பிறந்த நாள் பார்ட்டி பில் கட்டுவதில் தகராறு - நண்பர்கள் கையால் உயிரிழந்த இளைஞர்

மும்பையின் சிவாஜி நகர் காவல் துறை அளித்த தகவலின் படி, இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாட கடந்த மே 31 ஆம் தேதி வெளியில் சென்றிருக்கிறார். அவர்கள் 10,000 ரூபாய்க்கு சாப்பிட்டுள்ளனர்.
பிறந்த நாள் பார்ட்டி பில் கட்டுவதில் தகராறு - நண்பர்கள் கையால் உயிரிழந்த இளைஞர்
பிறந்த நாள் பார்ட்டி பில் கட்டுவதில் தகராறு - நண்பர்கள் கையால் உயிரிழந்த இளைஞர்canva
Published on

பிறந்த நாள் கொண்டாட்டம் முடிந்து சாப்பிட்ட உணவுக்கு பணம் செலுத்தும் விவகாரத்தில் பிரச்னை ஏற்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார் மும்பையை சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த திங்களன்று மும்பையில், 18 வயது இளைஞர் ஒருவர் தனது நண்பர்களால் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையின் சிவாஜி நகர் காவல் துறை அளித்த தகவலின் படி, இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாட கடந்த மே 31 ஆம் தேதி வெளியில் சென்றிருக்கிறார். அவர்கள் 10,000 ரூபாய்க்கு சாப்பிட்டுள்ளனர்.

அப்போது உணவகத்தில் பில் செலுத்துவது குறித்த சச்சரவு நண்பர்களுக்குள் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிறந்த நாள் கொண்டாடிய அந்த இளைஞரே கட்டணத்தை செலுத்தி தன் நண்பர்களை வழியனுப்பிவைத்திருக்கிறார்.

ஆனால், இந்த சம்பவத்தால் சமாதானம் அடையாத நண்பர்கள் அந்த இளைஞருக்கு மற்றுமொரு பார்ட்டி ஏற்பாடு செய்துள்ளனர். அங்கு அவரை வரவழைத்து கேக் வெட்டி கொண்டாடி முடித்த பின், கூர்மையான பொருட்கள் கொண்டு அவரை தாக்கியுள்ளனர்.

பிறந்த நாள் பார்ட்டி பில் கட்டுவதில் தகராறு - நண்பர்கள் கையால் உயிரிழந்த இளைஞர்
போலீஸ் வாகனத்தில் கைதி கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வைரல் வீடியோ

இதில் அந்த இளைஞர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் ஈடுப்பட்டிருந்த 4 பேரில் இருவர் சிறார்கள். அவர்கள் சம்பவம் நடந்தவுடன் சிறார்கள் போலீஸில் சரணடைந்த நிலையில், கடந்த ஜூன் 2 ஆம் தேதி மற்ற இருவரை குஜராத்தில் கைது செய்தனர்.

சிறார்கள் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற இருவர் மீதும் ஐபிசி 302 வழக்கு பதிவுசெய்யப்பட்டு கைது செய்தனர். இவர்கள் இருவரும் உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறந்த நாள் பார்ட்டி பில் கட்டுவதில் தகராறு - நண்பர்கள் கையால் உயிரிழந்த இளைஞர்
பிரதமர் மோடியை நேரில் சந்தித்தும் பிறந்தநாள் வாழ்த்து கூற மறுத்த புதின் - என்ன காரணம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com