மிசோரம் முதல் கேரளா வரை: அதிக காடுகளைக் கொண்ட இந்திய மாநிலங்கள் குறித்து தெரியுமா?

இந்தியாவிலுள்ள சில மாநிலங்களில் மற்ற மாநிலங்களை விட அதிகமான பரப்பளவில் காடுகள் அமைந்துள்ளன. அவற்றைக் குறித்து இங்கு காணலாம்
Mizoram to Kerala : Indian states with largest forest cover
Mizoram to Kerala : Indian states with largest forest coverTwitter
Published on

பசுமையான மலைகள், அடர்ந்த காடுகள், ஏராளமான தாவரங்கள் என பல்வேறு பசுமையான பகுதிகள் இந்தியாவில் உள்ளன.

காடுகள் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் வாழ்வாதாரமாக விளங்குவதுடன் நீர்நிலைப் பாதுகாப்பை வழங்குகின்றன. காலநிலை மாற்றத்தைத் தணிக்கின்றன.

இந்தியாவிலுள்ள சில மாநிலங்களில் மற்ற மாநிலங்களை விட அதிகமான பரப்பளவில் காடுகள் அமைந்துள்ளன. அவற்றைக் குறித்து இங்கு காணலாம்.

மிசோரம்

மிசோரம், பசுமையான வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாகும், அதன் நிலப்பரப்பில் சுமார் 90 சதவிகிதம் காடுகளைக் கொண்டுள்ளது. இது இந்தியாவின் பசுமையான மாநிலங்களில் ஒன்றாக அறியப்படுகிறது.

வந்தவானா நீர்வீழ்ச்சி மற்றும் ஃபாங்புய் மலைகள் இந்த மாநிலத்தில் பார்க்க வேண்டிய இரண்டு மறைக்கப்பட்ட அழகுகளாகும்.

அருணாச்சல பிரதேசம்

அருணாச்சல பிரதேசம் 80 சதவீத காடுகளுடன், நாட்டிலேயே இரண்டாவது பசுமையான மாநிலமாக திகழ்கிறது. இது பசுமையான மலைகள், பாயும் நீர்வீழ்ச்சிகளுக்கு பெயர் பெற்றது.

மேகாலயா

75 சதவீதத்திற்கும் அதிகமான வன நிலங்களைக் கொண்ட மேகாலயா இந்தியாவின் மிகவும் செழிப்பான மாநிலங்களில் ஒன்றாகும். இந்த மாநிலத்தில் உள்ள பெரும்பாலான இடங்கள் பிரபலமானவை. சுற்றுலாப் பயணிகளால் அதிகம் விரும்பப்படும் மாநிலமாகவும் மேகாலயா இருக்கிறது.

சிரபுஞ்சி, லிவிங் ரூட் பாலங்கள், ஆசியாவின் தூய்மையான நகரம், மாவ்லின்னாங் மற்றும் ஷில்லாங்கின் கலகலப்பான பெருநகரம் ஆகியவை கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்.

Mizoram to Kerala : Indian states with largest forest cover
மேகாலயா: "விசில் தான் எங்க மொழி" - இசை கிராமத்தின் விசித்திர கதை

லட்சத்தீவு

இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் ஒன்றான லட்சத்தீவு, பரந்த காடுகளைக் கொண்ட சுற்றுலாத் தலமாகும். ஏரியிலிருந்து பசுமையான வனப்பகுதிகளின் காட்சி பிரமிக்க வைக்கிறது.

Mizoram to Kerala : Indian states with largest forest cover
Beach Tourism: நிலவொளியில் நீந்தலாமா? இரவில் மட்டும் நீச்சலுக்கு அனுமதி தரும் கடற்கரைகள்!

அந்தமான் நிக்கோபார் தீவுகள்

இந்தியாவின் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அடர்ந்த சதுப்புநிலக் காடுகளைக் கொண்டுள்ளது. இது தீவின் பாதிக்கும் மேற்பட்ட பகுதியை உள்ளடக்கியுள்ளது.

பனை வரிசைகள், வெள்ளை மணல் கடற்கரைகள், பவளப்பாறைகள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்களாகும்.

கேரளா

இந்தியாவின் பிரபலமான சுற்றுலா தலமான கேரளா, பசுமையான மாநிலங்களில் ஒன்றாகும். அதன் அழகிய தேயிலைத் தோட்டங்கள் மற்றும் அமைதியான நீர்நிலைகள் உலகம் முழுவதிலுமிருந்து பார்வையாளர்களை ஈர்க்கின்றன. கேரளாவின் சுமார் 60% தாவரங்களால் சூழப்பட்டுள்ளது.

Mizoram to Kerala : Indian states with largest forest cover
Food: கேரளா டு டெல்லி - இந்தியாவின் ஃபேமஸ் ரயில் நிலைய உணவுகள் இவை தான்! ஒரு ருசிகர பயணம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com