கர்நாடகா செல்கிறீர்களா? இந்த உணவு வகைகளை நிச்சயம் டிரை பண்ணுங்க!

நீங்கள் கர்நாடகா செல்வதாக இருந்தால் நிச்சயம் சாப்பிடவேண்டிய சில உணவு வகைகளை இங்கு தொகுத்துள்ளோம்...
கர்நாடகா செல்கிறீர்களா? இந்த உணவு வகைகளை நிச்சயம் டிரை பண்ணுங்க
கர்நாடகா செல்கிறீர்களா? இந்த உணவு வகைகளை நிச்சயம் டிரை பண்ணுங்கtwitter
Published on

இந்தியாவின் சுற்றுலா முகம் பிரபலமடைய முக்கிய காரணங்களில் ஒன்றாக உணவை சொல்லலாம்.

இந்தியாவின் பல்வேறு கலாச்சாரங்கள் நமக்கு பாரம்பரியமான, வித விதமான உணவு வகைகளை வழங்குகிறது.

இங்குள்ள ஊர்களின் புவியியல் காரணங்களுக்காகவே அங்கு கிடைக்கும் சிறப்பு உணவு வகைகளும் உண்டு. தனது பிரத்தியேகமான உணவு வகைகளுக்காக பெயர் பெற்ற மாநிலம் கர்நாடகா.

நீங்கள் கர்நாடகா செல்வதாக இருந்தால் நிச்சயம் சாப்பிடவேண்டிய சில உணவு வகைகளை இங்கு தொகுத்துள்ளோம்...

கரடண்டு

கர்நாடகாவின் வடக்கு பகுதியில் சமைக்கப்படும் இது ஒரு இனிப்பு வகையாகும். இதனை சாப்பிடக்கூடிய கோந்து (edible gum), பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற டிரை ஃப்ரூட்ஸ் மற்றும் வெல்லம் சேர்த்து தயாரிக்கின்றனர்.

இது பர்பி போன்றோ அல்லது லட்டு போலவோ வடிவமைப்பில் செய்யப்படுகிறது. கர்நாடகாவின் கோகக் பகுதியில் இது மிகவும் பிரபலம்!

ஒப்பட்டு

இதனை தமிழில் போளி என்று அழைக்கின்றனர். மைதா அல்லது கோதுமை மாவுக்குள், தேங்காய் அல்லது பருப்பு பூரணம் வைத்து சப்பாத்தி போல வேக வைத்து சாப்பிடும் இனிப்பு வகையாகும் இது.

தேங்காய் அல்லது பருப்புடன் வெல்லம் சேர்த்து பூரணம் சமைக்கப்படுகிறது. சில இடங்களில் பால்கோவா, டிரை ஃப்ரூட்ஸ் கூட பயன்படுத்தப்படுகிறது. பண்டிகை காலங்களில் இந்த ஸ்வீட் நிச்சயம் இடம்பெற்றிருக்கும். சூடான போலி மேல் வெண்ணெய் அல்லது நெய் சேர்த்து சாப்பிட சுவை கூடும்.

ராகி முத்தே

எளிதாக சொன்னால், ராகி கழி. இது கர்நாடகாவில் ஒரு நேரத்துக்கான மீல். ஓட்டல்களில் கூட கிடைக்கும். கர்நாடகாவின் பிரதானமான பயிர்களில் ஒன்று ராகி.

இதனை கழியாக சமைத்து உடன் சாம்பார் சேர்த்து சாப்பிடுகிறார்கள். இதற்கு கோழி சாறு சூப்பர் காம்பினேஷனாம். இது ஹெல்தி ஆன உணவும் கூட.

கர்நாடகா செல்கிறீர்களா? இந்த உணவு வகைகளை நிச்சயம் டிரை பண்ணுங்க
75-வது சுதந்திர தினவிழா : மூவர்ண நிறத்தில் வாடிக்கையாளர்களை கவர்ந்த உணவு வகைகள் - எங்கே?

நீர் தோசை

மங்களூரு பகுதியில் கிடைக்கும் இது ஒரு வகை தோசையாகும். வழக்கமாக நாம் தயாரிக்கும் தோசை மாவு போல அல்லாமல், இந்த நீர் தோசை மாவில் உளுந்து சேர்க்கப்படுவதில்லை. வெறும் அரிசி மாவை வைத்து தயாரிக்கப்படும் தோசை இது.

இதற்கு புளிப்பும், இனிப்பும், காரமும் கலந்த தக்காளி தொக்கு செம்ம காம்போ!

சித்ராண்ணா

புளி சாதம், லெமன் சாதம், மாங்காய் சாதம் போன்றவை தான் சித்ரா அண்ணம் என்று பெயர்பெற்றுள்ளது. இதில் சேர்க்கப்படும் வேர்கக்லை, கறிவேப்பிலை மற்றும் தாளிப்புக்கு தனி ஃபேன் பேஸ் இருக்கிறது.

பிசிபேலெ பாத்

அரிசி, பருப்பு மற்றும் முந்திரி பிரதானமாக சேர்த்து சமைக்கப்படுகிறது இந்த உணவு வகை. கர்நாடகாவின் பாரம்பரிய உணவான இதற்கு பிரத்தியேகமாக மசாலா தயாரிக்கப்படுகிறது.

இதை தவிர இங்கு கிடைக்கும் கோழி சாறு மற்றும் மைசூரு பாக் ஆகிய உணவுகள் பிரபலம்!

கர்நாடகா செல்கிறீர்களா? இந்த உணவு வகைகளை நிச்சயம் டிரை பண்ணுங்க
மானசா கோபால் : உணவு டெலிவரி செய்ய 4 கண்டங்கள் கடந்து 30,000 கி.மீ பயணித்த பெண் - ஏன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com