இந்தியா: Apple நிறுவன ரிடெயில் ஊழியர்களுக்கு இவ்வளவு சம்பளமா?- வியக்க வைக்கும் ரிப்போர்ட்!
இந்தியா: Apple நிறுவன ரிடெயில் ஊழியர்களுக்கு இவ்வளவு சம்பளமா?- வியக்க வைக்கும் ரிப்போர்ட்!Twitter

இந்தியா: Apple நிறுவன ரிடெயில் ஊழியர்களுக்கு இவ்வளவு சம்பளமா?- வியக்க வைக்கும் ரிப்போர்ட்!

இரண்டு ரி-டெயில் கடைகளையும் சேர்த்து 170 நேரடி ஆப்பிள் ஊழியர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் நல்ல மொழிவளம், தொழில்நுட்ப அறிவு உள்ளவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிக்கைகள் கூறுகின்றன.
Published on

இந்தியாவின் டெல்லியிலும் மும்பையிலும் ஆப்பிள் நிறுவனம் தனது முதல் இரண்டு ரீடெயில் கடைகளைத் திறந்திருக்கிறது.

இந்த கடைகளில் பணியாற்ற தொழில்நுட்பத்தில் தேர்ந்த அறிவுடைய நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆப்பிளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மற்ற நிறுவனங்களின் ரி-டெயில் ஸ்டோர்களில் வழங்கப்படுவதை விட 4 மடங்கு அதிக சம்பளம் வழங்கப்படுவதாகக் எக்கனாமிக்ஸ் டைம்ஸ் தளம் தெரிவிக்கிறது.

இரண்டு ரி-டெயில் கடைகளையும் சேர்த்து 170 நேரடி ஆப்பிள் ஊழியர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் நல்ல மொழிவளம் உள்ளவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிக்கைகள் கூறுகின்றன.

இந்த ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளமே 1 லட்சம் ரூபாய் எனக் கூறப்படுகிறது. சராசரியாக ஒரு ஊழியருக்கு ஆண்டுக்கு 27 லட்சம் வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்த கடைகளின் வளர்ச்சியைப் பொறுத்து ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது முதலீட்டை இரண்டு, மூன்று மடங்கு அதிகரிக்கும் எனக் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார்.

இந்தியா: Apple நிறுவன ரிடெயில் ஊழியர்களுக்கு இவ்வளவு சம்பளமா?- வியக்க வைக்கும் ரிப்போர்ட்!
500 ஆண்டுகளாக கிராம மக்களுக்கு உயிர் கொடுக்கும் மந்திரக் கிணறு - ஓர் அடடே ஸ்டோரி

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் அடுத்தடுத்து உற்பத்தி தொழிற்சாலைகளைத் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் இருக்கும் தொழிற்சாலைகளில் ஐபோன் தயாரிப்பதை படிப்படியாக குறைக்கவும் ஆப்பிள் நிறுவனம் விரும்புவதாகக் கூறப்படுகிறது.

இந்தியா: Apple நிறுவன ரிடெயில் ஊழியர்களுக்கு இவ்வளவு சம்பளமா?- வியக்க வைக்கும் ரிப்போர்ட்!
அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா : உலகிலேயே அதிகமாக பில்லியனர்கள் இருக்கும் நாடு எது தெரியுமா?

சில நாட்களுக்கு முன்பு ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் கூக் இந்தியாவுக்கு வருகைத்தந்திருந்தார். இரண்டு ரிடெயில் ஸ்டோர்களையும் திறந்து வைத்தார்.

அத்துடன் பிரதமர் மோடியையும் நேரில் சந்தித்துப் பேசினார். பின்னர், "நாடு முழுவதும் ஆப்பிள் முதலீடு செய்ய விரும்புகிறது" எனத் தெரிவித்தார்.

இந்தியா: Apple நிறுவன ரிடெயில் ஊழியர்களுக்கு இவ்வளவு சம்பளமா?- வியக்க வைக்கும் ரிப்போர்ட்!
பயனர்களின் அனுமதியின்றி உளவு பார்க்கும் ஆப்பிள் நிறுவனம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com