யுபிஎஸ்சியில் 5 முறை தோல்வி: ஐஏஎஸ் அதிகாரியாக மாறிய நடிகை - யார் இந்த கீர்த்தனா?

48 தொலைக்காட்சி தொடர்களில் நடித்து ரசிகர்கள் மனதில் கொள்ளை கொண்ட கீர்த்தனா வளர்ந்ததும் ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்று முடிவெடுத்தார்.
Meet HS Keerthana, The Kannada Child Actress Who Cleared The IAS Exam In 2020
Meet HS Keerthana, The Kannada Child Actress Who Cleared The IAS Exam In 2020Twitter
Published on

கன்னட திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் நடிகையாக ஜொலித்த கீர்த்தனா தற்போது ஐஏஎஸ் அதிகாரியாக வலம் வருகிறார்.

சினிமா துறைக்கு சிறு வயதிலேயே காலடி எடுத்துவைத்த பலர், திரைத்துறையில் கொடிகட்டி பறக்கவும் செய்திருக்கின்றனர், அல்லது இந்த ஃபீல்டு வேண்டாம் என வேறு துறையில் சாதிக்கவும் செய்திருக்கின்றனர்.

அந்த வகையில் 48 தொலைக்காட்சி தொடர்களில் நடித்து ரசிகர்கள் மனதில் கொள்ளை கொண்ட கீர்த்தனா வளர்ந்ததும் ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்று முடிவெடுத்தார்.

இவர் அரசு போட்டி தேர்வுக்கு தன்னை தயார்படுத்தி வந்தார். அந்த வகையில் மாநிலத்தின் டிஎன்பிஎஸ்சி போல கர்நாடகாவின் கேஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்று இரண்டு ஆண்டுகள் KAS அதிகாரியாக பணியாற்றினார் கீர்த்தனா.

பின்னர் யூபிஎஸ்சி தேர்வுகளில் கவனம் செலுத்தி வந்தார் கீர்த்தனா. தொடர்ந்து தேர்வுகளை எழுதி வந்தார்.

Meet HS Keerthana, The Kannada Child Actress Who Cleared The IAS Exam In 2020
ஜெயஸ்ரீ: படுகர் சமுகத்தின் முதல் பெண் விமானி - யார் இவர்?

யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வு ஐந்து முறை எழுதி தோல்வியடைந்தார். ஆனாலும் கீர்த்தனா மனம் தளரவில்லை, மிகவும் கடினமாக உழைத்து மேலும் ஒரு முறை தேர்வு எழுதியிருக்கிறார்.

அவரது உழைப்பு வீண் போகவில்லை, அந்த UPSC தேர்வில் வெற்றி பெற்றார். 2020 இல், அவர் 167 வது அகில இந்திய தரவரிசையுடன் (AIR) ஐஏஎஸ் அதிகாரியானார். கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தின் உதவி ஆணையராக பணியாற்றி வருகிறார்.

Meet HS Keerthana, The Kannada Child Actress Who Cleared The IAS Exam In 2020
மாமன்னன் படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்த கீதா கைலாசம் - யார் இவர்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com