மகாராஷ்டிரா மாநிலம் நண்டெண்ட் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இந்த வாரம் 48 மணி நேரத்துக்குள் 31 நோயாளிகள் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இதனால் அந்த மருத்துவமனையை பார்வையிட்ட பாஜக எம்.பி ஹேமத் படில் அந்த மருத்துவமனையின் தலைவரை கழிவறையை சுத்தம் செய்யக் கூறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதில் எம்.பி பாட்டிலும் பிற மருத்துவமனை ஊழியர்களும் சுற்றிநின்று பார்க்க மருத்துமனையின் டீன் கழிவறையை சுத்தம் செய்வது தெரிகிறது.
இதுமட்டும்மல்லாமல் எம்.பி பாட்டில், இறப்புகளுக்கு மருத்துவர்கள் தான் பொறுப்பு, அவர்கள் மீது கொலைவழக்கு பதியப்பட வேண்டும் என்றும் பேசியுள்ளார்.
டாக்டர் சங்கர்ராவ் சவான் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 1 வரையிலான 24 மணி நேரத்தில் 12 குழந்தைகள் உட்பட 24 இறப்புகள் நிகழ்ந்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
அடுத்த 24 மணிநேரத்தில் 2 குழந்தைகள் உட்பட 8 நோயாளிகள் மரணமடைந்துள்ளனர்.
இது குறித்து மூத்த மருத்துவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம், 11 குழந்தைகள் இறந்த போது, குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கும் NICU பிரிவில் 65 பேர் சிகிச்சைக்காக சேர்க்கப்படனர். ஆனால் 24 படுக்கைகள் மட்டுமே இங்கு இருக்கின்றன என்பதைக் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து ஆராய்ந்து அறிக்கையை சமர்பிக்க சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் இருந்து 3 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது மட்டுமல்லாமல் இறப்புகள் குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் கார்கே கடந்த ஆகஸ்ட் மாதம் தானேயில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் இதேபோன்ற சம்பவம் நடந்தது, இதில் 18 நோயாளிகள் உயிரிழந்தனர் என்பதைக் குறிப்பிட்டார்.
மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, போதுமான அளவு மருந்துகளும் மருத்துவ ஊழியர்களும் மருத்துவமனையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், இறந்தவர்களில் பலர் இதய நோய் உள்ள முதியவர்கள், எடை குறைந்த குழந்தைகள் அல்லது விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து சம்பாஜிநகரின் காதி மருத்துவமனையில் 24 மணிநேரத்துக்குள் இரண்டு குழந்தைகள் உட்பட 10 பேர் இறந்துள்ளனர்.
இந்த தொடர் அரசு மருத்துவமனை இறப்புகள் குறித்து நண்டெண்ட் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர், மருத்துவத்துக்கான பட்ஜெட் குறைவாக இருப்பதனால் மருந்துகள் பற்றாக்குறை இருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust