National Flag
National FlagTwitter

75வது சுதந்திர தினம்: தேசிய கொடியில் மலர்கள் வைக்கலாமா? - மத்திய அரசு கூறிய வழிமுறைகள்?

பொதுவாக பொது இடங்களிலும் கல்வி நிலையங்களிலும் மட்டுமே தேசியக்கொடி ஏற்றப்படும். அப்போது தேசியக்கொடிக்கு உரிய மரியாதைக் கொடுக்கப்படும். ஆனால் இப்போது எல்லார் வீடுகளிலும் ஏற்ற மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது.
Published on

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகள் தோறும் தேசியக் கொடி ஏற்ற மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அத்துடன் சமுக வலைத்தளங்களில் தேசியக் கொடியை டிபியாக வைக்க வேண்டும் என்றும் பிரதமர் கூறியிருந்தார்.

பொதுவாக பொது இடங்களிலும் கல்வி நிலையங்களிலும் மட்டுமே தேசியக்கொடி ஏற்றப்படும். அப்போது தேசியக்கொடிக்கு உரிய மரியாதைக் கொடுக்கப்படும். ஆனால் இப்போது எல்லார் வீடுகளிலும் ஏற்ற மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது.

இந்நிலையில் தேசியக்கொடி கொடியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது.

மத்திய அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தேசியக் கொடியை வீடுகளின் மேற்புறத்தில் பறக்க விட வேண்டும். சாய்வாக தரையை நோக்கி பறக்க விடக் கூடாது.

நன்றாஜ இருக்கும் தேசியக் கொடியை பறக்கவிட வேண்டும். சேதமடைந்த அல்லது அழுக்கடைந்த தேசியக் கொடியை பறக்கவிடக் கூடாது.

மற்ற கொடிகளுடன் சேர்ந்து பறக்கும் போது தேசியக்கொடி தாழ்வாக பறக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தேசியக்கொடியை மேசை விரிப்பானக பயன்படுத்தக் கூடாது. ஜன்னல்களில் திரைச்சீலையாகவோ தலையணையாகவோ தேசியக்கொடியை பயன்படுத்தக் கூடாது.

National Flag
பாரதி முதல் தாகூர் வரை : கவிதைகளால் போர்கொடி தூக்கிய சுதந்திர போராட்ட வீரர்கள்

தேசியக்கொடி மீது மலர்கள் உட்பட எந்த பொருளையும் வைக்கக் கூடாது. மலர்களை பயன்படுத்தி அலங்கரிக்கவோ மலர்களைத் தூவவோ கூடாது. எனினும், கொடியேற்றும் போது அதன் உள்ளே மலர்கள் வைத்துக்கட்டலாம்.

தேசியக்கொடியை தலைகீழாக கட்டாமல் இருப்பதை கவனித்துக்கொள்ள வேண்டும்.

வாகனங்களின் பக்கவாட்டிலோ அல்லது முன்புறத்திலோ தேசியக்கொடியை கட்டக்கூடாது.

National Flag
எதிர்கால இந்தியா : பாதுகாப்பிற்காகப் போராடும் சுற்றுச்சூழல் போராளிகள்

பயன்படுத்தப்பட்ட தேசியக்கொடியை குப்பையில் போடவோ, பிற பொருட்களைக் கட்டுவதற்கு கயிறாகவோ பயன்படுத்தக் கூடாது.

தேசியக்கொடியை முகக்கவசமாக பயன்படுத்தக்கூடாது.

தேசியக்கொடியை சட்டையின் இடது பக்கத்தில் மட்டுமே குத்திக்கொள்ள வேண்டும், வலது பக்கம் குத்தக்கூடாது.

பயன்படுத்திய தேசியக்கொடியை கசக்கவோ சுருட்டி வைக்கவோ கூடாது. அவற்றை முறையாக மடித்து வைக்க வேண்டும்.

National Flag
75-வது சுதந்திர தினவிழா : மூவர்ண நிறத்தில் வாடிக்கையாளர்களை கவர்ந்த உணவு வகைகள் - எங்கே?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com