நாட்டிலேயே முதன் முறையாக கர்ப்பம் தரித்து குழந்தை பெற்ற திருநம்பி- தம்பதியினர் நெகிழ்ச்சி!

சஹத், ஆணாக மாறும் சமயத்தில் அவரது மார்பகங்கள் அகற்றப்பட்டபோதிலும், கர்ப்பப்பை அகற்றப்படாமல் இருந்ததால், அவர் கருவுற முடியும் என்ற செய்தி அவர்களை இன்பக் கடலில் ஆழ்த்தியுள்ளது.
Kerala Trans Couple Finally Welcome Their Baby
Kerala Trans Couple Finally Welcome Their BabyTwitter
Published on

இந்தியாவின் முதல் மாற்று பாலின தம்பதியான கேரளாவை சேர்ந்த சஹத் ஜியா தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளது.

கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சஹத் ஜியா தம்பதி. சஹத் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஜியா ஒரு நடனக் கலைஞர். இவர்கள் இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்த காதல் தம்பதிக்கு குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக இருந்துள்ளது. முதலில் தத்தெடுக்க நினைத்த இவர்கள், சட்ட ரீதியாக சிக்கல்கள் இருந்ததனால், இவர்களே கருவுற முடிவு செய்தனர்.

ஜியா ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவர். சஹத் பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர்.

சஹத், ஆணாக மாறும் சமயத்தில் அவரது மார்பகங்கள் அகற்றப்பட்டபோதிலும், கர்ப்பப்பை அகற்றப்படாமல் இருந்ததால், அவர் கருவுற முடியும் என்ற செய்தி அவர்களை இன்பக் கடலில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்தக்கட்ட நடவடிக்கையாக இவர்கள் மருத்துவ ரீதியில் சிகிச்சைகள் மேற்கொள்ள தொடங்கினர்.

Kerala Trans Couple Finally Welcome Their Baby
கர்ப்பம் தரிக்க இந்தியாவுக்கு வரும் ஜெர்மனி பெண்கள்: தூய ஆரியர்கள் இருப்பது உண்மையா?

முதலில் சஹத் இதற்கு தயங்கினாலும், தாயாக வேண்டும் என்ற ஜியாவின் ஆசை அவரது மனதை இளகச் செய்துள்ளது.

சஹத்தின் உடலில் எந்த வித பாதிப்பும் இல்லை என, கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உறுதி செய்த பிறகு, ஜியா மூலமாகவே சஹத் கருவுற்றார். தற்போது கர்ப்பமாக இருக்கும் சஹத் ஜியா தம்பதிக்கு தற்போது குழந்தை பிறந்துள்ளது.

இவர்கள் இந்தியாவின் முதல் மூன்றாம் பாலின தம்பதி மட்டுமல்லாமல், இந்தியாவின் முதல் மூன்றாம் பாலின பெற்றோர் ஆகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Kerala Trans Couple Finally Welcome Their Baby
கர்ப்பம் தெரிந்த 48 மணி நேரத்தில் குழந்தை பெற்றெடுத்த பெண் : அறிகுறி இல்லாதது ஏன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com