மணிப்பூரில் குக்கி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்களை, நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பிரதமர் மோடி உட்பட பல்வேறு தலைவர்கள் கண்டன குரல் எழுப்பியுள்ளனர்.
மணிப்பூரின் மகள்களுக்கு ஏற்பட்டதை மன்னிக்கவே முடியாது. எந்த குற்றவாளிகளும் தப்பமாட்டார்கள் என நாட்டு மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன் - பிரமதர் மோடி
மணிப்பூரில் வசிக்கும் மெய்தேய் சமூக மக்கள் தங்களை பட்டியல் இனத்தில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். பெரும்பாலும் இந்துக்களாக இருக்கும் மெய்தேய் சமூகத்தினர் மணிப்பூர் தலைநகர் இம்பால் மற்றும் பல கிராமங்களில் வசிக்கின்றனர்.
பெரும்பாலும் கிறிஸ்தவர்களாக இருக்கும் குக்கி இன மக்கள் மலைப்பகுதியில் வசிக்கின்றனர். இந்த மலைப்பகுதிகளிலும் வசிக்க உரிமை கேட்டு வருகின்றனர் மெய்தேய் மக்கள். இதற்கு குக்கி பழங்குடி இன மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இதனால் கடந்த மே மாதம் முதல் போராட்டங்கள், கலவரங்கள் வெடித்து தற்போது வரை நீடிக்கிறது.
இந்த நிலையில் தான் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த 2 பெண்களை, சாலையில் நிர்வாணமாக இழுத்துச் சென்ற வீடியோ 2 நாட்களுக்கு முன்பு வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில், பலரும் இதற்கு கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளிகள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொடூர சம்பவம் மே 4 ஆம் தேதி நடந்துள்ளது. இது தொடர்பாக மே 18-ம் தேதி அன்று காங்போக்பி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த வீடியோ வெளியான பிறகுதான் அச்சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் விவகாரம் குறித்து பேசிய பிரதமர் மோடி,
‘மணிப்பூரில் பெண்கள் அவமதிக்கப்பட்ட சம்பவம், இந்தியாவிலுள்ள 140 கோடி மக்களையும் அவமானத்தில் ஆழ்த்தியுள்ளது. மணிப்பூரின் மகள்களுக்கு ஏற்பட்டதை மன்னிக்கவே முடியாது. எந்த குற்றவாளிகளும் தப்பமாட்டார்கள் என நாட்டு மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்’ என்று பிரமதர் மோடி தெரிவித்திருக்கிறார்.
சம்பவம் நடந்து 2 மாதங்களுக்கு மேல் ஆகும் நிலையில் நேற்று தான் இதுகுறித்து பிரதமர் மோடி பேசியிருக்கிறார். இது குறித்து செய்திதாள்கள், தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
எந்தெந்த ஊடங்கள் எவ்வாறு செய்திகளை கவர் செய்துள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.
டெலிகிராப்பின் முன் பக்கத்தில் , மணிப்பூர் சம்பவம் நடந்து 79 நாட்கள் மோடி மௌனம் காத்ததை காண்பிக்கும் விதமாக ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது, அதில் முதலை கண்ணீருடன் இருப்பதை போன்று தெரிகிறது. மேலும் இந்த முதலை கண்ணீர் புகைப்படம் இணையத்தில் படுவைரலாக பகிரப்பட்டு வருகிறது.
" கொரோனா தொற்றுநோய் மற்றும் பணமதிப்பு நீக்கத்தை பாஜக தவறாகக் கையாண்டதை மேற்கோள் காட்டி, டெலிகிராப் மோடியின் அரசாங்கம் " குறித்து செய்தி கவர் செய்துள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் தலையங்கம் "தேசத்தின் அவமானம்" என்ற தலைப்பில் இருந்தது.
“ மே மாதம் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா இதுகுறித்து அப்போதே தெரிந்திருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளது.
டைம்ஸ் ஆஃப் இந்தியா தலையங்கத்தில் மணிப்பூர் மாநிலத்தின் முதலமைச்சருக்கு கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
கலவரம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகும் முன்புவ வரை ஏன் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை?
மாநிலத்தில் இணைய முடக்கம் காரணமாக அந்த வீடியோ முன்பு வெளிவராமல் இருந்திருக்கலாம் என்றும் அது சுட்டிக்காட்டியிருந்தது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust