சுற்றுலாக்கள் நமது அன்றாட வாழ்க்கையில் இருந்து ஒரு பிரேக் கொடுக்கிறது. மன அமைதி, மாறுபட்ட சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள இவை உதவுகின்றன.
இயற்கை நமக்கு இது போன்ற சமயங்களில் சிறந்த நண்பனாக மாறுகிறது எனலாம். இந்தியாவில் இயற்கை அழகுகள் நிறைந்த, நகரமயமாக்கலில் இருந்து நம்மை கொஞ்சம் விடுபடச் செய்ய சில இடங்களும் உள்ளன.
அதில் ஒன்று தான் இமாச்சலில் இருக்கும் நக்கர். பச்சை பசேல் என்ற காடுகளும், உயரமான சிகரங்களும், இங்குள்ள பேஸ் நதியும், நீங்கள் வாழ்வில் ஒரு முறையாவது அனுபவிக்க வேண்டிய தருணங்களை கொடுக்கும்.
இமாச்சலின் குல்லு மாவட்டத்தில் பேஸ் நதிக்கரையில் அமைந்திருக்கும் இந்த நக்கர், மிகவும் பழமையானது. ஒரு காலத்தில் குல்லு ராஜ்ஜியத்தின் தலைநகராகவும் இருந்தது நக்கர்.
இமயமலையின் அற்புத காட்சிகளை நமக்கு வழங்குகிறது நக்கர் நகரம்.
பைன் மரக்காடுகளும், ஆப்பிள் தோட்டங்களும் இங்கு இருக்கிறது. ஆப்பிள்களுக்கு பிரபலமான இந்த இடத்திற்கு சென்றால் நீங்கள் உள்ளூர் ஆப்பிள்களை சுவைக்கலாம் மற்றும் ஆப்பிள் தயாரிப்புகளை உருவாக்கும் பாரம்பரிய செயல்முறையை ஆராயலாம்.
இந்த நகரம் குல்லு ராஜ்ஜியத்தின் தலைநகராக ஒரு காலத்தில் இருந்ததே? எனில் இந்த நகரத்தில் கோட்டை இருக்கவேண்டுமே?
இமாச்சலின் பாரம்பரிய பாணியில் கட்டப்பட்ட கோட்டை வரலாற்றின் சான்றாக விளங்குகிறது. தற்போது இது பாரம்பரிய விடுதியாக செயல்படுகிறது.
இதை தவிர இங்கு நிக்கோலஸ் ரோரிச் ஆர்ட் கேலரி இருக்கிறது. நக்கர் சென்றால் இங்கு நீங்கள் நிச்சயம் செல்ல வேண்டும். இது நிக்கோலஸ் ரோரிச் என்ற பிரபல ரஷ்ய ஓவியருக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த ஓவியர் இந்த நகரத்தில் தான் மரணித்தார்.
சாகச விரும்பிகளுக்கு டிரெக்கிங் செய்ய வழிகளை வழங்குகிறது நக்கர். இங்கு சந்திரகேணி பாஸுக்கு டிரெக்கிங்க் செல்லலாம். அதை தவிர இங்குள்ள மலனா கிராமத்திற்கும் சென்று வரலாம். இது அந்த நகரத்தின் கலாச்சாரத்தை எடுத்துரைக்கிறது
இந்த நகரத்தில் பல கோவில்களும் உள்ளன. இங்குள்ள கௌரி சங்கர் கோவில் மற்றும் ஜகத்திபட் கோவில் பலரால் பார்வையிடப்படும் ஆன்மீக தலங்களாகும்.
இங்குள்ள நதிக்கரையில் அமர்ந்து யோகாசனம் செய்பவர்களையும், தியானம் செய்கிறவர்களையும் நாம் காணலாம். வழக்கமாக சென்று வரும் குல்லு - மணாலி போன்ற இடங்களில் இருந்து சற்றே வித்தியாசமான அனுபவத்தை வழங்குகிறது நக்கர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust