Morning News Wrap : விண்வெளியில் இளையாராஜா, INS போர்கப்பல் வெடிவிபத்து - முக்கிய செய்திகள்

இன்று நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
இளையராஜா

இளையராஜா

Twitter

Published on

விண்வெளியில் இளையராஜா பாடல்…

எடைகுறைவான செயற்கைக்கோள் தயாரிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் குழுவினர், இந்த ஆண்டு மற்றொரு எடை குறைந்த ஒரு புதிய சாட்டிலைட்டை வடிவமைத்து உள்ளனர். இதில் இளையராஜா இசை அமைத்த இந்திப் பாடல் ஒன்று இடம்பெற உள்ளது. இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இஸ்ரோ உதவியுடன் இளையராஜா இசை அமைத்துள்ள பாடல் இடம்பெறும் சாட்டிலைட்டை விண்வெளிக்கு அனுப்ப இந்த மாணவர்கள் குழு ஏற்பாடு செய்திருக்கிறது. இது தொடர்பாக இளையராஜா தரப்பில் கூறும்போது, ‘கடந்த 75 ஆண்டுகள் நிகழ்ந்த இந்தியாவின் புதுமைகளையும், இனி வரும் காலங்களில் இந்த பாரதம் முன்னணி தேசமாக இருக்கும் என்பதையும் எடுத்துரைக்கும் இந்திப் பாடலை சுவானந்த் கிர்கிரே எழுதியுள்ளார். இளையராஜா இசை அமைத்துள்ளார்’ என்றனர். இந்த பாடலை தமிழிலும் வெளியிட இளையராஜா திட்டமிட்டிருக்கிறார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Twitter

எம்ஜிஆரின் வரலாற்றை மாற்றி எழுதுவதா? - முன்னாள் அமைச்சர் கண்டனம்

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரைப் பற்றி உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட்ட திமுக அரசைக் கண்டித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், "தன் கட்சி வரலாறும், தமிழக அரசியல் வரலாறும் தெரியாத ஒருவரை முதல்வராகப் பெற்றிருப்பது தமிழகத்தின் தலையெழுத்து என்றே கருதுகிறேன். தன்னை திமுகவின் தலைவராகவும், முதல்வராகவும் ஆக்கிய கட்சியின் பொருளாளரான எம்ஜிஆரையே, கணக்கு கேட்டார் என்பதற்காகக் கட்சியை விட்டே நீக்கி, ஏறிய ஏணியை எட்டி உதைத்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாரிசுகள் பொய்யையும், புனைச் சுருட்டையும் மூலதனமாக்கி அரசியல் நடத்துவது விந்தையானதல்ல.

திமுக அரசின் செய்திக்குறிப்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுதிய 'மருதநாட்டு இளவரசி', 'மந்திரி குமாரி' வாயிலாகத் தனக்கென்று தனியிடம் பெற்றவர் எம்ஜிஆர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் சினிமாவில் நுழையவே முடியாத நிலையில், திரைத்துறையே வேண்டாம் என்று கோவையிலிருந்து தனது சொந்த ஊரான திருக்குவளைக்குச் சென்றவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி என்பது வரலாறு.

இதை அறிந்த எம்ஜிஆர், தனது தமையனார் பெரியவர் அமரர் எம்.ஜி.சக்கரபாணியை விட்டு கருணாநிதிக்குக் கடிதம் எழுதி, அவரை மீண்டும் கோவைக்கு வரவழைத்து, பட்சிராஜா ஸ்டுடியோவில் 'மருதநாட்டு இளவரசி' படத்திற்கு வசனம் எழுத வாய்ப்பு வாங்கிக் கொடுத்தவர் எம்ஜிஆர். 'மருதநாட்டு இளவரசி', 'மந்திரிகுமாரி' ஆகிய படங்கள் வருவதற்கு முன்னரே, 'என் தங்கை', 'மர்ம யோகி', 'சர்வாதிகாரி' போன்ற பல வெற்றிப் படங்கள் மூலம் தமிழ்த் திரையுலகில் கோலோச்சியவர் எம்ஜிஆர். அனைத்திற்கும் மேலாக, கருணாநிதி எழுதியதாக சொல்லப்படும் வசனங்களை, எங்களது எம்ஜிஆரும், அவரது தம்பி நடிகர் திலகமும், தங்களுடைய படங்களில் உச்சரித்ததால்தான் கருணாநிதியின் எழுத்துகளுக்கு மரியாதை கிடைத்தது என்பது வரலாறு.

அடுத்து, 1986-87 காலகட்டத்தில், தமிழகத்தில் மருத்துவத் துறைக்கென்று தனியாகப் பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்க எம்ஜிஆரின் அரசு முடிவெடுத்தது.

1987, டிசம்பர் 25-ல் பல்கலைக்கழகத் திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. எம்ஜிஆர் தலைமையில், அன்றைய குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் பல்கலைக்கழகத்தைத் திறப்பது என்று முடிவானது. மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு "டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம்” என்று பெயர் வைக்க அமைச்சர்கள் முடிவு செய்தனர். எம்ஜிஆர் அதை மறுத்தார். ஆனால், முத்துசாமியும் (இன்றைய திமுக அமைச்சர்), மற்ற அமைச்சர்களும், எம்ஜிஆரை வற்புறுத்தி சம்மதிக்க வைத்தனர்.

இளையராஜா

எம்.ஜி.ஆர் குறித்த ஆச்சர்ய தகவல்கள் : நடிகை கோவை சரளாவை படிக்க வைத்த எம்.ஜி. ராமசந்திரன்

எம்ஜிஆரின் எண்ணப்படியே, திறப்பு விழாவிற்கு முதல் நாளான டிசம்பர் 24-ம் நாள் எம்ஜிஆர் நம்மை விட்டு விண்ணுலகம் சென்றுவிட்டார். அதன்பின், 1989-ல் ஆட்சிக்கு வந்த கருணாநிதி வேறு வழியின்றி, தமிழ்நாடு என்று ஒரு வார்த்தையைச் சேர்த்து “தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம்” என்று, அதே குடியரசுத் தலைவரை வைத்துத் திறப்பு விழா நடத்தினார். தற்போது தன் அருகே வீட்டுவசதித் துறை அமைச்சராக இருக்கும் முத்துசாமியிடமும், மூத்த அரசியல் தலைவர் டாக்டர் ஹண்டேவிடமும், இது சம்பந்தமான முழு விவரங்களையும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

இனியாவது, திமுக அரசு, தமிழக அரசின் சார்பாக வெளியிடப்படும் அறிக்கைகளில், வரலாற்றைத் திரிக்காமல் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு, எம்ஜிஆரைப் பற்றிய வரலாற்றைத் திரித்து, தவறாக அரசு செய்தி அறிக்கை வெளியிட்ட திமுக அரசிற்கு எனது கடும் கண்டனங்கள்'' என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி

தடுப்பூசி

Facebook

எங்கும் தடுப்பூசி கட்டாயமில்லை - மத்திய அரசு

இந்தியாவில் விமானம், ரயில்களில் பயணம் செய்வதற்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அல்லது கரோனா இல்லை என்பதற்கான ஆர்டிபிசிஆர் அறிக்கை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தன்னார்வத் தொண்டு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “மாற்றுத் திறனாளிகள் பயணம் செய்வதற்கு கரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்பதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

மேலும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்த உத்தரவிட வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பதில் மனுத் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இளையராஜா

திருடர்கள் சொன்ன வைத்தியத்தத்தால் குறைந்த தொற்று நோய் !

இதையடுத்து, மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், “அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுக்கிறது. அதேநேரம் தடுப்பூசியை ஒருவரின் விருப்பத்துக்கு மாறாகக் கட்டாயப்படுத்த முடியாது. எங்கும் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமென மத்திய அரசு வெளியிட்டுள்ள கரோனா வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப் படவில்லை.

மேலும் அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கை எட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்துமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.

ஐ.என்.எஸ் ரன்வீர்

ஐ.என்.எஸ் ரன்வீர்

Facebook

மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த போர்க்கப்பல் வெடி விபத்து!

மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஐஎன்எஸ் ரன்வீர் என்ற போர்க்கப்பலில் நேற்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில், அதிலிருந்த வீரர்கள் 3 பேர் மரணம் அடைந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்த வெடிவிபத்தில் இறந்த வீரர்கள் விவரம் உடனடியாக அறிவிக்கப்படவில்லை. அவர்கள் யார் என அடையாளம் காணப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. இதற்கிடையே, இந்த வெடிவிபத்தில் 10 பேர் காயம் அடைந்துள்ளதாக, கடற்படை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வெடிவிபத்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, இந்தியக் கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் 23ம் தேதி, இங்கிருந்த ஐஎன்எஸ் ரன்விஜய் என்ற போர்க்கப்பலில், தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அதிலிருந்த 4 வீரர்கள் கடும் தீக்காயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

விராட்கோலி , கே.எல்.ராகுல்

விராட்கோலி , கே.எல்.ராகுல்

Twitter

இந்தியா - தென் ஆப்ரிக்கா ஒரு நாள் போட்டிகள் இன்று ஆரம்பமாகிறது

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பார்ல் நகரில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.

இந்திய ஒரு நாள் போட்டி அணியின் புதிய கேப்டன் ரோகித் சர்மா தசைப்பிடிப்பால் விலகி இருப்பதால் அவருக்குப் பதிலாக கே.எல்.ராகுல் அணியை வழிநடத்துகிறார்.

இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இல்லாததால் வெங்கடேஷ் அய்யருக்கு முக்கியத்துவம் அளிக்கத் திட்டமிட்டுள்ளார். அவரை 6-வது பந்து வீச்சாளராகப் பயன்படுத்த வாய்ப்பு இருப்பதை கேப்டன் ராகுலும் உறுதிப்படுத்தியுள்ளார். தொடக்க ஆட்டக்காரராக ஷிகர் தவானுடன், கே.எல் ராகுல் களம் இறங்க இருப்பதால் ருதுராஜ் கெய்க்வாட் வாய்ப்புக்காகக் காத்திருக்க வேண்டி இருக்கும்.

இளையராஜா

ஜல்லிக்கட்டு 2022 : கொரோனா கட்டுப்பாடுகள், எப்போதுமில்லாத பரிசுகள், உற்சாகமான இளைஞர்கள்!

டெஸ்ட் தொடரில் தோற்றதும் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் விராட் கோலி அதிரடியாக கேப்டன் பதவியிலிருந்து விலகினார். 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வீரராக இந்த போட்டியில் களம் இறங்குவதால் அவரது செயல்பாடு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ரன் மெஷினாக இருக்கும் கோலி 2 ஆண்டுக்கு மேலாக ஒரு சதம் கூட அடிக்காதது ரசிகர்களுக்கு வருத்தம் அளித்தது. இப்போது கேப்டன் சுமை இல்லாததால் அவர் சுதந்திரமாக விளையாட முடியும். இந்த போட்டியில் ரன்வேட்டை நடத்துவாரா கோலி என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

இந்த ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு ஓரளவு எடுபடும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அதனால் அஸ்வின், யுஸ்வேந்திர சாஹலுடன் இந்தியா சுழல் தாக்குதலை தொடுக்கும் என்று தெரிகிறது. ஆனால் சிறிய மைதானம் என்பதால் ரன்மழையையும் எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூர் சூழலில் ஆடும் தென் ஆப்பிரிக்க அணி பவுமா தலைமையில் அடியெடுத்து வைக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் அணிக்கு திரும்பியிருப்பது பலமாகும். வான்டெர் துஸ்சென், டேவிட் மில்லர் ஆகியோரும் பேட்டிங்கில் சிறந்த நிலையில் உள்ளனர். வேலைப்பளுவை கருத்தில் கொண்டு பிரதான வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடா நேற்று திடீரென ஒரு நாள் போட்டி அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஆனாலும் பந்து வீச்சில் டெஸ்ட் தொடரில் அசத்திய மார்கோ ஜான்சென் மற்றும் இங்கிடி, ஷம்சி மிரட்டக் காத்திருக்கிறார்கள். இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் இறங்குவதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்குப் பஞ்சமிருக்காது.

இவ்விரு அணிகளும் இதுவரை 84 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 35-ல் இந்தியாவும், 46-ல் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. 3 ஆட்டத்தில் முடிவு இல்லை. தென் ஆப்பிரிக்காவில் கடைசியாக 2018-ம் ஆண்டு ஒரு நாள் தொடரில் ஆடிய இந்தியா அந்த தொடரை 5-1 என்ற கணக்கில் கைப்பற்றியது நினைவு கூரத்தக்கது.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com