ஒரு நாளுக்கு 8 நிமிடம் தான் வேலை, 40 லட்சம் சம்பளம்: பணிமாற்றம் கோரும் IAS அதிகாரி - ஏன்?

காப்பக துறையில் கூடுதல் தலைமை செயலராக கடந்த ஜனவரி 9ம் தேதி பணியமர்த்தப்பட்ட அவர் ஒரு மாதம் கூட அந்த வேலையில் பங்கு பெறாமலே வேறு துறையில் பணியாற்ற விரும்புவதாக கூறியிருக்கிறார்.
ஒரு நாளுக்கு 8 நிமிடம் தான் வேலை; 40 லட்சம் சம்பளம்; பணிமாற்றம் கோரும் IAS அதிகாரி - ஏன்?
ஒரு நாளுக்கு 8 நிமிடம் தான் வேலை; 40 லட்சம் சம்பளம்; பணிமாற்றம் கோரும் IAS அதிகாரி - ஏன்?Ashok Kemka
Published on

மாதம் 40 லட்சம் சம்பளம் பெறும் ஐ.ஏ.எஸ் அதிகாரி அஷோக் கெம்கா தனது பதவியை மாற்றக் கோரி ஹரியான மாநில முதல்வர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த பணிமாற்ற கடிதத்துக்கு அவர் கூறியுள்ள காரணம் வேடிக்கையாக இருப்பதாக நெட்டிசன்கள் கருதவே இவர் வைரலாகி வருகிறார்.

காப்பக துறையில் கூடுதல் தலைமை செயலராக கடந்த ஜனவரி 9ம் தேதி பணியமர்த்தப்பட்ட அவர் ஒரு மாதம் கூட அந்த வேலையில் பங்கு பெறாமலே வேறு துறையில் பணியாற்ற விரும்புவதாக கூறியிருக்கிறார்.

தினமும் 8 நிமிடம் மட்டுமே வேலை செய்துவிட்டு 40 லட்சம் ஆண்டு வருவது குறித்து அவர் அதிருப்தியாக இருப்பதாக கடிதத்தில் கூறியுள்ளார்.

இந்த பதவி மாற்றத்தை பெறுவதற்காக 1987ல் வெளியான உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டியுள்ளார்.

பி.கே.சின்னசாமி என்பவர் தமிழ்நாடு அரசுக்கு எதிராக தொடுத்த அந்த வழக்கில் "அரசு ஊழியர்களுக்கு தகுதிக்கு ஏற்ற பணியும், அந்தஸ்துக்கு ஏற்ற பதவி உயர்வும் வழங்கப்பட வேண்டும்" என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

ஒரு நாளுக்கு 8 நிமிடம் தான் வேலை; 40 லட்சம் சம்பளம்; பணிமாற்றம் கோரும் IAS அதிகாரி - ஏன்?
உலகை பதற வைத்த மாயாவி : உளவு பார்த்து பிடித்த அதிகாரி - ஒரு த்ரில்லர் கதை

"கருவூலத் துறையின் மொத்த ஆண்டு நிதியே 4 கோடி தான். இது மாநில பட்ஜெட்டில் 0.0025%க்கும் குறைவு. இதில் 10% எனக்கு ஊதியமாக கொடுக்கப்படுகிறது. ஆனால் எனக்கு வாரத்தில் ஒரு மணி நேரம் மட்டுமே வேலை இருக்கிறது.

இதே நேரத்தில் சில அதிகாரிகள் அதிக வேலைப்பழுவால் சிரமப்பட்டு வருகின்றனர். பலர் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று துறைகளில் கவனம் செலுத்துகின்றனர்.

ஒரு நாளுக்கு 8 நிமிடம் தான் வேலை; 40 லட்சம் சம்பளம்; பணிமாற்றம் கோரும் IAS அதிகாரி - ஏன்?
கே எஸ் பாராக் : வேலையை இழந்த இந்தியர் ஐக்கிய அரபு அமீரகத்தின் மில்லியனர் ஆன கதை

இப்படி தவறான முறையில் பணியமர்த்துதல் நடப்பது மக்களுக்கு உதவாது. சிவில் சர்வீஸ் போர்ட் சட்ட விதிகளின் படி அதிகாரிகளை பணியமர்த்த வேண்டும். ஒவ்வொரு அதிகாரியின் நேர்மை, திறமை மற்றும் அறிவுத்திறனைக் கருத்தில் கொண்டு பணிகளை வழங்க வேண்டும்" என அவர் கூறுகிறார்.

தான் எப்போதுமே ஊழலுக்கு எதிரான முதல் வரிசை வீரன் எனக் கூறும் கெம்கா தன்னை லஞ்ச ஒழிப்பு துறையில் பணியமர்த்த வேண்டும் என ஹரியானா முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

கடந்த ஆண்டு ஹரியானா அமைச்சர் அனில் விஜி கெம்காவை "மிகவும் அரிதான அதிகாரி" என வர்ணித்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு நாளுக்கு 8 நிமிடம் தான் வேலை; 40 லட்சம் சம்பளம்; பணிமாற்றம் கோரும் IAS அதிகாரி - ஏன்?
ஆளுநர் ஆர்.என். ரவி : IPS அதிகாரி டு ஆளுநர் - 10 தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com