ஷ்ரத்தா - அஃப்தாப் அமீன்
ஷ்ரத்தா - அஃப்தாப் அமீன்Twitter

டெல்லி : காதலியை 35 துண்டுகளாக வெட்டிய காதலன் - விசாரணையில் வெளிவந்த 5 முக்கிய தகவல்கள்

தனது முதல் வாக்குமூலத்தின் போது, ​​​​அஃப்தாப், 2022 மே மாதம் சண்டைக்குப் பிறகு ஷ்ரத்தா தன்னை விட்டுச் சென்றுவிட்டதாகவும், அதன்பிறகு, அவர் இருக்கும் இடம் தனக்குத் தெரியாது என்றும் கூறியிருக்கிறார்.
Published on

டெல்லியில் இளம்பெண் ஒருவர் தனது காதலனால் கொலை செய்யப்பட்டு 35 துண்டுகளாக வெட்டி வீசப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

26 வயதான ஷ்ரத்தா மும்பையில் உள்ள மல்டி நேஷனல் கம்பெனியின் கால் சென்டரில் வேலை பார்த்து வந்தார். அங்குதான் ஷ்ரத்தா, அஃப்தாப் அமீன் என்பவரை சந்தித்துள்ளார்.

இருவரும் டேட் செய்ய ஆரம்பித்தனர். ஷ்ரத்தா - அஃப்தாப் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஷ்ரத்தாவின் குடும்பத்தினர் அவர்களது உறவை ஏற்றுக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி டெல்லி சென்றனர். டெல்லியில் சத்தர்பூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வாழ்ந்து வந்துள்ளனர்.

ஷ்ரத்தா அஃப்தாப்பை திருமணம் செய்து கொள்ள விரும்பினார், ஆனால் அஃப்தாப் மறுத்த நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததுள்ளது.

கடந்த மே 18 ஆம் தேதி இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி ஷ்ரத்தாவின் கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளார் அஃப்தாப்.

மகள் காணவில்லை

இதற்கிடையில், மகாராஷ்டிராவின் பால்காரில் வசிக்கும் ஷ்ரத்தாவின் குடும்பத்தினர், அவருடன் தொடர்பு கொள்ள முடியாமல் போனதால் கவலை அடைந்தனர்.

அவரது தந்தை விகாஸ் ஆகஸ்ட் மாதம் மாணிக்பூர் காவல் நிலையத்தில் மகள் காணாமல் போனதாக புகார் அளித்தார். இந்த மாத தொடக்கத்தில், விகாஸ் தனது மகளைத் தேடி டெல்லிக்கு வந்தார்.

ஆனால் சத்தர்பூரில் உள்ள வாடகை குடியிருப்பில் மகளை காணவில்லை. நவம்பர் 8ஆம் தேதி, விகாஸ் மெஹ்ராலி காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கச் சென்றார். இந்த வழக்கை மகாராஷ்டிரா போலீசார் டெல்லி போலீசாருக்கு அனுப்பினர்.

ஷ்ரத்தாவின் தந்தையும் எஃப்.ஐ.ஆரில் அஃப்தாப் தனது மகளிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், அவளை அடிக்கடி தாக்கியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

புகாரின் பேரில் காதலன் கைது

ஷ்ரத்தாவின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் அந்த அஃப்தாப் கைது செய்யப்பட்டார்.

அவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், என்ன நடந்தது என்பது குறித்து போலீஸார் நடத்திய விசாரணை நடத்தினர்.

தனது முதல் வாக்குமூலத்தின் போது, ​​​​அஃப்தாப், 2022 மே மாதம் சண்டைக்குப் பிறகு ஷ்ரத்தா தன்னை விட்டுச் சென்றுவிட்டதாகவும், அதன்பிறகு, அவர் இருக்கும் இடம் தனக்குத் தெரியாது என்றும் கூறியிருக்கிறார்.

அதன் பின்னர் அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் பல வெளியாகியுள்ளன.

ஷ்ரத்தா - அஃப்தாப் அமீன்
"ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கணும்" - சத்யா கொலை வழக்கில் பொங்கிய விஜய் ஆண்டனி!
Arrest
ArrestPexels

ஃப்ரிட்ஜுக்குள் வைக்கப்பட்ட உடல் பாகங்கள்

  • ஷ்ரத்தாவின் கழுத்தை நெறித்துக் கொலை செய்த அஃப்தாப் போலீசாரிடம் மாட்டிக்கொள்வதை தடுக்க அவரது சடலத்தை 35 துண்டுகளாக வெட்டியுள்ளார்.

  • அதனை வைக்க 300 லிட்டர் கொள்ளளவு ஃப்ரிட்ஜ் வாங்கியுள்ளார். சடலத்தை வெட்டி ஃப்ரிட்ஜுக்குள் வைத்து, அடுத்த 18 நாட்களில் அதனை வெவ்வேறு இடங்களில் வீசி எறிந்துள்ளார்.

  • இதற்காக தினமும் அதிகாலை 2 மணியளவில் அஃப்தாப் வெளியே சென்று பல்வேறு இடங்களில் சடலத்தின் பாகங்களை வீசியுள்ளார்.

  • நகரின் வனப்பகுதியில் உயிரிழந்தவரின் உடல் பாகங்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு, சில மனித எலும்புகளை மீட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஷ்ரத்தா - அஃப்தாப் அமீன்
ஈரான்: போராட்டத்தில் ஈடுபட்ட 17 வயது சிறுமி மர்மாமான முறையில் கொலை- என்ன நடந்தது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com