பிரதமர் மோடி பயன்படுத்திய கேமராவின் லென்ஸ் மூடப்பட்டு இருந்ததா? - உண்மை என்ன? |Fact Check

பிரதமர் மோடி பயன்படுத்திய கேமராவில் உள்ள லென்ஸ் கவர் மூடப்பட்டிருப்பதை போன்ற புகைப்படம் இணையதளத்தில் வைரலானதை அடுத்து பாஜக அதற்கு விளக்கமளித்துள்ளது.
PM Modi
PM ModiTwitter
Published on

பிரதமர் மோடியின் புகைப்படத்தைத் தவறாக சித்தரித்து கேலி செய்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்தநாளில் நமீபியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 8 சிறுத்தைகளை மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் விடுவித்தார்.

அப்போது பிரதமர் மோடி அதனை கேமராவில் புகைப்படம் எடுத்தார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதற்கிடையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி ஜவஹர் சிர்கார் மோடியின் புகைப்படத்தைத் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு "எல்லா உண்மைகளையும் மூடி வைப்பது இருக்கட்டும்... ஆனால் புகைப்படம் எடுக்கும் போது கேமரா லென்ஸ் கவரை மூடி வைத்திருப்பது தான் உங்களின் தொலைநோக்கு பார்வையா?" எனக் கிண்டலாகப் பதிவிட்டிருந்தார்.

ஜவஹர் சிர்கார் வெளியிட்ட மோடியின் புகைப்படத்தில் கேமராவின் லென்ஸ் கவர் மூடப்பட்டிருந்தது.

இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, அதன் உண்மை என்னவென்று ஆராய்ந்து பார்த்த போது, அவை சித்தரிக்கப்பட்டவை எனத் தெரிய வந்துள்ளது.

PM Modi
பிரதமர் மோடிக்கு பரிசாக அளிக்கப்பட்ட 1,200 பொருட்கள் ஆன்லைன் மூலம் ஏலம் - என்ன காரணம்?

பிரதமர் மோடி பயன்படுத்தியது நிக்கான் கேமரா. ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சிர்கார் வெளியிட்ட புகைப்படத்தில் மோடி வைத்துள்ள கேமராவின் லென்ஸ், கேனான் கேமராவின் கவர் கொண்டு மூடப்பட்டிருந்தது.

பாஜக இந்த வித்தியாசத்தை உடனடியாக கண்டறிந்தது. பாஜக மூத்த தலைவர் சுகந்தா மஜும்தார், படத்தில் கேனான் கவருடன் நிகான் கேமரா இருப்பதை சுட்டிக்காட்டினார்.

இது பற்றி பாஜக மூத்த தலைவர் சுகந்திரா மஜும்தார் வெளியிட்டுள்ள பதிவில்

”இது போலி பிரச்சாரத்தைப் பரப்பும் மோசமான முயற்சி. மம்தா அவர்களே, உங்கள் கட்சியில் குறைந்தபட்ச பொது அறிவு கொண்டவர்களையாவது எம்.பி ஆக நியமியுங்கள்” என்று விமர்சித்துள்ளார். இதைத் தொடர்ந்து தனது டிவிட்டர் பதிவை ஜவஹர் சிர்கார் நீக்கிவிட்டார்.

PM Modi
உலகின் பிரபலமான தலைவர்; பிரதமர் மோடி முதலிடம் - பட்டியலில் இருக்கும் மற்ற தலைவர்கள் யார்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com