Mahua Moitra: "இது உங்கள் முடிவின் ஆரம்பம்" - பதவி நீக்கப்பட்ட MP கூறுவது என்ன?

நெறிமுறை குழுவுக்கு தன்னை பதவிநீக்கம் செய்வதற்கு அதிகாரம் இல்லை எனக் கூறிய மஹுவா மொய்த்ரா, நரேந்திர மோடியின் அரசு தன்னை முடக்க சதி செய்கிறது என்றும் இது அனைத்து எதிர்கட்சிகளின் முடிவுக்கும் ஆரம்பம் என்றும் கூறியுள்ளார்.
Mahua Moitra: "இது உங்கள் முடிவின் ஆரம்பம்" - பதவி நீக்கப்பட்ட MP கூறுவது என்ன?
Mahua Moitra: "இது உங்கள் முடிவின் ஆரம்பம்" - பதவி நீக்கப்பட்ட MP கூறுவது என்ன?Twitter
Published on

அதானி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்காக லஞ்சம் பெற்றுள்ளதாக குற்றம் சட்டப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி மஹுவா மொய்த்ரா, விசாரணை ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.

மஹுவா மொய்த்ரா மீது விசாரணை நடத்த "நெறிமுறை குழு" அமைக்கப்பட்டது. இந்த குழுவின் நடவடிக்கைகள் மீது தொடக்கத்தில் இருந்தே எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பிவரும் நிலையில் மஹுவா மொய்த்ரா தன்னிடம் முழுமையாக விசாரணை நடத்தப்படாமலே பதிவி நீக்கம் செய்துள்ளனர் என குற்றம்சாட்டியுள்ளார்.

நெறிமுறை குழுவுக்கு தன்னை பதவிநீக்கம் செய்வதற்கு அதிகாரம் இல்லை எனக் கூறிய மஹுவா மொய்த்ரா, நரேந்திர மோடியின் அரசு தன்னை முடக்க சதி செய்கிறது என்றும் இது பாஜகவின் முடிவுக்கு ஆரம்பம் என்றும் கூறியுள்ளார்.

Mahua Moitra: "இது உங்கள் முடிவின் ஆரம்பம்" - பதவி நீக்கப்பட்ட MP கூறுவது என்ன?
அதானி விவகாரம் : மோடியை துளைத்தெடுத்த கேள்விகள் - ராகுல் காந்தி உரை தமிழில்

நெறிமுறை குழு, விதிகளை மீறியிருப்பதாக மஹுவா மொய்த்ராவின் வழக்கறிஞர் குழு தெரிவித்திருக்கிறது. "நான் நெறிமுறைகளை மீறியதாக என்னை தண்டிக்கின்றனர். ஆனால் அப்படி நெறிமுறைகள் புத்தகத்திலேயே இல்லை. வழக்கமான நெறிமுறைகளை கடைபிடித்ததற்காக நெறிமுறை குழு என்மீது நடவடிக்கை எடுக்கிறது" எனக் கூறியுள்ளார் மஹுவா மொய்த்ரா.

Mahua Moitra: "இது உங்கள் முடிவின் ஆரம்பம்" - பதவி நீக்கப்பட்ட MP கூறுவது என்ன?
மஹுவா மொய்த்ரா : யார் பப்பு? - பாரதிய ஜனதா கட்சியை துளைத்தெடுத்த மேற்கு வங்க எம்.பி

"ரிஷிகாந்த் துபே துவங்கி ரமேஷ் பிதுரி வரை ஆளுங்கட்சி எம்பிக்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மற்றும் நெறிமுறைக்குழுவில் கொடுக்கப்பட்ட புகார்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில் எதிர் கட்சி எம்பி மஹுவா மொய்த்ரா மீது கொடுக்கப்பட்ட புகாரை விசாரனைக்கு எடுத்துக்கொண்டு அவரது எம் பி பதவியை பறித்ததன் மூலம் மற்றொருமொரு அநீதியை அரங்கேற்றியிருக்கிறது மோடியின் அரசு." என தனது ட்விட்டரில் மத்திய அரசை சாடியுள்ளார் சு.வெங்கடேசன்.

Mahua Moitra: "இது உங்கள் முடிவின் ஆரம்பம்" - பதவி நீக்கப்பட்ட MP கூறுவது என்ன?
அதானி : தனி ஒரு மனிதனின் வளர்ச்சி தான் இந்தியாவின் கௌரவமா? - வறுத்தெடுத்த மஹுவா மொய்த்ரா

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com