யாரெல்லாம் Toll Gate -ல் கட்டணம் செலுத்த தேவையில்லை? NHAI விதிகள் என்ன?

டோல் பிளாசாக்களில் நிற்கும் வாகனங்களின் வரிசை 100 மீட்டருக்கும் அதிகமாக இருந்தால், வரிசை 100 மீட்டர் வரம்பிற்குள் வரும் வரை டோல் பணியாளர்கள் கார்களை இலவசமாகக் கடந்து செல்ல அனுமதிக்க வேண்டும்.
No need to pay toll tax if you're under these five categories
No need to pay toll tax if you're under these five categoriescanva
Published on

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) டோல் பிளாசாக்களில் போக்குவரத்தை சீராகச் செல்வதை உறுதிசெய்ய முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், சில வாகன ஓட்டிகள் தாங்கள் இலவசமாகக் கடந்து செல்வதற்குத் தகுதியுடையவர்கள் என்று கருதுகின்றனர்.

எதேனும் ஒரு ஐடியை காண்பித்து சுங்கக் கட்டணம் செலுத்தாமல் டோலை கடந்து செல்கின்றனர். உதாரணத்திற்கு அரசு அதிகாரிகள் ஐடியை காண்பித்து சுங்கக் கட்டணம் செலுத்தாமல் செல்லலாமா?

NHAI இன் வழிகாட்டுதலின் கீழ், ஐந்து வகை வாகனங்கள் மட்டுமே சுங்கக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன. அந்த வகை வாகனங்கள் குறித்து இங்கே தெரிந்துக்கொள்ளலாம்.

டோல் வரி செலுத்துவதற்கு விலக்கு அளிக்கப்பட்ட வாகன வகைகள்

  • அவசர சேவைகள்

  • பாதுகாப்பு சேவைகள்

  • விஐபி வாகனங்கள்

  • பொது போக்குவரத்து

  • இரு சக்கர வாகனங்கள்

NHAI வழிகாட்டுதல்களின்படி, அவசரகால வாகனங்களான ஆம்புலன்ஸ்கள், தீயணைப்புப் படைகள் மற்றும் போலீஸ் வாகனங்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இராணுவம், கடற்படை அல்லது விமானப்படையின் கீழ் சேவையில் இருக்கும் பாதுகாப்பு வாகனங்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி, பிரதமர், உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள் அரசுப் பயணத்தின் போது செல்லும் விஐபி வாகனங்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அரசு சார்பில் இயங்கும் பொது போக்குவரத்து வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு சுங்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

No need to pay toll tax if you're under these five categories
Indian Railways: ரயிலில் பயணிக்கும் முன் பயணிகள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விதிகள்

சிவிலியன் கார்களுக்கு டோல் வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படவில்லை என்றாலும், புதுப்பிக்கப்பட்ட NHAI வழிகாட்டுதல்களின்படி வாகனங்கள் 100 மீட்டருக்கு மேல் வரிசையில் நிற்கக்கூடாது.

மேலும் டோல் பிளாசாக்களில் நிற்கும் வாகனங்களின் வரிசை 100 மீட்டருக்கும் அதிகமாக இருந்தால், வரிசை 100 மீட்டர் வரம்பிற்குள் வரும் வரை டோல் பணியாளர்கள் கார்களை இலவசமாகக் கடந்து செல்ல அனுமதிக்க வேண்டும்,

100 மீட்டர் வரிசை நுழைவாயிலை அடையாளம் காண, ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் மஞ்சள் கோடு மார்க்கர் உள்ளது. டோல் பிளாசா ஆபரேட்டர்களிடையே பொறுப்புணர்வை மேம்படுத்துவதற்காக இது செய்யப்பட்டுள்ளது.

No need to pay toll tax if you're under these five categories
Bank locker rules : வங்கி லாக்கரில் எதையெல்லாம் வைக்கலாம்? புதிய விதிகள் என்னென்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com