உலக வரலாற்றில் உயரமான மனிதர்: ராபர்ட் வாட்லோவுக்கு என்ன நடந்தது?

அவரது 5 வயதிலேயே சராசரி மனிதரைப் போல 163 செண்டி மீட்டர் (5.11 அடி) உயரம் இருந்தாராம். அப்போதே பெரிய பையன்கள் அணியும் ஆடைகளைத் தான் அணிந்திருக்கிறார். அவரது அப்பாவை தூக்கும் அளவு பலமாக இருந்தார்.
உலக வரலாற்றில் உயரமான மனிதர்: ராபர்ட் வாட்லோவுக்கு என்ன நடந்தது?
உலக வரலாற்றில் உயரமான மனிதர்: ராபர்ட் வாட்லோவுக்கு என்ன நடந்தது?Twitter (History in Color)

நாம் எல்லாருக்குமே பிரம்மாண்டமான விஷயங்கள் மீது அதிக விருப்பம் இருக்கும். குறிப்பாக உயரமானவை. உயரமான மலைகள், உயரமான கட்டிடங்கள், உயரமான விலங்குகள், உயரமான மரங்கள் எல்லாமும் ஏதோ சிறப்பு அந்தஸ்தை பெற்றிருப்பது போலத் தோன்றும்.

சிறுகுழந்தையாக இருக்கும் போது உயரமாக வளர்வது நம் எல்லாருக்குமே ஆசையாக இருக்கும். விடலைப் பருவத்தில் இன்னும் கொஞ்சம் உயரமாக இருந்திருக்கலாம் எனத் தோன்றும். உயரமாக இருப்பதால் சில பலன்கள் இருப்பதாக நாமே நினைத்துக்கொள்கிறோம். உலக வரலாற்றிலேயே உயரமான மனிதர் மனிதர் எப்படி வாழ்ந்தார் தெரியுமா?

ராபர்ட் வாட்லோ என்பவர்தான் உலக வரலாற்றிலேயே பதிவுசெய்யப்பட்டுள்ள உயரமான மனிதர்.  அமெரிக்காவின் இல்லினாய்ஸ் என்ற பகுதியில் பிறந்ததால் இவருக்கு “The Giant of Illinois” என்ற பெயரும் இருந்தது.

1918ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி இந்த மனிதர் பிறந்தார். ஜூன் 27, 1940ம் ஆண்டு இவரை இறுதியாக அளவிட்ட போது இவரது உயரம் 8.11 அடி. இவரது பெற்றோர்கள் சாதாரண அளவில் தான் இருந்தனர்.

பிறக்கும் போது ராபர்ட் 3.5 கிலோ எடை இருந்தாராம். அவரது 5 வயதிலேயே சராசரி மனிதரைப் போல 163 செண்டி மீட்டர் (5.11 அடி) உயரம் இருந்தாராம்.  அப்போதே பெரிய பையன்கள் அணியும் ஆடைகளைத் தான் அணிந்திருக்கிறார். அவரது அப்பாவை தூக்கும் அளவு பலமாக இருந்தார்.

எட்டு வயதில் 180.3 சென்டிமீட்டர் உயரத்துக்கு, அவரது தந்தையை விட உயரமாக வளர்ந்துள்ளார்.  

இவரது கால் 47 செண்டி மீட்டர் (18.5 இன்சஸ்) நீளமாக இருந்ததாம். இவரது உள்ளங்கைகள் 32.3 செண்டிமீட்டர் நீளமாம். உலகிலேயே நீளமான கை, கால்களை கொண்டவர் இவர்தான்.

வால்டோவுக்கு பிட்யூட்டரி சுரப்பி என்ற ஹார்மோன் அதீத வளர்ச்சி பெற்றிருந்ததால் தான் அதிகமாக வளர்ந்திருந்தாராம். இதனை நிறுத்துவதற்கு அவருக்கு எந்த சிகிச்சையும் அளிக்கப்படவில்லை.

உலக வரலாற்றில் உயரமான மனிதர்: ராபர்ட் வாட்லோவுக்கு என்ன நடந்தது?
சாலைகளே கிடையாது, எங்கும் ஹெலிகாப்டர் தான் - உலகின் மிக பெரிய தீவு நாடு பற்றி தெரியுமா?

இந்தக் காலத்தில் இப்படி பிட்யூட்டரி சுரப்பி அதிகமாக வளர்ச்சி பெற்றால் அதனை நிறுத்துவதற்கு அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடியும். 

வில்டோவின் அதீத உயரம் காரணமாக அவரால் சாதாரணமாக நடமாட முடியவில்லை. நிற்பதற்கும் நடப்பதற்கும் கஷ்டப்பட்டு வந்தார். இதற்காக அவரது காலில் காலை இழுத்துப் பிடித்திருக்கும் பிரேஸ் மாட்டினர். கைகளில் ஒரு ஊன்றுகோலும் வைத்துதான் நடந்து வந்தார்.

உலக வரலாற்றில் உயரமான மனிதர்: ராபர்ட் வாட்லோவுக்கு என்ன நடந்தது?
Seed Cycling for Women : பெண்களின் ஹார்மோன் பிரச்சனைகளை சரிசெய்யும் 2 பழக்கங்கள்

ஒரு நாளில் அவர் சாதாரண மனிதரைப் போல 3 மடங்கு அதிகமாக சாப்பிட்டு வந்தார். 

வில்டோ 1940ம் ஆண்டு தனது 22 வயதில் மரணித்தார். அவரது காலில் மாட்டிய பிரேஸால் அவருக்கு கணுக்காலில் செப்டிக் ஏற்பட்டு கொப்பளம்  வந்தது அதனால் அவர் உயிரிழந்தார். 

உலக வரலாற்றில் உயரமான மனிதர்: ராபர்ட் வாட்லோவுக்கு என்ன நடந்தது?
உலகிலேயே உயரமான மனிதர் இவர்தானா? வளர்ந்துக்கொண்டே போகும் விநோதம் - என்ன காரணம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com