50,907 வைர கற்கள்; 9 மாத தயாரிப்பு - கின்னஸ் சாதனை படைத்த மோதிரம்! விலை என்ன தெரியுமா?
50,907 வைர கற்கள்; 9 மாத தயாரிப்பு - கின்னஸ் சாதனை படைத்த மோதிரம்! விலை என்ன தெரியுமா?Twitter

50,907 வைர கற்கள்; 9 மாத தயாரிப்பு - கின்னஸ் சாதனை படைத்த மோதிரம்! விலை என்ன தெரியுமா?

இந்த மோதிரத்தை தயாரிக்க இவர்கள் பயன்படுத்திய தங்கம் வாடிக்கையாளர்கள் முன்னர் கடைகளில் விற்ற தங்கத்திலிருந்து மறு சுழற்சி செய்யப்பட்டவை. அதே போல வைரங்களுமே வாடிக்கையாளர்கள் விற்ற நகைகளிலிருந்து மீட்கப்பட்டவை என கின்னஸ் சாதனை தளம் கூறியுள்ளது.
Published on

ஒரே மோதிரத்தில் அதிகமான வைரக் கற்கள் பொறிக்கப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

நகைகள் என்றாலே நமக்கு பிடிக்கும், குறிப்பாக வைர நகைகள் என்றால் அதன் மதிப்பும் மவுசும் இன்னும் கூட!

அப்படிப்பட்ட வைரத்தை வைத்து புதிய சாதனையை படைத்திருக்கின்றனர் மும்பையை சேர்ந்த ஹரி கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் மற்றும் எச் கே டிசைன்ஸ்.

இவர்கள் தயாரித்துள்ள ஒரு வைர மோதிரத்தில், 50,000த்துக்கும் அதிகமான வைரக் கற்கள் பொறிக்கப்பட்டுள்ளன, இதுவே உலகில் அதிக வைர கற்கள் உடைய மோதிரமாகும். இதற்கு கின்னஸ் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

சரியாக சொல்லவேண்டும் என்றால், 50,907 வைரக் கற்கள் இந்த மோதிரத்தில் உள்ளன. இதை தவிர இந்த மோதிரத்தில் இன்னும் ஒரு சிறப்பும் உள்ளது.

இந்த மோதிரத்தை தயாரிக்க இவர்கள் பயன்படுத்திய தங்கம் வாடிக்கையாளர்கள் முன்னர் கடைகளில் விற்ற தங்கத்திலிருந்து மறு சுழற்சி செய்யப்பட்டவை. அதே போல வைரங்களுமே வாடிக்கையாளர்கள் விற்ற நகைகளிலிருந்து மீட்கப்பட்டவை என கின்னஸ் சாதனை தளம் கூறியுள்ளது.

50,907 வைர கற்கள்; 9 மாத தயாரிப்பு - கின்னஸ் சாதனை படைத்த மோதிரம்! விலை என்ன தெரியுமா?
Guinness: உலகின் மிகச் சிறிய நாய் - கின்னஸ் சாதனை படைத்த Pearl உயரம் எவ்வளவு தெரியுமா?

சூரிய காந்தி மலர் மேல் பட்டாம்பூச்சி அமர்ந்திருப்பது போல வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த மோதிரத்தில் மொத்தம் 8 பாகங்கள் உள்ளன.

இதில் 4 அடுக்குகளுக்கு இதழ்கள், ஒரு தண்டு, 2 வைர டிஸ்குகள் மற்றும் பட்டாம்பூச்சி என மொத்தம் 50,907 வைர கற்கள், ஒவ்வொன்றும் நிபுணர்கள், தங்கள் கைகளால் பொறிக்கப்பட்டவை.

இந்த மோதிரத்தின் மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.6.42 கோடி. இதன் பெயர் யுடியெரியா. "இயற்கையோடு ஒன்றுவது" எனப் பொருள்படுகிறது இந்த பெயர்.

இந்த மோதிரத்தை தயாரிக்க மொத்தம் 9 மாதங்கள் ஆகியுள்ளது. இதில் CAD எனப்படும் கணினி உதவிய வடிவமைப்புக்கு மட்டுமே நான்கு மாதங்கள் ஆகியுள்ளது.

இதில் பயன்படுத்தப்பட்டுள்ள 18 கேரட் தங்கம் lost wax முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. மோதிரம் மெருகூட்டப்பட்ட பிறகு மற்றும் இதழ்கள் மற்றும் பட்டாம்பூச்சி இறக்கைகளில் ரோடியம் பூசப்பட்டுள்ளது.

50,907 வைர கற்கள்; 9 மாத தயாரிப்பு - கின்னஸ் சாதனை படைத்த மோதிரம்! விலை என்ன தெரியுமா?
Guinness: 11 நாட்கள், 13,500 கி.மீ - இடைவிடாது பறந்து கின்னஸ் சாதனை படைத்த பறவை - எங்கே?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com