்திய மத்திய அரசின் திட்டத்தின் கீழ் மின்சாரத்தைப் பெற்றுள்ளது.

75 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக முதல் மின் விளக்கு எரிந்ததால் அந்த கிராமத்தில் வசிப்பவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

கடந்த 75 ஆண்டுகளாக, இந்த கிராம மக்கள் தங்கள் தேவைக்காக மரத்துண்டுகளையே நம்பியிருக்க வேண்டி இருந்தது. இதோடு எண்ணெய் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்தியை பயன்படுத்தி வந்துள்ளனர்.

Kashmir village gets electricity for the first time after India’s Independence
காஷ்மீர் : பொட்டு வைக்க கூடாது; ஹிஜாப் அணிய கூடாது - 2 பெண் குழந்தைகளை தாக்கிய ஆசிரியர்
Electricity
ElectricityPexels

இதுகுறித்து அந்த கிராமத்தினைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில்,

"இன்று முதல் முறையாக மின்சாரத்தைப் பார்த்தோம். எங்கள் குழந்தைகள் இப்போது மின்சார வெளிச்சத்தில் படிப்பார்கள். அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

இதுவரை எங்களின் தேவைகளுக்கு மரத்தையே நம்பியிருந்தோம். தற்போது எங்களது பிரச்னைகள் தீர்க்கப்பட்டுள்ளன. மின்சாரம் வழங்கியதற்காக அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறைக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" என அவர் கூறினார்.

Kashmir village gets electricity for the first time after India’s Independence
காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் நடத்தும் கஃபே - குவியும் சுற்றுலா பயணிகள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com