மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் யோகா தொடர்பான கூட்டத்தில் பாபா ராம்தேவ் பெண்களைப் பற்றி கூறிய கருத்து சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
இந்த கருத்துக்கு மேற்கு வங்க அமைச்சர் மஹுவா மொய்த்ரா கண்டனம் தெரிவித்துள்ளார்.
தானேவில் நடைபெற்ற கூட்டத்தின் போது பாபா ராம்தேவ் பெண்கள் குறித்தும் பெண்களின் ஆடைகள் குறித்தும் தவறாக பேசியிருந்தார்.
"பெண்கள் சேலை அணிந்தாலும், சுடிதார் அணிந்தாலும் எதுவும் அணியாமல் இருந்தாலும் அழகாக தான் இருப்பார்கள்" என பல பெண்கள் முன்னிலையில் அந்த கூட்டத்தில் அவர் கூறியிருந்தார்
அவர் அவ்வாறு பேசியவுடன் அரங்கத்தில் இருந்த பல பெண்கள் முகம் சுளித்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து மேற்குவங்க அமைச்சர் மஹுவா மொய்த்ரா, கருத்து தெரிவித்திருக்கிறார்.
அதில்,
"இப்போது தெரிகிறது 2011 ஆம் ஆண்டு ராம்லீலா மைதானத்தில் இருந்து பெண் உடையை அணிந்து பாபா ராம் தேவ் ஏன் ஓடினார் என்று.
தற்போது அவர் பேசுகிறார் பெண்கள் சேலையிலும் சுடிதாரிலும் அல்லது..... பாபா ராம்தேவின் எண்ணம் சரிவர இல்லாததுதான் அவரின் இந்த கீழ்த்தரமான பார்வைக்கு காரணம்" என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதோடு தேசிய மகளிர் அமைப்பு சார்பில் இதற்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust