Lamayuru : பூமியா இல்ல நிலாவா? லடாக்கில் உள்ள Moonland பற்றி தெரியுமா?

மிகவும் தனித்துவமான புவியியல் அமைப்பைக் கொண்டிருப்பதனால் , இந்த நிலவு நகரத்துக்கு ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து குவிகின்றனர்.
Lamayuru : பூமியா இல்ல நிலாவா? லடாக்கில் உள்ள Moonland பற்றி தெரியுமா?
Lamayuru : பூமியா இல்ல நிலாவா? லடாக்கில் உள்ள Moonland பற்றி தெரியுமா?Twitter
Published on

ஸ்ரீ நகரில் இருந்து லேக்கு செல்லும் ஹைவேயில் அமைந்துள்ளது லடாக். இங்கிருக்கும் லமயுரு (Lamayuru) என்ற இடம் "லடாக்கின் மூன்லேண்ட்" என்று அழைக்கப்படுகிறது.

லமயுருவில் இருக்கும் நிலப்பரப்பு நிலவில் இருப்பது போல தெரிவதனால் இந்த பெயர் வந்திருக்கிறது. நிலவைப் போல சீரற்ற பாறைகளால் இந்த பகுதி உருவாகியிருக்கிறது.

இது ஒரு வறண்ட ஏரியாக இருந்திருக்கலாம் என புராணங்களில் கூறப்படுகிறது. ஏரி முற்றிலும் வற்றித் தண்ணீர் இல்லாமல் போனதால் அந்த நிலம் நிலவைப் போல வற்றிய பாறைகளாக காணப்படுவதாக கூறப்படுகிறது.

இங்கு லடாக்கின் மிகப் பழமையான மடாலயம் இருக்கிறது.

மிகவும் தனித்துவமான புவியியல் அமைப்பைக் கொண்டிருப்பதனால் , இந்த நிலவு நகரத்துக்கு ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து குவிகின்றனர்.

லமயுரு செல்பவர்கள் நிச்சயமாக அங்குள்ள மடாலயத்தைப் பார்வையிட வேண்டும். 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த பழமையான மடாலயம் வரலாற்றிலும் புராணக் கதைகளிலும் முக்கிய இடம் பிடிக்கிறது.

முன்னதாக 5 கட்டடங்கள் இருந்த அந்த மடாலயத்தில் தற்போது மைய கட்டடம் மட்டுமே இருக்கிறது. இருந்தபோதிலும் சுற்றுலாப்பயணிகளையும் புகைப்படக் கலைஞர்களையும் தொடர்ந்து ஈர்த்து வருகிறது.

Lamayuru : பூமியா இல்ல நிலாவா? லடாக்கில் உள்ள Moonland பற்றி தெரியுமா?
எல்லை சுற்றுலா: இந்தியா - சீனா எல்லையில் 17 கிராமங்களை சுற்றலாம் - விரிவான தகவல்கள்

400 துறவிகள் வரை இருந்த இந்த மடாலயத்தில் இப்போது 150 துறவிகள் மட்டுமே இருக்கின்றனர். முழுநிலவு நாளில் இது அதீத அழகாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

ஆண்டுதோறும் கொண்டாடப்படும் இரண்டு திருவிழாக்களுக்காக லமயுரு புகழ்பெற்றது. யூரு கப்யத் (Yuru Kebgyat) மற்றும் ஹெமிஸ் ட்செசு ( Hemis Tsechu).

Lamayuru : பூமியா இல்ல நிலாவா? லடாக்கில் உள்ள Moonland பற்றி தெரியுமா?
”இது வேற்றுகிரகம் இல்லை” இரவில் ஒளிரும் கடற்கரை - எங்கு இருக்கிறது? அறிவியல் காரணமென்ன?

இந்த திருவிழாக்கள் திபெத்திய நிலவு நாள்காட்டியின் படி இரண்டாவது மற்றும் ஐந்தாவது மாதங்களில் கொண்டாடப்படுகிறது.

விழாக்களின் போது மக்கள் மகிழ்ச்சியாக நடனமும் ஆடுகின்றனர்.

Lamayuru : பூமியா இல்ல நிலாவா? லடாக்கில் உள்ள Moonland பற்றி தெரியுமா?
பாலியல் சுற்றுலா, பௌத்தம், யானைகள் - 'தாய்லாந்து' பூலோக சொர்க்கமாக இருக்க என்ன காரணம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com