”நான் விண்ணில் மாட்டிக்கொண்டேன்” ட்வீட் செய்த இளைஞர் - போலீசாரின் ரியாக்‌ஷன் என்ன?

தான் விண்ணில் மாட்டிக்கொண்டதாக இளைஞர் ஒருவர் மும்பை போலீசாரிடம் ட்விட்டர் மூலம் உதவிக்கேட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
”நான் விண்ணில் மாட்டிக்கொண்டேன்” ட்வீட் செய்த இளைஞர் - போலீசாரின் ரியாக்‌ஷன் என்ன?
”நான் விண்ணில் மாட்டிக்கொண்டேன்” ட்வீட் செய்த இளைஞர் - போலீசாரின் ரியாக்‌ஷன் என்ன?ட்விட்ட்ர்
Published on

கடந்த திங்களன்று, தான் விண்வெளியில் மாட்டிக்கொண்டதாக கூறி, ட்விட்டரில், மும்பை போலீசாரை ஒருவர் டேக் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மும்பை போலீசார் அளித்த பதில் இணையவாசிகளின் கவனத்தை பெற்றுவருகிறது

சமூக வலைத்தளங்கள் நம்மை அனைவருடன் இணக்கமான ஒரு உறவை வைத்துக்கொள்ள உதவுகிறது. இதன் மூலம், யாரும் யாருடனும் பேசிக்கொள்ளலாம். முகம் தெரியாத நபராக இருந்தாலும், பெரியவர், சிறியவர் என்ற பாரபட்சம் அங்கில்லை.

”நான் விண்ணில் மாட்டிக்கொண்டேன்” ட்வீட் செய்த இளைஞர் - போலீசாரின் ரியாக்‌ஷன் என்ன?
“அதென்ன ‘Pure’ Veg?“ : இணையத்தில் அனல் பறக்கும் விவாதம் - நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் என்ன?

அப்படித்தான் இங்கும் ஒரு ட்விட்டர் பயனர் மும்பை போலீசாரிடம் விளையாடுகிறார். பிஎமெஸ் கான் என்ற பயனர் ஒரு பதிவை பகிர்ந்திருந்தார். அதில் விண்வெளி வீரர் ஒருவர் நிலாவின் மீது நின்றிருப்பது போன்றதொரு புகைப்படம் இருந்தது. அதனை பகிர்ந்து, “நான் இங்கு மாட்டிக்கொண்டேன்” என்று தலைப்பிட்டிருந்தார் அவர். இதனை மும்பை போலீசாரை டேக் செய்திருந்தார்.

மும்பை போலீசார் தங்களது ட்விட்டர் பக்கத்தில்,

“நீங்கள் ஏதாவது ஆபத்தில் சிக்கிக்கொண்டால், காத்திருக்கவேண்டாம், உடனே எங்களை உதவிக்கு அழையுங்கள்” என்று விளம்பரப்படுத்தியிருந்தது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக தான் அந்த பயனர் இந்த பதிவை பகிர்ந்திருந்தார்.

இதன் பின்னிருக்கும் விளையாட்டுத்தனத்தை புரிந்து சமயோஜிதமாக சிந்தித்த மும்பை காவல் துறை, இதற்கு வேடிக்கையாக பதிலளித்து, இணையவாசிகளின் கவனத்தை பெற்றுள்ளது.

பிஎமெஸ் கானின் ட்வீட்டுக்கு பதிலளித்த மும்பை காவல் துறை, ”இது எங்களின் எல்லைக்குள் வராத இடமாகும். இருப்பினும் எங்கள் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி” என்று பதிவிட்டிருந்தது.

மும்பை போலீசாரின் இந்த ட்வீட் கவனத்தை பெற்று வருகிறது

”நான் விண்ணில் மாட்டிக்கொண்டேன்” ட்வீட் செய்த இளைஞர் - போலீசாரின் ரியாக்‌ஷன் என்ன?
ஒரு ரயில் டிக்கெட்டின் விலை ரூ.19 லட்சமா? வைரலாகும் வீடியோ- நெட்டிசன்கள் ரியாக்‌ஷன் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com