தேனீர்
தேனீர்canva

ஆல்கஹால் பயன்படுத்தி தயாரிக்கப்படும் புதிய வகை டீ - கடைக்காரரின் பலே ஐடியா!

புகழ்பெற்ற சுற்றுலா தலங்களுக்கு அடுத்து, கோவா என்றால் பலரின் நினைவுக்கு வருவது மதுபானங்கள் தான்.
Published on

பிரபல ஓல்ட் மாங்க் ரம் (Old Monk) ஐ பயன்படுத்தி தேநீர் தயாரிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

சுற்றுச்சூழல் அழகியல், புகழ்பெற்ற சுற்றுலா தலங்களுக்கு அடுத்து, கோவா என்றால் பலரின் நினைவுக்கு வருவது மதுபானங்கள் தான். ஆனால், தற்போது சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கமாக, கோவாவில், பொது வெளியில் மதுபானம் அருந்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனீர்
மரியாதையாக பேசினால் டீ விலை குறைவு; கஃபேயின் அடடே ஆஃபர்

இந்நிலையில், கோவாவில் உள்ள டீ கடையில் புதிய முயற்சியாக ரம் பயன்படுத்தி தேநீர் தயாரித்துக் கொடுக்கிறார்கள். கோவாவிலுள்ள காண்டோலிமில் உள்ள சின்க்வெரிம் பீச்சுக்கு அருகில் உள்ள ஒரு சாலையோர கடையில் தான் இந்த Old Monk Tea கிடைக்கிறது.

Dr V என்ற சுற்றுலா பயணி ஒருவர் டிவிட்டரில் இந்த புதிய வகை தேநீர் தயாரிக்கப்படுவதை வீடியோவாக பதிவிட்டிருந்தார். அதில், "கோவாவில் ஓல்ட் மாங்க் டீ. முடிவு நெருங்கி வருகிறது" என்று கேலியாக பதிவிட்டிருந்தார்.

முதலில் மண் பானையை எடுத்து அதை சூடாக்கிய பின்னர், ரம்மை ஊற்றுகிறார் டீ தயாரிப்பவர். பின்னர் சிறிது நேர இடைவெளியில், அருகில் கொதித்துக்கொண்டிருந்த தேநீரை அதில் சேர்கிறார். அதை மீண்டும் கொதிக்கவிட்ட பின்னர், டீ அருந்துவதற்கு தயாராகிறது.

இதை ஒரு முறையாவது சுவைத்து பார்க்கவேண்டும் எனவும் அந்த டிவிட்டர் பயனர் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது

தேனீர்
டீ குடிப்பவர்களுக்கு ஆயுள் கெட்டியா? - ஆய்வாளர்கள் கூறியது என்ன?

ஒரு பயனர், இந்த வீடியோவிற்கு பதிலளிக்கும் வகையில், "அரை ஸ்பூன் ஓல்ட் மாங்க்குடன் சூடான காப்பியை சேர்த்து அருந்துவதும் ஒரு சிறந்த ரெசிபி" எனக் கூறியிருந்தார்.

சில டீ பிரியர்களுக்கு இந்த புதிய முயற்சி மகிழ்ச்சியளிக்கவில்லை. தேநீரை அதன் சுவையிலேயே அருந்தினால் தான் அதன் சுவையை நாம் அனுபவிக்க முடியும். இது எல்லாம் தேவையில்லாத மாய வித்தைகள் எனக் கூறுகிறது ஒரு தரப்பு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com