குஜராத் மோர்பி பாலம் இடிந்து விபத்து: இந்தியாவில் நடந்த 6 பயங்கர பால விபத்துகள்!

மோர்பி தொங்கு பாலம் போன்று கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் நிகழ்ந்த மேம்பாலம் இடிந்து விழுந்த முக்கிய சம்பவங்களை இங்கு பார்ப்போம்...
Morbi Bridge Collapse
Morbi Bridge CollapseTwitter
Published on

குஜராத்தில் உள்ள 150 ஆண்டுகள் பழமையான மோர்பி தொங்கு பாலம் நேற்று இடிந்து விழுந்து கோர விபத்து நிகழ்ந்தது. இதில் 140 பேர் இறந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இந்தியாவில் நிகழ்ந்த மிக மோசமான விபத்துகளில் ஒன்றாக இந்த விபத்து கருதப்படுகிறது.

இதே போன்று கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் நிகழ்ந்த மேம்பாலம் இடிந்து விழுந்த முக்கிய சம்பவங்களை இங்கு பார்ப்போம்.

உத்தரகாண்ட் - 2012

மார்ச், 2012 இல், உத்தரகாண்டில் உள்ள பவுரி மாவட்டத்தில், கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த அல்காநந்தா ஆற்றுப் பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியாகினர் மற்றும் 18 பேர் படுகாயமடைந்தனர்.

ஆனால், பாலம் இடிந்து விழுந்ததற்கான காரணத்தை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போதைய முதல்வர் விஜய் பகுகுணா சரிவுக்கான காரணங்களை ஆராய விரும்பினார் இருப்பினும், விபத்து குறித்த தகவல்கள் பெரிதாக எதுவும் வெளிவரவில்லை.

குஜராத் - 2014

ஜூன், 2014 இல் சூரத்தில் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து விழுந்ததில் சுமார் 10 தொழிலாளர்கள் பலியாகினர் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர்.

இடிந்து விழுந்த மேம்பாலம் பார்லே பாயின்ட் பகுதியை டாபி நதிக்கு அருகில் உள்ள அதாஜனுடன் இணைக்கும் கேபிள்-வயர் பாலமாகும்.

இந்த சம்பவம் தொடர்பாக சூரத் காவல்துறை, மூன்று பொறியாளர்கள் உட்பட 18 பேர் மீது வழக்கு பதிவு செய்தது.

போலீசார் நடத்திய விசாரணையில், பாலம் இடிந்து விழுந்ததற்கு காரணம் தரமற்ற கட்டுமானப் பொருட்கள் என்று கண்டறியப்பட்டது.

Morbi Bridge Collapse
உலகிலேயே உயரமான ரயில்வே பாலம் இந்தியாவில் திறப்பு - சுவாரஸ்ய தகவல்கள்

கொல்கத்தா - 2016

மார்ச் 31, 2016 அன்று, கொல்கத்தாவின் விவேகானந்தா சாலை மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 28 பேர் பலியாகினர், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஐதராபாத்தை சேர்ந்த ஐவிஆர்சிஎல் நிறுவனத்திற்கு 2 கிமீ நீள மேம்பாலம் கட்டும் பொறுப்பு வழங்கப்பட்டது.

நிறுவனத்தின் பிரதிநிதி அதிகாரிகளில் ஒருவர் செய்தியாளர்களிடம், இந்த விபத்து ‘கடவுளின் செயல்’ என்று கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக 16 பேர் அப்போது கைது செய்யப்பட்டாலும், அவர்கள் தற்போது ஜாமீனில் வெளியாகி உள்ளனர்.

மகாராஷ்டிரா - 2016

ஆகஸ்ட், 2016 இல், ராய்காட் மாவட்டத்தில் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் சுமார் 40 பேர் உயிரிழந்தனர். 11 நாட்கள் நீண்ட தேடுதலுக்கு பின் சில உடல்கள் மீட்கப்பட்டன.

சாவித்திரி ஆற்றின் பாலத்தில் இரண்டு அரசுப் பேருந்துகள் மற்றும் 10 தனியார் வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.

பருவமழை பொய்த்ததால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மேம்பாலம் இடிந்து விழுந்ததில் பல உயிர்கள் பலியாகின.

கோவா - 2017

கோவாவில் உள்ள கர்ச்சோரெம் கிராமத்தில் போர்த்துகீசிய காலப் பாலம் மே, 2017 இல் இடிந்து விழுந்ததால், 2 பேர் பலியாகினர். பலர் காணாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

சான்வோர்டெம் ஆற்றின் மீது கட்டப்பட்ட பாலம் சேதமடைந்த நிலையில் இருந்துள்ளது. தற்கொலை முயற்சியில் ஆற்றில் குதித்த ஒருவரை மீட்க மாநில தீயணைப்பு மற்றும் அவசர சேவை பணிபுரிந்தபோது அந்த பாலம் கீழே விழுந்தது.

பாலம் இடிந்து விழுந்தபோது மீட்புப் பணியைக் காண சுமார் 50 பேர் பாலத்தின் அருகில் கூடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாரணாசி - 2018

2018 ஆம் ஆண்டு வாரணாசியில் பயங்கரமான மேம்பாலம் விபத்து நிகழ்ந்தது.

வாரணாசி-அலகாபாத் நெடுஞ்சாலைக்கு செல்லும் சாலையின் மேல் உள்ள மேம்பாலத்தின் ஒரு பகுதி விழுந்து சுமார் 18 பேர் பலியாகின மற்றும் பலர் காயமடைந்தனர்.

இடிந்து விழுந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி அரசின் ஒத்துழைப்புடன் கட்டப்பட்டது. பல மினி பஸ்கள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் பாலத்தின் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டது.

உடனடியாக, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், சம்பவம் குறித்து விசாரணை நடத்த குழு அமைத்து, 48 மணி நேரத்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக 7 பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கைது செய்யப்பட்டனர்.

Morbi Bridge Collapse
கிரிமியா பாலம் தாக்குதல் : ஓங்குகிறதா உக்ரைனின் கரங்கள்? விரிவான தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com