பிரதமர் மோடியை நேரில் சந்தித்தும் பிறந்தநாள் வாழ்த்து கூற மறுத்த புதின் - என்ன காரணம்?

உலக அரசியல் தலைவர்கள் அனைவரும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், ரஷ்ய அதிபரான விளாதிமிர் புதின் மட்டும் பிரதமருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கவில்லை
Modi - Putin
Modi - PutinTwitter
Published on

பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற மறுத்துள்ளார் ரஷ்ய அதிபர் புதின். இதற்கு அவர் கூறிய காரணம் அனைவரையும் சற்று வியப்படைய செய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதனை முன்னிட்டு டெல்லி உணவகத்தில் 56 வகை உணவு விருந்து, நமீபியா நாட்டிலிருந்து இந்தியாவுக்கு 8 சிறுத்தைகள் வருகை போன்ற சிறப்பு நிகழ்வுகள் நடக்கின்றன. உலக அரசியல் தலைவர்கள் அனைவரும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், ரஷ்ய அதிபரான விளாதிமிர் புதின் மட்டும் பிரதமருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கவில்லை

பிரதமர் மோடி இன்று Shanghai Cooperation Organisation (SCO)ல் பங்கேற்கிறார். உலகின் சில முக்கிய தலைவர்களும் இதில் பங்கேற்கின்றனர். அதில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் அடங்குகிறார்.

SCOவுக்காக சென்றுள்ள பிரதமர் மோடி புதினை சந்தித்தார். இந்த சந்திப்பின் போதே பிரதமரின் பிறந்தநாளுக்கு வாழ்த்துகள் குவியத் தொடங்கிய நிலையில், புதின் மட்டும் வாழ்த்து கூற மறுத்துள்ளார்

Modi - Putin
உலகின் பிரபலமான தலைவர்; பிரதமர் மோடி முதலிடம் - பட்டியலில் இருக்கும் மற்ற தலைவர்கள் யார்?

மாறாக அவர், "எனது அன்பு தோழனுக்கு ஆல் தி பெஸ்ட்" என தெரிவித்தார். "மேலும், இந்தியாவிற்கும் எனது வாழ்த்துகள். நாளை, என் நண்பா, தாங்கள் பிறந்த நாள் கொண்டாடுகிறீர்கள் என எனக்கு தெரியும். ரஷ்ய வழக்கத்தின் படி நாங்கள் யாருக்கும் முன்கூட்டியே வாழ்த்துகளை கூறமாட்டோம். அதனால் என்னால் இப்போது அதை செய்யமுடியாது" என தெரிவித்தார்.

Modi - Putin
Modi - PutinTwitter

மோடியின் பிறந்தநாள் குறித்து அவர்களுக்கு தெரியும் என்று கூறியவர், இந்தியா ரஷ்யா இடையே உறவு மெல்ல வலு பெற்று வருவதாகவும் தெரிவித்தார். மோடியின் தலைமையில் இந்தியா இன்னும் வளம்பெறவும் எங்கள் வாழ்த்துகள் என புதின் கூறினார்.

ரஷ்ய அதிபர் புதினுடனான சந்திப்பு குறித்து மோடி கூறுகையில், " அதிபர் புதினுடன் ஒரு அற்புதமான சந்திப்பு நடந்தது. வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் பல துறைகளில் இந்தியா-ரஷ்யா ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதிக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. மற்ற உலகளாவிய பிரச்னைகள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம்" என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

Modi - Putin
பிரதமர் மோடிக்கு பரிசாக அளிக்கப்பட்ட 1,200 பொருட்கள் ஆன்லைன் மூலம் ஏலம் - என்ன காரணம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com