முன்னாள் காதலியின் பெயரில் டீ கடை திறப்பு - Soup boys-க்கு டீ விலையில் டிஸ்கவுண்ட்!

அந்த இளைஞரோ இந்த காதல் தோல்வியிலிருந்து வெளியே வர தாடி வைத்து தேவதாஸாக மாறாமல் சற்று வித்தியாசமாக யோசித்து ஒரு தொழில் முனைவோராக மாறியுள்ளார்.
MP man opens tea shop after girlfriend rejects marriage proposal
MP man opens tea shop after girlfriend rejects marriage proposalTwitter
Published on

மத்தியப் பிரதேசத்தில், காதல் தோல்வியடைந்த இளைஞர் ஒருவர், தன் முன்னாள் காதலியின் முதல் எழுத்தை வைத்து ஒரு டீக்கடையைத் தொடங்கியிருக்கிறார்.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு காதல் கதை இருக்கும், சிலருக்கு அது வெற்றியிலும் பலருக்கு தோல்வியிலும் முடிந்திருக்கும். அப்படி காதலில் தோற்ற இளைஞரின் செயல் தான் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.

பி.ஏ இறுதியாண்டு படிக்கும் அந்தர் என்ற இளைஞர், ஐந்து ஆண்டுகளுக்கு முன், உறவினர்கள் திருமண நிகழ்ச்சியில் ஒரு பெண்ணை சந்தித்துள்ளார். இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில் காதலில் விழுந்தனர்.

Love
LoveCanva

கிட்டதட்ட 2 வருடங்கள் காதலித்து வந்த அந்த பெண்ணுக்கு திடீரென வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இவர் வேலையில்லாதவர் என்றும் தன் வருங்கால கணவரிடம் எல்லாம் இருப்பதாகவும் அந்த பெண் அந்தரை திருமணம் செய்ய மறுத்துள்ளார்.

அந்த இளைஞரோ இந்த காதல் தோல்வியிலிருந்து வெளியே வர தாடி வைத்து தேவதாஸாக மாறாமல் சற்று வித்தியாசமாக யோசித்து ஒரு தொழில் முனைவோராக மாறியுள்ளார்.

MP man opens tea shop after girlfriend rejects marriage proposal
ஆல்கஹால் பயன்படுத்தி தயாரிக்கப்படும் புதிய வகை டீ - கடைக்காரரின் பலே ஐடியா!

மத்தியப் பிரதேச மாநிலம் கில்சிப்பூர் நகர் பேருந்து நிலையம் அருகே சமீபத்தில் திறக்கப்பட்ட டீக்கடைக்கு முன்னாள் காதலியின் முதல் எழுத்தை பெயராக வைத்துள்ளார்.

இன்னும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அந்த டீக்கடைக்கு காதல் தோல்வியடைந்தவர்கள் வந்தால் தேநீர் விலையில் டிஸ்கவுண்ட்!

சாதாரணமாக டீ குடிக்க வருபவர்கள் என்றால் அவர்களுக்கு ஒரு கப் டீயின் விலை பத்து ரூபாய்.

இதுவே டீ குடிக்க வருபவர்களில் யாராவது காதலில் தோல்வியடைந்தவர் என்றால் அவர்களுக்கு ஒரு கப் டீ ஐந்து ரூபாய் மட்டுமே விற்கப்படுகிறது. இந்த டீக்கடையும் இளைஞரும் இணையவாசிகளிடையே கவனம் பெற்று வருகின்றன.

MP man opens tea shop after girlfriend rejects marriage proposal
இந்தியாவின் கடைசி டீக்கடை - எங்கு இருக்கிறது? இந்த ஊரில் என்ன ஸ்பெஷல்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com