மகனின் ஆசிரியரிடம் ரூ.500 உதவிகேட்ட பெண்ணுக்கு கிடைத்த 55 லட்சம் - ஒரு நெகிழ்ச்சி சம்பவம்

திருவனந்தபுரத்தில் மகனுக்கு உணவளிக்க அவரது ஆசிரியரிடம் 500 ரூபாய் கேட்ட பெண்ணுக்கு சமூக வலைத்தளங்கள் மூலமாக 50 லட்சம் நிதியுதவி கிடைத்திருக்கிறது.
மகனின் ஆசிரியரிடம் 500 உதவிகேட்ட பெண்ணுக்கு கிடைத்த ரூ.55 லட்சம் - ஒரு நெகிழ்ச்சி சம்பவம்
மகனின் ஆசிரியரிடம் 500 உதவிகேட்ட பெண்ணுக்கு கிடைத்த ரூ.55 லட்சம் - ஒரு நெகிழ்ச்சி சம்பவம் newssense
Published on

46 வயதாகும் சுபத்ரா என்ற பெண் தனது மகனின் ஆசிரியரிடம் மகனுக்கு உணவளிக்க 500 ரூபாய் கடன் கிடைக்குமா எனக் கேட்டிருக்கிறார்.

கணவரை இழந்த அந்த பெண்ணின் அவல நிலையை புரிந்துகொண்ட ஆசிரியை சமூக வலைத்தளங்களில் கூட்டு நிதிதிரட்டல் (crowdfunding) முறையில் பணம் சேர்த்துத்துள்ளார்.

கடந்த ஞாயிறு சுபத்ராவுக்கு 55 லட்சம் ரூபாய் கிடைத்ததாக பிபிசி கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுபத்ராவின் நிலை :

கடந்த ஆகஸ்ட் மாதம் கணவரை இழந்த சுபத்ராவுக்கு மூன்று மகன்கள் இருக்கின்றனர்.

மூன்றாவது மகனுக்கு பெருமூளை வாதம் இருப்பதனால் சுபத்ரா அவரைத் தொடர்ந்து கவனிக்க வேண்டியிருக்கிறது.

இதனால் சுபத்ராவால் எந்த வேலைக்கும் போக முடியாத சூழல் நிலவியுள்ளது.

கணவரை இழந்த துக்கத்தைக் கூட கடக்க முடியாமல் இருக்கும் சுபத்ரா குழந்தைகளுக்கும் உணவளிக்க முடியாமல் போனதால் மிகுந்த வருத்தத்துக்கு ஆளாகியிருந்தார்.

Donation
Donation

டீச்சரிடம் உதவி

சுபத்ராவின் இரண்டாவது மகன் படிக்கும் உள்ளூர் பள்ளி ஒன்றில் ஆசிரியராக இருப்பவர் கிரிஜா ஹரிகுமார்.

கிரிஜாவின் மாணவரான அபிஷேக் தனது வீட்டின் நிலைக்குறித்து ஆசிரியரிடம் கூறியுள்ளார்.

"சுபத்ரா என்னிடம் உதவி கேட்பது இதுவே முதன் முறை. நான் அப்போது 1000 ரூபாய் கையில் கொடுத்துவிட்டு, 'என்னால் முடிந்ததைச் செய்கிறேன்' எனக் கூறினேன்" என்று பிபிசியிடம் கூறியிருக்கிறார் கிரிஜா ஹரிஹரன்.

அதன் பிறகு சுபத்ராவின் வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளார் கிரிஜா. அங்கு கைப்பிடி அளவு தானியங்கள் மட்டுமே இருந்திருக்கின்றன.

குழந்தைகள் உண்பதற்கு கூட ஒன்றுமில்லாத நிலை இருந்திருக்கிறது.

மகனின் ஆசிரியரிடம் 500 உதவிகேட்ட பெண்ணுக்கு கிடைத்த ரூ.55 லட்சம் - ஒரு நெகிழ்ச்சி சம்பவம்
உலகிலேயே மிகப் பெரிய நன்கொடை வழங்கிய நபர் - எதற்காக தெரியுமா?

கூட்டு நிதிதிரட்டல் (crowdfunding) :

இந்த கொடிய வறுமையில் சிக்கியிருக்கும் சுபத்ராவுக்கு சிறிய அளவில் நிதியளிப்பது எந்த விதத்திலும் பொருந்தாது என்று உணர்ந்த கிரிஜா இதற்காக சமூக வலைத்தளங்களில் உதவி கேட்டுள்ளார்.

ஃபேஸ்புக் பக்கத்தில் சுபத்ரா பற்றிய பதிவுடன் அவரது வங்கி கணக்கு விவரங்களையும் இணைத்திருக்கிறார். இதன்மூலம் உதவ முன்வந்தவர்கள் அவருக்கு நேரடியாக பணம் கொடுத்துள்ளனர்.

ஃபேஸ்புக் பதிவு வைரலானதால் பலரிடம் இருந்து உதவிகள் குவிந்து 55 லட்சம் பணம் சேர்த்துள்ளனர். இதனை சுபத்ராவுக்கு கொடுத்துள்ளனர்

மகனின் ஆசிரியரிடம் 500 உதவிகேட்ட பெண்ணுக்கு கிடைத்த ரூ.55 லட்சம் - ஒரு நெகிழ்ச்சி சம்பவம்
திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.02 கோடி நன்கொடை அளித்த சென்னை முஸ்லீம் தம்பதி - ஏன்?

எப்படி செலவு செய்யப் போகின்றனர்?

இந்த பணத்தின் ஒரு பகுதியைக் கொண்டு இறப்பதற்கு முன்னர் சுபத்ராவின் கணவர் கட்டத் தொடங்கிய வீட்டைக் கட்டிமுடிக்க முடிவு செய்துள்ளனர்.

திரட்டப்பட்ட நிதி போதுமென்றும் கூறியுள்ளனர்.

மகனின் ஆசிரியரிடம் 500 உதவிகேட்ட பெண்ணுக்கு கிடைத்த ரூ.55 லட்சம் - ஒரு நெகிழ்ச்சி சம்பவம்
சிவ நாடார் : இந்தியாவிலேயே அதிக நன்கொடை; அதானியை விட 6 மடங்கு அதிகம் - 2022ல் பாரி வள்ளல்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com